தனாகர்ஷண யந்திர மலை!

பெருமாள்

[ பெருமாள் ]

Thanakarshana Yantra Hill! - Perumal in Tamil

தனாகர்ஷண யந்திர மலை! | Thanakarshana Yantra Hill!

ஏழு மலைகளின் மீது எழிலாட்சி புரிந்து வரும் திருப்பதி வெங்கடாசலபதி அருள்புரியும் அற்புதத் தலம்.

தனாகர்ஷண யந்திர மலை!

 

ஏழு மலைகளின் மீது எழிலாட்சி புரிந்து வரும் திருப்பதி வெங்கடாசலபதி அருள்புரியும் அற்புதத் தலம். லட்சக்கணக்கான பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தக் காரணமாக இருக்கும் தனாகர்ஷண யந்திரம் பொருத்தப்பட்ட திருத்தலம் இது.

 

மலை உருவாய் திருமால் இருப்பதால் ஏழுமலை என தமிழிலும், ஆதிசேஷன் வடிவில் இம்மலை இருப்பதால் வடமொழியில் சேஷரூபம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருமால் மலை வடிவாய் இருப்பதால் இதில் பாதம்படுவது தவறு எனக் கருதிய மகான்களும் உண்டு. ராமானுஜர் போன்ற பெரியோர்கள் திருமலையில் தங்கள் பாதம் படாதபடி முழங்காலை ஊன்றியே நகர்ந்து மேலே சென்று வணங்கியிருக்கிறார்கள்.

 

தனாகர்ஷண யந்திரம் பொருத்தப்பட்ட திருப்பதி மலையில் கால் பதித்தாலே வறுமை நீங்கி நல்வாழ்வு பக்தர்களுக்கு நேரும் என்பது தன்னம்பிக்கையாக இருந்து வருகிறது!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : தனாகர்ஷண யந்திர மலை! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Thanakarshana Yantra Hill! - Perumal in Tamil [ Perumal ]