அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள்

சீர்காழி, ஆறகழூர், திருவாய்மூர், குற்றாலம்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples with Ashta (8) Bhairavas - Sirkazhi, Arakalur, Thiruvaimoor, Courtalam in Tamil

அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள் | Temples with Ashta (8) Bhairavas

பிரம்ம புரீசுவரர் கோயிலில் 3-ம் பிரகாரத்தில் அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது.

அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள்


சீர்காழி : 

பிரம்ம புரீசுவரர் கோயிலில் 3-ம் பிரகாரத்தில் அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது. வெள்ளிக் கிழமை மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இச்சந்நிதி திறந்திருக்கும்.

கோயில் கருவறை விமானத்தில் சட்டைநாதர் (பைரவர்) காட்சி அளிக்கிறார். படிக்கட்டுகளில் ஏறி இவரை தினசரி வணங்கலாம். மயிலாடுதுறை / சிதம்பரம் சாலையில் உள்ளது.

ஆறகழூர் : 

காமநாதீஸ்வரர் கோயிலில் வெவ்வேறு இடங்களில் 8 பைரவர்கள் உள்ளனர். (சேலம்) ஆத்தூரிலிருந்து 20 கிமீ. சின்ன சேலத்துக்கு 4 கிமீ.

திருவாய்மூர் : 

சிவன் கோயிலில் அஷ்ட பைரவர்கள் உள்ளனர். திருவாரூர் வழி திருக்குவளை / வேதாரண்யம் பஸ்ஸில் செல்லலாம்.

குற்றாலம் : 

சித்திர சபையில் உள்ள வடக்குப் பிராகாரச் சுவரில், தெற்கு நோக்கி அஷ்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளன. மேற்கு நோக்கிய மகா பைரவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. மதுரை, திருநெல்வேலி, ராஜபாளையத்திலிருந்து வரலாம். தென்காசி யிலிருந்து 6 கி.மீ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : அஷ்ட (8) பைரவர்கள் உள்ள கோயில்கள் - சீர்காழி, ஆறகழூர், திருவாய்மூர், குற்றாலம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with Ashta (8) Bhairavas - Sirkazhi, Arakalur, Thiruvaimoor, Courtalam in Tamil [ spirituality ]