அம்பாளின் பத்து விரல்களில் இருந்து அவதாரம் செய்த பத்து தேவியரும் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் பராக்ரமத்தை குறிக்கும் பத்து அம்சங்களாகும்.
பத்து தேவியர்
அம்பாளின் பத்து
விரல்களில் இருந்து அவதாரம் செய்த பத்து தேவியரும் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின்
பராக்ரமத்தை குறிக்கும் பத்து
அம்சங்களாகும்.
1. காளி
......... ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ( ஸம்வர்க வித்யா)
2. தாரா .......... ஸ்ரீ
ராமாவதாரம் (அக்ஷர வித்யா )
3. சுந்தரி ......... ஸ்ரீ கல்கி அவதாரம்
(வைச்வானர வித்யா)
4. புவனேஸ்வரி ......... ஸ்ரீ வராஹ அவதாரம் (
பரோவரீயசி வித்யா)
5. பைரவி ...... ஸ்ரீ நரசிம்மாவதாரம் (சாண்டில்ய வித்யா)
6. சின்னமஸ்தா ........ ஸ்ரீ பரசுராம அவதாரம்
(ஜ்யோதிர் வித்யை)
7. தூமாவதி ........ ஸ்ரீ வாமன அவதாரம் (பூமா வித்யை)
8. பகளாமுகி ........
ஸ்ரீ கூர்மாவதாரம் (இந்திர யோனி வித்யா)
9. மாதங்கி ...... ஸ்ரீ பலராம அவதாரம் (உத்கீத
வித்யை)
10. கமலாத்மிகா ....... ஸ்ரீ மத்ஸ்ய அவதாரம் (மது
வித்யா)
ஆகிய பத்து பெரும்
சக்திகளுடன் இணைந்து பண்டாசுரனை வதம் செய்ததாக
புராணம்.
ஸவ்ய-அபஸவ்ய மார்க்கஸ்தா
என்று சஹஸ்ரநாமத்தில் அம்பிகைக்கு ஒரு நாமம். இதன் பொருளைப் பார்க்கலாம். ஸவ்யம்
-வலது; அபஸவ்யம் - இடது.
மார்கஸ்தா - எந்த மார்க்கத்திலும் வழிபடப்படுபவள். தன்னை வழிபடுபவர்களது வலது-இடது
புறங்களில் இருந்து வழி நடத்துபவள் என்று பொருள் கொள்ளலாம். வேதவழியில் செய்யும்
வழிப்பாட்டிற்கு ஸவ்யம் என்று சொல்வது வழக்கம். அஸவ்யம் என்பது தாந்திரிக வழிபாடு.
ஆக, இந்த இரு முறைகளில்
வழிபட்டாலும் அன்னையை அடையலாம் என்றும் பொருள் கொள்ளலாம். இன்னும் சொன்னால்
பண்டிதர்கள் செய்யும் வழிபாடு ஸவ்யம், என்னைப் போல பாமரர்கள் செய்யும் வழிபாடு அஸவ்யம். ஆக
எப்படி வழிபட்டாலும் அருளுபவள் அம்பிகை.
இங்கு வழிபாடுதான் முக்கியமாக கொள்ள வேண்டியது.
எந்த முறையில் வழிபாடு என்பது முக்கியமல்ல. பாஸ்கர ராயர் என்று ஒரு மஹான், மராட்டிய தேசத்தவர், ஆனால் காவிரிக்கரையில்
வாழ்ந்தவர். [இப்போதும் பாஸ்கர ராய புரம் என்ற ஊர் மயிலாடுதுறைக்கு அருகில்
இருக்கிறது] பெரிய சக்தி தாசர். அவர் சஹஸ்ர நாமாவுக்கு பாஷ்யம் எழுதுகையில்
அம்பிகையே கிளியாக வந்து அவர் தோளில் அமர்ந்து கேட்டு, சரி பார்த்ததாகச்
சொல்வர். இவர் செய்த வழிபாடு ஸவ்ய-மார்க்கம் ஆனால் காளிதாசன் அம்பிகையை வழிபட்ட
முறையோ அபஸவ்ய மார்க்கத்தில் என்பார்கள். ஆக, எவ்வழியில் சென்றாலும் அன்னையின் அருளுண்டு.
லலிதா சஹஸ்ர நாமங்களை
சற்றே உற்று கவனித்தவர்களுக்கு பின்வரும் செய்தி தெரிந்திருக்கும். சஹஸ்ர நாமம்
ஆரம்பிக்கையில் அன்னையின் தோற்றம், பதவி, பண்டாசுர வதம், குண்டலினி சக்தி பற்றிச் சொல்லி, பிறகு தேவியின் நிர்குண வர்ணனை
வரும். ஆனால்,
இந்த நிர்குண வர்ணனை
வருகிற போதே ஒரு நாமம், நீல சிகுரா என்று. அப்படின்னா என்ன?. கருமையான கூந்தலை
உடையவள் என்று அர்த்தம். அன்னையின் முன்பு சஹஸ்ரநாமத்தை அரங்கேற்றும் சமயத்தில்
வசிநீ-வாக் தேவதைகள் நிர்குணத்தை போற்றுகையில் அம்பிகையை பார்த்த போது அவளது
கருங்கூந்தலில் தமது மனதைப் பறிகொடுத்து சகுணத்தைப் போற்றும்படியாக நீல-சிகுரா
என்றனராம்.💐🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பத்து தேவியர் - குறிப்புகள் [ ] | Amman: History : Ten goddesses - Tips in Tamil [ ]