உந்து சக்தி டானிக்

பணம்

[ ஊக்கம் ]

The driving force is tonic - money in Tamil

உந்து சக்தி டானிக் | The driving force is tonic

எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.

உந்து சக்தி டானிக்


எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.

 

உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.

 

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

 

வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.

 

நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.

 

வாழ்வின் லட்சியம் இறைவனைக் காண்பதும், எப்போதும் அவரது நினைவில் மூழ்கிக் கிடப்பதுமே ஆகும்.

 

ஆன்மிகப் பயிற்சிகளை பொறுத்த வரை கணவனும் மனைவியும் ஒரே கருத்து உடையவர்களாக இருந்தால் எளிதாக முன்னேறலாம்.

 

தூய உணவின் மூலம் தூய ரத்தத்தையும், பலத்தையும் பெறுவது போல், தூய மனத்தால் அன்பான பக்தியை நம்மிடையே வளர்த்துக் கொள்ளலாம்.

 

வாழ்வில் துன்பங்களையும், துயரங்களையும் அடைந்த பின்னரே இறைவனைத் பலர் தேடுகின்றனர். ஆனால், இளமையிலேயே இறைவனைத் தேடுபவன் பாக்கியவான்.

 

இல்லறக் கடமைகளைச் செய்யும்போதே பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

 

இறைவனின் திருநாமத்தை விரல்களைக் கொண்டு ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே விரல்களைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.

 

மலரின் வாசம் அனைவரையும் கவரும் – அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!

 

செழிப்பு நண்பர்களைச் சேர்க்கிறது! வறுமை நண்பர்களை சோதிக்கிறது!

 

உனக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்றத விட உன்ன எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்னு சொல்றது தான் உண்மையான நட்பு!

 

பணம்:


பணம் பணம் பணம் !!!

பணம் பணம் பணம் எத எடுத்தாலும் பணம்!

பணம் பணம் பணம் எத செஞ்சாலும் பணம்!

பணம்னா வாய பிளக்கும் பிணம்!

பாதாளம் பாய வைக்கும் குணம்!

ஜனனம் முதல் மரணம் வரை அதுதானே எல்லாத்துக்கும் காரணம்.

பிரசவம் பார்த்தாலும் பணம்!

பரவசம் அடைந்தாலும் பணம்!

கல்லாமை போக்கிட பணம்!

கல்யாணம் பண்ணிட பணம்!

உறவுகள் வந்தாலும் பணம்!

உலகம் சென்றாலும் பணம்!

பகைமைக்கு காரணம் பணம்!

பந்த பாசத்திற்கு பணம்!

பலரை காட்டி கொடுக்கவும் பணம்!

சிலரை கூட்டி கொடுக்கவும் பணம்!

தண்ணிக்கும் காத்துக்கும் பணம்!

மூத்திரத்துக்கும் ஆத்திரத்துக்கும் பணம்!

தண்ணிபாலுக்கும் தாய்ப்பாலுக்கும் பணம்!

தங்கத்துக்கும் தராதரத்துக்கும் பணம்!

தேர்வுக்கும் தேர்தலுக்கும் பணம்!

ஓட்டு போட்டிட பணம்!

கடமைக்கும் காரியத்திற்கும் பணம்!

லஞ்சம் ஊழல் பணம்!

நல்லது நடக்க பணம்!

கெட்டது செய்திட பணம்!

எங்கும் பணம் எதிலும் பணம்!

எதற்கும் பணம் எல்லாம் பணம்!

பணம் பணம் பணம்னு

பேய்யா அலையுற கூட்டம்......

நாலு காலு தூக்கிகிட்டு போகையில

ஊரு போடும் ஆட்டம்.....

ஒரு ரூபா காட்டிட்டு திரும்ப எடுக்கும்

ஆடுற அதே கூட்டம்....

அம்புட்டு தாங்க இந்த வாழ்க்கை!

கவலைய விடுங்க! மகிழ்ச்சியை கொண்டாடுங்க!

அவ்வளவு தாங்க!

பணம் இருந்தால் வரும் ஊக்கம் வேற லெவளுங்க 

By தமிழர் நலம்

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈

 

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு.

 

சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.

 

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம்.

வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

 

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

 

உங்கள் வலிகளுக்கான பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

 

வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இறைவன் ஒரு புது வழியையே உருவாக்கலாம்.

 

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

 

ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பி பயணத்தை தொடருங்கள்.

 

உங்கள் பயணங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.

 

இன்று நீங்கள் படும் கஷ்டங்களை வைத்து நாளை உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள்.

 

பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் எத்துணை பெரிய அதிசயத்தையும் நிகழ்த்தலாம் .

 

நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.

 

நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

 

💝💝💝💝💝💝💝💝💝💝

 

உங்களுக்கு உதவிக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைத்து மனம் உடைந்து நிற்கதியாக நின்றபோது உங்கள்  கரங்களை இருக்க பற்றியவன் நான்.

 

தனியாக இருப்பதாய் எண்ணி வருந்தாதீர்கள்!

எந்த சூழ்நிலையிலும் உங்களை கைவிடமாட்டேன் நிழலாக உங்களுடனே இருப்பேன்.

 

யார் எத்தனை சூழ்ச்சி செய்தாலும் முடிவில் நான் உங்களுடன் நமசிவாயம் இருக்கின்றேன்.

 

சில காயங்கள் மருந்தால் சரியாகாது 

மறந்தால்.. தான்  சரியாகும்..

மறப்பதும்.. மன்னிப்பதும் நமது பக்குவம்.


🙏 அதிகாலை பூத்துக் குலுங்கும் மலர்களை போல் அழகாய் விடியட்டும் உங்கள் காலை பொழுது 🙏🌹

 

 நீங்கள் விதைப்பதையே

 அறுவடை செய்யப்

 போகிறீர்கள்...

 அப்படியிருக்க அவை ஏன்

 நல்ல எண்ணங்களாக

 விதைக்கக் கூடாது...


முக மலர்ச்சியோடும்நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

 

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥சிவம்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

ஊக்கம் : உந்து சக்தி டானிக் - பணம் [ ஊக்கம் ] | Encouragement : The driving force is tonic - money in Tamil [ Encouragement ]