புத்தி சொல்லும் அழகு

குறிப்புகள்

[ சிந்தனை சிறு கதைகள் ]

The beauty of intelligence - Notes in Tamil

புத்தி சொல்லும் அழகு | The beauty of intelligence

இராமனுக்கு முடிசூட்டுவதற்கு நாள் குறித்தார்கள். நாட்டு மக்கள் யாவரும் செய்தியறிந்து மகிழ்ந்தார்கள். நாட்டை அலங்காரம் செய்தார்கள்.

புத்தி சொல்லும் அழகு

இராமனுக்கு முடிசூட்டுவதற்கு நாள் குறித்தார்கள்.

நாட்டு மக்கள் யாவரும் செய்தியறிந்து மகிழ்ந்தார்கள்.

நாட்டை அலங்காரம் செய்தார்கள்.

கூனி என்று அழைக்கப்பட்ட மந்தரைக்கு மட்டும் இராமன் முடிசூடுவது பிடிக்கவில்லை.

கைகேயியின் வேலைக்காரியாக (தாதி) இருந்தவள் கூனி.

கைகேயி தசரதனைத் திருமணஞ் செய்து அயோத்தி நகருக்கு வரும்போது கேகய நாட்டிலிருந்து கைகேயியோடு கூட வந்தவள் இவள்.

கைகேயியை வளர்த்த வளர்ப்புத்தாய் (செவிலித்தாய்) என்றும், கைகேயியின் தோழி என்றும் இவளைப் பற்றிப் பலவாறாகக் குறிப் பிடுகிறார்கள்.

கைகேயியின் மேல் மிகுந்த அன்பும் உரிமையும் கொண்டவளாக இருந்தாள் கூனி.

அவளது உடம்பிலே மூன்று இடங்கள் கோணலாக இருந்ததால் கூனி Renal என்பது அவளின் காரணப் பெயராயிற்று.

الله

அவளது உடம்பிலே மூன்று இடங்கள் கோணலாக இருந்ததால் கூனி என்பது அவளின் காரணப் பெயராயிற்று.

அவளது உடல் மட்டுமல்ல உள்ளமும் கோணலானது என்கிறார் கம்பர். கைகேயியின் மகன் பரதன்தான் முடிசூடி அரசாள வேண்டும்.

அதற்குத் தடையாக இருக்கும் இராமன் பதின்நான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள்.

கைகேயியிடம் சென்று வற்புறுத்தினாள்.

கைகேயி இராமன் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள்.

இராமனைக், கைகேயி தான் வளர்த்தாள் என்று கம்பன் கூறுகிறான்.

தன் மகன் பரதனைவிட, தன் கணவனான தசரதனின் மூத்த மனைவி யாகிய கோசலையின் மைந்தன் இராமனிடத்திலே தான் பெரிதும் அன்பு வைத்திருந்தாள் கைகேயி.

இருப்பினும் கொடுமனக் கூனியின் போதனையைக் கேட்டு மனம் மாறினாள் கைகேயி.

கூனியின் ஆலோசனைப்படி தன்னை அலங்கோலமாக்கி தரையில் படுத்துக் கிடந்து தசரதனிடம் பிடிவாதம் பிடித்து அழுது புரண்டு அரற்றி தன் காரியத்தை நிறைவேற்ற முயன்றாள்.

சம்பராசுரனோடு தசரதன் யுத்தஞ் செய்யச் சென்ற போது கைகேயி தேரோட்டிச் சென்றாள்.

அந்த யுத்தத்திலே இரண்டு தடவைகள் தசரதனது உயிரைக் காப்பாற்றினாள்.

7

யுத்தத்தில் வெற்றி பெற்ற தசரதன் கைகேயியிடம் விரும்பிய இரண்டைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான்.

சம்பராசுரனோடு தசரதன் யுத்தஞ் செய்யச் சென்ற போது கைகேயி தேரோட்டிச் சென்றாள்.

அந்த யுத்தத்திலே இரண்டு தடவைகள் தசரதனது உயிரைக் காப்பாற்றினாள்.

யுத்தத்தில் வெற்றி பெற்ற தசரதன் கைகேயியிடம் விரும்பிய இரண்டைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினான்.

அவளுக்கு அப்போது ஒரு குறையும் இருந்திருக்கவில்லை.

அதனால் எதையும் பெற மறுத்தாள்.

"உனக்கு எப்பொழுது தேவைப்படுகிறதோ அப்பொழுது கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.”

ல்வாரஇ காஇருள்.

"இதை வரமாகத் தந்தேன்" என்றார் தசரதர். இதனை நினைவூட்டி பரதன் நாடாள வேண்டும், இராமன் பதின்நான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும்” என்று இருவரங்களைக் கேட்டுப் பிடிவாதம் பிடித்து அந்த வரங்களைப் பெற்றாள்.

இராமன் காட்டிற்குச் செல்லச் சம்மதித்தான்.

ma

தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்றுவதிலும், சிறிய தாயாகிய கைகேயியின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலும், தம்பியாகிய பரதனுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதிலும் இராமன் மகிழ்ச்சி யடைந்தான்.

காட்டுக்குச் செல்ல ஆயத்தமானான்.

தனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமையன் இராமனுக்கு முடிசூட்டு நடக்கவில்லை என்பதனால் இலக்குவனுக்குக் கடுங் கோபம் உண்டானது. தந்தை தசரதனையும் கைகேயியையும் வெறுத்தான். பழித்தான். வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போய் ஒரு சந்தியிலே நின்று கொண்டு வீராவேசமாகக் கோபத்தோடு ஏசிக் கொண்டு நின்றான். "எதிர்ப்பவர்களைக் கொல்வேன். என் அண்ணன் இராமனுக்கு இராச்சியத்தைக் கொடுப்பேன்” என்றெல்லாம் சத்தமிட்டான்.

அவனை யாராலும் அடக்க முடியவில்லை.

அவனது கோபம் எல்லை கடந்தது.

அதனைக் கேள்விப்பட்ட இராமன் ஓடோடி வந்தான்.

இலக்குவனுக்குப் புத்தி சொல்லிப் பார்த்தான்.

இலக்குவன் சாந்தமடையவில்லை.

பல நியாயங்களையும், அறிவுரைகளையும் சொல்லிப் பார்த்தான்.

இலக்குவனின் கோபம் தணியவில்லை.

இறுதியாக இராமன் சொன்னான்:

"நான் என் தந்தையின் மேலும், சிறிய தாய் கைகேயி மேலும் அன்பு வைத்திருக்கிறேன். மதிப்பு வைத்திருக்கிறேன்.அதனால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது எனது கடமை. அதனால், மகிழ்ச்சியாகக் காட்டுக்குச் செல்லப் போகிறேன்.

நீ என் மேல் அன்பும் மதிப்பும் வைத்திருப்பது உண்மையானால், என் விருப்பத்தை நிறைவேற்று. கோபத்தை விட்டு விட்டு அரண்மனைக்குச் செல்."

இலக்குவன் மறுவார்த்தை பேசாமல் பெட்டிப் பாம்பாக அடங்கி அரண்மனைக்குச் சென்றான்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சிந்தனை சிறு கதைகள் : புத்தி சொல்லும் அழகு - குறிப்புகள் [ ] | Thought short stories : The beauty of intelligence - Notes in Tamil [ ]