பொதுவாக விநாயகர் நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவார்!
நின்ற நிலையில் காட்சிதரும் அதிசய விநாயகர்!
பொதுவாக விநாயகர் நான்கு கரங்களுடன்
அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருவார்! பிள்ளையார்பட்டி போன்ற ஒரு சில தலங்களில் தான் இரு கரங்களுடன்
அமர்ந்த நிலையில் உள்ள விநாயகரை மிக அரிதாக தரிசிக்கலாம்.
ஆனால், நின்றநிலையில் பெரிய உருவில் இரு கரங்களுடன்
கூடிய விநாயகர் கர்நாடக மாநிலத்திலுள்ள 'இடகுஞ்சி'- என்ற ஊரில் அருள்பாலிக்கின்றார். கடற்கரை நகரான 'ஹொன்னவரா'விலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடகுஞ்சி
அமைந்துள்ளது.
சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில்
அமைந்துள்ள பகுதி துவாபர யுகத்தில் 'குஞ்ச வளம்' எனப்பட்டது. இங்கு 'வாலகில்ய முனிவரும், பிற முனிவர்களும் தவமியற்றிக் கொண்டிருந்தபோது பல்வேறு இடையூறுகள்
ஏற்பட்டன. எனவே ஸ்ரீ கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
அப்போது அங்கு வந்த நாரத முனிவர், இடையூறுகள் நீக்கும் விக்னேஸ்வரரை வழிபடுமாறு கூறினார்.
அவர்களும் ஷராவதி நதி கடலுடன் கலக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, நாரதரின் அறிவுரைப் படி அங்கு தவம் செய்தனர்.
முனிவர்கள் அங்குள்ள தேவதீர்த்தத்தில்
நீராடி, விநாயகர் வழிபாட்டைத் தொடர, விநாயகர் அவர்களது வழிபாட்டினை மனமுருகி
வந்து ஏற்றுக் கொண்டு, வலக்கரத்தில்
தாமரை மலர், இடக்கரத்தில் மோதகத்தை ஏந்தி நின்ற
திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார். மேலும் தான் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு
அருள் பாலிக்கப் போவதாகவும் கூறினார்!
அத்தகைய சிறப்பு மிக்க 'குஞ்சாரண்யம்' என்ற அந்த இடமே தற்போது 'இடக்குஞ்சி' என்று அழைக்கப்படுகின்றது. இங்குள்ள
விநாயகரை 'மதோபார் ஸ்ரீ விநாயக தேவரு' என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
ஐந்து விதப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும்
'பஞ்ச கட்யா' என்னும் மோதகம் இந்த விநாயகருக்கு ரொம்பப்
பிடித்தமான பொருளாக நிவேதனம் செய்யப்படுகின்றது!
நின்ற நிலையில் காட்சி தருகின்ற இந்த
அதிசயப் பிள்ளையாரை மனதால் ஒருமுறை நினைத்து வழிபட்டால், சகல நலன்களையும் தந்து ஆசிர்வதிப்பார்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர் : நின்ற நிலையில் காட்சிதரும் அதிசய விநாயகர்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : The miraculous Ganesha standing! - Ganesha in Tamil [ Ganesha ]