🌺 கொங்கு மண்டலத்தின் தொன்மை மிகு,சிவத்தலங்களுள் ஒன்றாக திகழ்வது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில். 🌺 திருஞான சம்பந்தரால் தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப் பெற்ற பெருமைக்குரிய தலமே,தற்போது ‘திருச்செங்கோடு’என்று கூறப்படுகிறது. 🌺 இறைவன் #அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரிலும்,அம்பாள் #பாகம்பிரியாள் என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 🌺 செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு இங்கு தனி சன்னதி அமைந்துள்ளது.செங்கோட்டு வேலவர்,அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. 🌺இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும்,திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். 🌺 இக் கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ்,கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார். 🌺 அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர்,சுமார் 6 அடி உயரத்தில்,உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். 🌺 தலையில் ஜடா மகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார்.அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக்
கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. என்பதை..... பற்றி விளக்கும் எளிய கதை!!!
🌺 கொங்கு மண்டலத்தின் தொன்மை மிகு,சிவத்தலங்களுள்
ஒன்றாக திகழ்வது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்.
🌺 திருஞான சம்பந்தரால் தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச்
செங்குன்றூர்’ என்று பாடப் பெற்ற பெருமைக்குரிய தலமே,தற்போது
‘திருச்செங்கோடு’என்று கூறப்படுகிறது.
🌺 இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
என்ற பெயரிலும்,அம்பாள் #பாகம்பிரியாள்
என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
🌺 செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு இங்கு
தனி சன்னதி அமைந்துள்ளது.செங்கோட்டு வேலவர்,அர்த்தநாரீஸ்வரர்,ஆதிகேசவப்
பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னதி அமைந்துள்ளது சிறப்பு.
🌺இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம்
திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும்,திருநீலகண்ட
திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.
🌺 இக் கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை
அருணகிரிநாதர் திருப்புகழ்,கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார்.
🌺 அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர்,சுமார் 6 அடி உயரத்தில்,உளி படாத
சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும்,பாதி பெண்ணாகவும்
மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
🌺 தலையில் ஜடா மகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார்.அம்பிகையின்
அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது.
🌺 சிவன்,சக்தி சேர்ந்த
வடிவம் என்பதால் வலது புறம் வேட்டியும், இடப் புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம்,எக்காலத்திலும்
வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும்.மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம்
வழங்கப்படுகிறது.
🌺 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக்
கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது.கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது
யாளி மீது வீரர்களைத் தாங்கிய ஒற்றைக் கற்தூண்கள்
சிற்ப வேலைப்பாடு மிக்கவை.🌹 நன்றி 💐
🌺 அன்னை ஸ்ரீ
ஆண்டாள் இவ்வுலகம் வெப்பம் குறைந்து எங்கும் அளவான மழை வேண்டி ஸ்ரீ கிருஷ்ணனிடம் நம் அனைவரது கூட்டுப் பிரார்த்தனை
திருப்பாவைப் பாசுர பாடல் 🌹
🌺ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல், ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
🌺 ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்ற திர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல், வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் 🌺
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்,தமிழக சிற்பக் கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. என்பதை பற்றி விளக்கும் எளிய கதை - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : The Arthanareeswarar temple at Tiruchengode is also a great testament to Tamil sculptural artistry. A simple story that explains about - Notes in Tamil [ ]