அட்டகாசமான தஞ்சாவூர் அடை தயார். தஞ்சாவூர் அவியலுடன் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.
தஞ்சாவூர் அடை
ஊரும் உணவும் தஞ்சாவூர் ஸ்பெஷல்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
பச்சை அரிசி - 1/2 கப்
இட்லி அரிசி - 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 8
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 1 கப்
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை
எண்ணெய்
உப்பு
1. ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு
மூன்றையும் தண்ணீரில் எட்டு மணி
நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்
2. மற்றொரு பாத்திரத்தில் பச்சை அரிசி மற்றும் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீரில்
எட்டு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்
3. மற்றொரு பாத்திரத்தில்
காய்ந்த சிவப்பு மிளகாயை ஊற வைத்துக்கொள்ளவும் .காரத்திற்கு ஏற்ப மிளகாயை சேர்த்து கொள்ளவும்
4. நன்கு ஊறிய அரிசி, பருப்பு, மிளகாய் ஆகிவற்றை சேர்த்து மாவாக
அரைத்துக்கொள்ளவும்
5. பிறகு ஒரு கடாயில்
எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய
சிறிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், ஆகிவற்றை நன்கு
வறுக்கவும்
6. பின்பு வருத்தவற்றை மாவில் சேர்த்து கலக்கவும்
தயாரான மாவை தோசை கல்லில்
ஊற்றி சிறிதளவு எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறம் வரும் வரை வேகவைக்கவும் .
7. அட்டகாசமான தஞ்சாவூர் அடை தயார். தஞ்சாவூர் அவியலுடன் சாப்பிடுவது
கூடுதல் சிறப்பு.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : தஞ்சாவூர் அடை - ஊரும் உணவும் தஞ்சாவூர் ஸ்பெஷல் [ ] | cooking recipes : Thanjavur adai - The town and the food are Thanjavur special in Tamil [ ]