பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

The Lord who testified for the woman - Spiritual Notes in Tamil

பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன் | The Lord who testified for the woman

கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர்.

பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன்


கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த அவருக்கு வயதுக்கு வந்த 2 மகள்கள் இருந்தனர். மூத்தப் பெண்ணை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். அந்தப் பெண்ணை திருமணம் செய்தவர் சிறிது காலம் தான் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தினார். திடீரென்று என்ன நினைத்தாரோ, காசி யாத்திரைக்குப் புறப்பட்டுவிட்டார். அவர் எப்போது திரும்பி வருவார் என்பது தெரியாத நிலையில் அவரது மனைவிக்கு திடீரென்று அம்மை போட்டது.

விளைவு... அவளது அழகான முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆளும் மெலிந்து போனாள். கண் பார்வையும் பறிபோனது. திருமணம் ஆனவள் என்பதால் தன் உடலில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத் தாங்கிக்கொண்டாள் அந்தப் பெண். இதற்கிடையில் அவளது தங்கைக்கும் திருமணம் ஆனது. இந்த சூழ்நிலையில்தான் அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி பார்வையை தொலைத்த பெண்ணின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஓரிரு வருடங்கள் நகர்ந்திருக்கும். காசிக்குப்போன அவளது கணவன் திடீரென்று வந்து நின்றான். மனைவியைத் தேடினான். 

கண் எதிரே மனைவி இருக்க, அவளிடம் சென்று "என் மனைவி எங்கே?" என்று கேட்டான்.

"நான்தான் உங்கள் மனைவி.

"என்னது.... நீ என் மனைவியா? நிச்சயமாக அதற்கு வாய்ப்பே இல்லை. என் மனைவி பார்வையற்றவள் கிடையாது. அவளுக்கு நன்றாக பார்வை தெரியும்". 

"தயவு செய்து நம்புங்கள். நான்தான் உங்கள் மனைவி!"

"என் மனைவி அழகாகவும் இருப்பாளே... ஆனால் நீ அப்படி இல்லையே...

"அன்று உங்கள் பார்வைக்கு அழகாகத் தெரிந்த நான்தான் இப்போது இப்படி மாறிவிட்டேன்."

"என்ன சொல்கிறாய்? 'அம்மை நோய் எனக்குத் தந்த பரிசு இது."

நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன். நிச்சயமாக நீ என் மனைவியாக இருக்க முடியாது.

'அப்படிச் சொல்லாதீர்கள். நான்தான் உங்கள் மனைவி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்." என்ற அவளால் கண்ணீர் விட்டு அழ மட்டுமே முடிந்தது.

அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தங்கை அங்கு வந்துவிட, அவள் பக்கம் பார்வையை திருப்பினான் அம்மை நோய் பாதித்த பெண்ணின் கணவன்.

ஏற்கனவே அவள். தனது அக்காள் சாயலில் இருப்பாள். அதனால், அவளை தனது மனைவியாக உரிமை கொண்டாடினான். இன்னொருவனை மணந்து கொண்ட அந்த பெண், சட்டென்று விலகினாள்.

"நான் உங்கள் மனைவி அல்ல, உங்கள் மனைவியின் தங்கை. எனக்கு இன்னொருவருடன் திருமணம் ஆகிவிட்டது. என்று அவளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் கடைசி வரை நம்பவே இல்லை.

தனது மகள்களுக்கு நேர்ந்த கதியை எண்ணி வருந்தினார் கோவில் பூசாரி. இறைவன்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்பியவர், நேராக தான் பூஜித்து வந்த இறைவனான சிவபெருமான் கோவில் கொண்டுள்ள திருத்தலத்திற்கு மகள்கள் மற்றும் மருமகன்களை அழைத்துக் கொண்டு சென்றார். 

இறைவன் மனதிலும் இரக்கம் சுரந்தது. நடந்த சம்பவங்களை எல்லாம் கவனித்து வந்த இறைவன், தீர்ப்பு சொல்ல தயாரானார். முறையிட்டவர்களுக்கு முன்பு தோன்றி காட்சி தந்தவர், மனம் தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்த பெண்ணே அவனது மனைவி என்னும் பொருளில் "அவளே இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார்.

அதோடு இறைவன் அருளியவாறு அம்மை நோய் பாதித்த பூசாரியின் மூத்தப் பெண் அக்கோவில் தீர்த்தத்தில் மூழ்கி, மறுபடியும் முந்தைய அழகைப் பெற்றாள். கண் பார்வையும் கிடைத்தது. அதன்பிறகு அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான் அவளது கணவன்.

நீ என் மனைவி இல்லை என்று ஏற்க மறுத்த கணவனிடம், அவள்தான் உன் மனைவி என்று சாட்சி கூறியதால் இந்த திருத்தலத்து இறைவன் சாட்சி நாதர் என்று அழைக்கப்படுகிறார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறியது. தற்போது அந்த ஊர் அவளிவநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊருக்கு, கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவார மங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் சென்று வருகின்றன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள் : பெண்ணுக்காக சாட்சி சொன்ன இறைவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : The Lord who testified for the woman - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்