கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்

சோழ, பாண்டிய கட்டிடக்கலை, 4 யுக தலவிருட்சம்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Temple that does not open the door! Darshan through the glass - Chola, Pandyan architecture, 4th century Talavritsam in Tamil

கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம் | Temple that does not open the door! Darshan through the glass

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல்.

கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம்!


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புனவாசல். இங்கு பிரசித்தி பெற்ற பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இறைவனது மூன்றாவது மிகப்பெரிய திருமேனி உள்ள கோவில் இதுதான். 'மூன்றும் ஒரு சுற்று. முப்பதும் ஒரு சுற்று' என்ற பழமொழிக்கு ஏற்ப இங்கு ஆவுடையார் பீடம் பெரியதாகக் காணப்படுகிறது. அதாவது. சுவாமியை சுற்றி ஆடை அணிவிப்பதற்கு 30 முழம் ஆடை தேவைப்படுகிறது.

சூரியன் இருக்கவேண்டிய இடத்தில் சந்திரனும், சந்திரன் இருக்க வேண்டிய இடத்தில் சூரியனும் இருப்பது இந்தக் கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு.

ஒரே இடத்தில் 5 விநாயகர் இருப்பதும், சதுர்முகலிங்கம், யோக நிலையில் தட்சிணாமூர்த்தி, தனி சந்நிதியில் பிரம்மா மற்றும் விஷ்ணு அமைந்து இருப்பதும், அம்பிகை குடவரை காளியாக எழுந்தருளி இருப்பதும், தென்னகத்தில் கல் கார மண்டபத்தில் இரண்டு பைரவர் சன்னதி இருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகள்.


சோழ, பாண்டிய கட்டிடக்கலை

இரண்டாம் சுந்தர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் நெருங்கிய வாணிபத் தொடர்பு இருந்தது. அதனால், சோழர், பாண்டியர் இணைந்த கட்டிடக்கலை அமைப்புடன் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இதுபோன்ற அமைப்பில் தமிழகத்தில் வேறு எங்கும் கோவில்கள் இல்லை. 

பாண்டிய நாட்டில் 14 சிவதலங்கள் உள்ளன. இவற்றில் இரண்டாவதாக சம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர். அருணகிரிநாதரால் பாடப்பெற்றதுதான் பாண்டிய நாட்டின் பழம்பதி என்னும் இந்தத் திருத்தலம். இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 14 தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காசியை விட இந்த ஊருக்கு புண்ணியம் அதிகம் என்பதால் விருத்தகாசி என்ற பெயரும், ஞானம் கைகூடும் என்பதால் கைவல்ய ஞானபுரம் என்ற பெயரும், வேதங்கள் வழிபட்டதால் வேதபுரம் என்ற பெயரும் மற்றும் பழம்பதி. புன்னைமாநகர், வச்சிரவனம், மகிழ்வனம், குருந்தவனம் என்ற பெயர்களும் இந்த திருப்புனவாயில் திருத்தலத்திற்கு உண்டு.

இந்த கோவில் குடவரைக் காளியை வழிபடுவதால் குழந்தைப் பேறு கிடைக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். தீராத நோய்கள் நீங்கும் என்பதல் இந்த காளியின் பெயரையே இந்த ஊர் மக்கள் பெரும்பாலும் வைத்துக் கொள்கிறார்கள்.


கண்ணாடி வழியே தரிசனம்:

உத்தியோகத்தில் மாறுதல் வேண்டுபவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். குடவரைக் காளி அருவுருவமாக அமைந்து உள்ளதால் கண்ணாடி வழியாகவே தரிசிக்க முடியும்.

மேலும், இந்த கோவிலின் கதவு திறக்கப்படுவதில்லை. அதனால் இந்த காளி சக்தி வாய்ந்தவளாக கருதப்படுகிறாள்.

பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவ தலங்களான, மதுரை, திருப்புனவாயில், திருக்குற்றாலம், ஆப்பனூர், திருவேடகம், திருநெல்வேலி, ராமேசுவரம், திருவாடானை, திருப்பரங்குன்றம், திருச்சுழி, திருப்பத்தூர், காளையார்கோவில், பிரான்மலை, திருப்புவனம் ஆகிய 14 கோவில்களின் சிவலிங்கங்களும் இத்தலத்தில் உள்ளதாக ஐதீகம்.


4 யுக தலவிருட்சம்

பொதுவாக ஒரு கோவிலில் தலவிருட்சமாக ஏதேனும் ஒரு மரம்தான் இருக்கும். ஆனால் திருப்புனவாசல் பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவிலில் 4 யுகத்திற்கும் சேர்த்து 4 தல விருட்சம் உள்ளது.

கிருத யுகத்திற்கு சதுரக்கல்லி, திரேதா யுகத்திற்கு குருந்த மரம், துவார யுகத்திற்கு மகிழமரம், கலி யுகத்திற்கு புன்னை மரம். இந்த 4 புனித மரங்களையும் வலம் வந்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த தலத்தை தரிசித்தால் மேற்படி கூறிய 14 தலங்களுக்கும் சென்று தரிசித்த புண்ணியம் உண்டு என்பது வரலாறு. இங்கு பக்ரைன்நாயகி அம்மன் கோவிலும் உள்ளது. இங்கு வைகாசி விசாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள் : கதவு திறக்காத கோவில்! கண்ணாடி வழியே தரிசனம் - சோழ, பாண்டிய கட்டிடக்கலை, 4 யுக தலவிருட்சம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Temple that does not open the door! Darshan through the glass - Chola, Pandyan architecture, 4th century Talavritsam in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்