8 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Temples with Bhairava with 8 arms - Bhairava - Spiritual notes in Tamil

8 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் | Temples with Bhairava with 8 arms

நெல்லைப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் ஆயுதங்கள் தாங்கி, 8 கரங்களுடன் பைரவர் உள்ளார்.

8 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள்


திருநெல்வேலி : 

நெல்லைப்பர் - காந்திமதி அம்மன் கோயிலில் ஆயுதங்கள் தாங்கி, 8 கரங்களுடன் பைரவர் உள்ளார். மதுரை வழி கோயில்பட்டி / திருநெல் வேலி வரலாம்.


ராமகிரி : 

வாலீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு 8 கரங்கள், திருத்தணி, திருவள்ளூர், சென்னை- வழி நாகலாபுரம் வந்து ராமகிரி கூட்டுச்சாலையில் இறங்கி 1 கி.மீ. நடக்கவும்.


தஞ்சாவூர்: 

பெரிய (பிரகதீஸ்வரர்) கோயிலில், 8 கரங்களுடன் ஆயுதங்கள் தாங்கிய பைரவர் உள்ளார். கும்பகோணம். புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சியிலிருந்து வரலாம்.


ஆறகழூர் : 

காமநாதீஸ்வரர் கோயில், சேலம் மாவட்டம், ஆத்தூரிலிருந்து 20 கி.மீ. சின்ன சேலத்துக்கு 4கி.மீ.


கங்கைகொண்ட சோழபுரம்: 

சிவன் கோயில், கருவறை வடக்குச் சுவரில் கால பைரவர். பெரம்பலுர் மாவட்டம், உடையார் பாளைத்திலிருந்து 16 கிமீ.


பெரிச்சியூர்: 

(பெரிச்சி கோயில்) சுகந்தவனேஷ்வரர் கோயில். இங்குள்ள பைரவர் நவ பாஷாணக் கல்லால் ஆனவர். இவருக்கு அணிவிக்கப்பட்ட வடைகளின் நிறம் மாறுபடுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர்/ கண்ட்ரமாணிக்கம் 10 கி.மீ. வந்து அப்பால் 3 கிமீ.


திருவண்ணாமலை : 

அண்ணாமலையார் கோயில், கிழக்குக் கோபுரம் கடந்தவுடன் நடக்கின்ற கோலத்துடன் 7 அடி உயரமுள்ள பைரவர் சந்நிதி, விழுப்புரம் அருகில்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 8 கரங்களுடன் பைரவர் உள்ள கோயில்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Temples with Bhairava with 8 arms - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]