விவாகரத்தை தடுக்கும் கோயில்!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Temple to prevent divorce! - Tips in Tamil

விவாகரத்தை தடுக்கும் கோயில்! | Temple to prevent divorce!

திருவையாற்றில் இருந்து வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது பெரும் புலியூர்.

விவாகரத்தை தடுக்கும் கோயில்!

 

திருவையாற்றில் இருந்து வடக்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது பெரும் புலியூர். மனவேற்றுமையால் பிரிந்து வாழும் தம்பதிகள் இத்தலத்திற்குச் சென்று, இங்குள்ள உமா சமேதமூர்த்தியை மனமுருகி வேண்டினால் தம்பதிகள் விரைவில் ஒன்று சேர்ந்து வாழ வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தின் முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. வண்ணமயமாய் ஜொலிக்கும் ராஜகோபுரத்தைத் தாண்டினால் விசாலமான பிரகாரம் காணப்படுகிறது. பலி பீடம், நந்தி மண்டபம், கொடிமரம் இவைகளைத் தாண்டியதும் அலங்கார மண்டபமும், அதை அடுத்து மகாமண்டபமும் இருக்கின்றன.

 

மகா மண்டபத்தின் நடுவே கருவறையின் எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழை வாயிலின் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

 

வடக்குப் பிரகாரத்தில் இறைவி ஸ்ரீ. சௌந்திர நாயகியின் தனிச் சந்நிதி உள்ளது. இந்தச் சன்னிதியின் முன் அழகிய மண்டபமும், அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகளின் திருமேனிகளும் உள்ளன.

 

கருவறையில் இறைவி நான்கு திருக்கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். இந்த அன்னை இங்கு சதுர பீடத்தில் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு!

 

இங்கு மூலவராக நின்று அருள்புரியும் அன்னையும் இவளே. துர்க்கையாய் நின்று மங்கையரைக் காக்கும் அளப்பரிய சக்தி கொண்டவளும் இவளே! எனவே இந்த ஆலயத்தில் துர்க்கை தனியாகப் பிரதிஷ்டை செய்யப்படவில்லை!

 

இந்த ஆலயத்தில் இறைவனின் விமான அடித்தளம் தாமரைப் பூ வடிவில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.

 

இங்கு இறைவன் சிவபெருமான் வியக்ரபுரீஸ்வரராக கோவில் கொண்டுள்ளார். இறைவிஸ்ரீ சௌந்திர நாயகி கருணைக் கடலாகக் காட்சி தருகின்றாள். ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் உமா சமேத மூர்த்தியின் திருமேனிகள் இருக்கக் காணலாம்.

 

மன வேற்றுமையால் பிரிந்து வாழும் தம்பதிகள் இவ்வால யத்திற்குத் தனித்தனியே வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர். இவர்களது பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. தம்பதிகள் இணைகின்றனர். இணைந்தவுடன் மறுபடியும் இங்கே வந்து உமா சமேத மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து தங்களது நன்றிக்கடனைச் செலுத்துகின்றனர். அது மட்டுமல்ல, கோர்ட் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட இக்கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டதன் பலனாகத் தடுக்கப்பட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றன.

 

இவ்வாலயம் காலை ஏழு மணி முதல் பத்து மணி வரையிலும், மீண்டும் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : விவாகரத்தை தடுக்கும் கோயில்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Temple to prevent divorce! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்