எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம்:

குறிப்புகள்

[ ஞானம் ]

The greatest courage in the world is to desire nothing: - Notes in Tamil

எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம்: | The greatest courage in the world is to desire nothing:

தன்னிடம் அதிகமான பொருள் செல்வம் இருக்கிறது. அதை ஒருவருக்கு தானமாக கொடுத்து விட்டால் ஆஹா இவ்வளவு கொடுத்து விட்டோமே என்றும் கர்வம் கொள்ளக்கூடாது. அப்படி கொடுத்த பொருளை வாங்கியவர் என்ன செய்கிறார் என்றும் நோட்டமிடக்கூடாது. இதுபோல் இருப்பதைதான், பகவான் ராமகிருஷ்ணர் விரும்பினார்.

எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம்:

தன்னிடம் அதிகமான பொருள் செல்வம் இருக்கிறது. அதை ஒருவருக்கு தானமாக கொடுத்து விட்டால் ஆஹா இவ்வளவு கொடுத்து விட்டோமே என்றும் கர்வம் கொள்ளக்கூடாது. அப்படி கொடுத்த பொருளை வாங்கியவர் என்ன செய்கிறார் என்றும் நோட்டமிடக்கூடாது. இதுபோல் இருப்பதைதான், பகவான் ராமகிருஷ்ணர் விரும்பினார்.

பகவான் ராமகிருஷ்ணரிடம் ஒருவன் வந்து "ஆயிரம் பொற்காசுகளும் உங்களுக்கு என் காணிக்கை" என்று வைத்தான். "நிஜமாகவே எனக்கு இவை தரப்பட்டனவா "என்றார். ஆம் என்றான். அப்படியானால் இதை கொண்டு போய் கங்கையில் கொட்டி விட்டு வா என்றார். அந்த மனிதனால் அது முடியவில்லை. வேதனையோடு ஒவ்வொன்றாக தடவி தடவி ஆற்றில் போட்டான். பின்னால் வந்த ராமகிருஷ்ணர் "முட்டாள் பணத்தை சேகரிக்கும்போது எண்ணுவது நியாயம்.

 தியாகம் செய்யும்போது ஏன் எண்ணுகிறாய்? தியாகத்திற்கு கணக்கு வேண்டாம் "என்றார்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஞானம் : எதற்குமே ஆசைப்படாதவராக இருப்பதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய தைரியம்: - குறிப்புகள் [ ] | Wisdom : The greatest courage in the world is to desire nothing: - Notes in Tamil [ ]