பைரவரே மூலவராக உள்ள கோயில்கள்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples where Bhairava is the source - Bhairava - Spiritual notes in Tamil

பைரவரே மூலவராக உள்ள கோயில்கள் | Temples where Bhairava is the source

மூலவராக கால பைரவருக்கான தனிக்கோயில். கருவறையில் 4 அடி உயரமுள்ள கால பைரவர் உள்ளார்.

பைரவரே மூலவராக உள்ள கோயில்கள்: 


ஓமேட்டுப்பட்டி : 

மூலவராக கால பைரவருக்கான தனிக்கோயில். கருவறையில் 4 அடி உயரமுள்ள கால பைரவர் உள்ளார். 3 நிலைகளுடன் ராசகோபுரம். பிராகாரத்தில் விநாயகர், முருகன், சிவசக்தி அமைந்துள்ளனர். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவரை வழிபட கஷ்டம் நீங்கி வளம் உண்டாகும். விருதுநகர் மாவட்டம். சாத்தூர் / ஏழாயிரம்பண்ணை சாலையில் கிமீ.


தகட்டூர்: 

பைரவர் மூலவராக உள்ள கோயில் -பிராகாரத்தில் விநாயகர், முருகன், சிவன், அம்பாள் சந்நிதிகள் உள்ளன. வேதாரண்யம் / திருத்துறைப்பூண்டி சாலையில் 17 கிமீ.ல் வாய்மேடு இறங்கி சிறிது தூரம் செல்லவும்.


க்ஷேத்திரபாலபுரம்: 

6 அடி உயரமுள்ள பைரவருக்கான தனிக்கோயில், 5 தீர்த்தங்கள். தினசரி உச்சிக்கால பூசை மட்டும் நடைபெறுகிறது. கும்பகோணம் / மயிலாடு துறை சாலையில் கோமல் அருகில் உள்ளது. குத்தாலம் வந்தும் வரலாம்.


வைரவன் கோயில் (ஈச்சங்குடி): 

தெற்கு நோக்கிய பைரவர் கோயில், எதிரில் மயானம் உள்ளது. திருவையாறு / கும்பகோணம் பாதையில் 3 கி.மீ.


அழிபடைதாங்கி (மோட்டூர்): 

இங்குள்ள பைரவருக்கான தனிக்கோயிலில், இருக்கும் மண்ணை எவ்வளவு எடுத்தாலும் அவ்வளவு நெல்லைக் கொட்டி விட்டு, எடுத்துச்சென்று, நிலத்தில் தூவ கட்டிட வேலை தடையின்றி நடந்துவிடும். காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ், ஐயங்கார்குளம் தாண்டி அழிபடைதாங்கி உள்ளது.


மதுரை: 

கீழஆவணி மூலவீதியில் பைரவருக்கான தனிக்கோயில்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவரே மூலவராக உள்ள கோயில்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples where Bhairava is the source - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]