சென்னையிலிருந்து 150 கி.மீட்டர், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீட்டர், வேலூரிலிருந்து 38 கி.மீட்டர், ஆரணியிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவிலுள்ளது அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாள் அருட்கோயில்!.
அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்!
சென்னையிலிருந்து 150 கி.மீட்டர், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீட்டர், வேலூரிலிருந்து 38 கி.மீட்டர், ஆரணியிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவிலுள்ளது அன்னை ஸ்ரீ
ரேணுகாம்பாள் அருட்கோயில்!. அடிக்கடி பேருந்து வசதியுள்ள ஆலயம் இது
தமிழ் நாட்டின் புகழ்பெற்ற சக்தி திருத்தலங்களில், படை வீடு ரேணுகாபரமேஸ்வரி கோயிலும்
ஒன்று. வேலூர் - ஆரணி இடையில், ஜவ்வாது
மலை அடிவாரத்தில் கமண்டல ஆற்றங்கரையில் இயற்கை எழில் சூழ்ந்து இவ்வாலயம் காணப்படுகிறது.
சக்தி தேவியுடன் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகியோரின் ஆசியும் கிடைக்கப்பெறும்
இங்கு, தவம் செய்து பல ஞானிகள் சித்திபெற்றதாகப்
புராணம் சொல்கின்றது. இக்கோயில் தோன்றியதற்கான அழகான புராணக்கதை ஒன்றும் கூறப்படுகின்றது. பிரம்மனின்
ஆசியுடன், விதர்ப்ப தேசத்து மன்னன் இறைவதனன்
- உமாதேவிக்கு மகளாகப் பிறக்கிறாள் ரேணுகா. திருமண வயது வந்ததும், தன் குல வழக்கப்படி தந்தையிடம் கூறி
விட்டு, தனக்குப் பொருத்தமான மணவாளனைத் தேடி
தோழிகள் மற்றும் படையுடன் கிளம்புகிறாள் ரேணுகா.
ஜமதக்னி முனிவர் தவம் செய்கின்ற இடத்தில்
தனது படைகளை நிறுத்தி முகாமிடுகிறாள் ரேணுகா. படைகள் நிறுத்தப்பட்டதால், அந்த இடம் பின்னாளில் 'படைவீடு' என அழைக்கப்பட்டது.
இதற்கிடையில் முனிவரின் சீடர்களுக்கும், ரேணுகாவின் படை வீரர்களுக்கும் போர்
ஏற்படுகின்றது. ரேணுகா தரப்பில் சண்டையிட்ட சாமுண்டீஸ்வரி அந்தப் பகுதியில் நெருப்பைப்
படர விடுகிறாள். உடனே ஜமதக்னி முனிவர், மூவுலகிலும் உள்ள புனித நீரை தன் கமண்டலத்தில் வரவழைத்து அங்கு
பாயச் செய்தார். கமண்டல நதி' எனப்படும்
அது வேகமாகப் பாய்ந்து, நெருப்பை
அணைத்தது!.
அப்போது, ஜமத்கினி முனிவரும், ரேணுகாவும் தம்பதியாக வாழ்க்கையில்
இணைவர் என்று பிரம்மனின் அசரீரி கேட்டது. அதன்படியே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அழகான ஆண்குழந்தை பிறந்தது. 'பரசுராமர்' என்று பெயரிட்டனர்.
ஒருநாள் ரேணுகா தண்ணீர் எடுத்துக்கொண்டு
இருக்கும்போது வானில் பறந்த கந்தர்வனின் உருவம் அந்தத் தண்ணீரில் தெரிந்தது. அவனது அழகைச் சில நொடிகள்
ரசித்து வியந்தாள். இதை ஞானக் கண்ணால் உணர்ந்த ஜமதக்னி முனிவர், ஆத்திரமானார். தன் மகனை அழைத்து, தாயைக் கொல்ல உத்தரவிடுகிறார்!. தந்தையின்
கட்டளையை ஏற்று, தாயின் தலையைத் துண்டித்தார்.
பரசுராமர். பின்னர் தந்தையிடம் வந்து
தாயை உயிர்ப்பித்து தருமாறு வரம் கேட்கிறார். தன் கமண்டலத்தில் உள்ள புனித நீரை
மகனிடம் கொடுத்து, இறந்த
உடலில் தெளித்துத் தாயை உயிர்ப்பித்துக் கொள்ளுமாறு கூறுகிறார்!.
ஆனால், பரசுராமரின் கவனக்குறைவால் அவரது தாயின்
தலையும், வேறு ஒரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர்
பெறுகின்றது. இது குறித்து தந்தையிடம் அவர் முறையிட்டபோது. கடவுளின் விருப்பப்படி நடந்ததைத்
தன்னால் மாற்ற முடியாது என்ற கூறிவிட்டார். உயிர் பெற்ற ரேணுகா, ஆசிரமத்தில் இருந்து பணிவிடையைத் தொடர்ந்தாள்.
ஜமதக்னி முனிவரிடம் உள்ள காமதேனு பசுவின்
சக்தியை அறிந்து, அதைத்
தன்னிடம் தருமாறு - காத்த வீரிய அர்ச்சுனன் என்பவன் கோரிக்கை வைக்கிறான். அதற்கு ஜமதக்னி
மறுப்பு தெரிவிக்கவே, அவரைக்
கொன்று, காமதேனுவைக் கவர்ந்து செல்கிறான் காத்த
வீரிய அர்ச்சுனன்.
ஜமதக்னியின் உடலை எரித்தபோது, அந்த சிதையில் குதிக்கிறாள் ரேணுகா, ஆனால், தெய்வீக சக்தியால் திடீரென பலத்த மழை
பெய்து சிதை நெருப்பு அணைகிறது. வேப்பிலை ஆடை சூழ, எழுந்தாள் ரேணுகா.
அப்போது அங்கே பரமேஸ்வரன் தோன்றி, ஜமதக்னியை உயிர்ப்பித்துக் கொடுக்கிறார்.
மேலும், ரேணுகாவின் சிரசு (தலை) மட்டும் பூமியில்
தெய்வமாக நிலைத்து. மக்களுக்கு நல்லருள் புரியட்டும் என்கிற வரத்தையும் அளிக்கிறார்!.
அதன்படி, இக்கோவில் கருவறையில் சிரசு வரையிலான
உருவம் மட்டும் சுயம்புவாகத் தோன்றி, ரேணுகா அம்பாளாக இருக்கின்றாள் அன்னை!. இதன் பின்புறம் நான்கு
கரங்களுடன் முழு உருவச் சிலையாகவும் காட்சி தருகின்றாள். கரங்களில் குங்குமச் சிமிழ், திரிசூலம், கத்தி, உடுக்கையும், தலையில் நெருப்பு கிரீடமும் காணப்படுகின்றன.
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட
பாணலிங்கம் மட்டுமின்றி பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் கருவறையில்
வீற்றிருக்கக் காணலாம்.
மகா மண்டபத்தின் வடபகுதியில் தெற்கு
நோக்கி அமைந் துள்ளது, உற்சவர்
சந்நிதி. மண்டபத்தில் கல்வெட்டுக்கள், புராணக் கதைபற்றிய ஓவியக் காட்சிகள் காணப்படுகின்றன. அம்மனின்
சந்நிதிக்கு எதிர்புறத்தில் ஆதிசங்கரர் வழங்கிய 'நானாகர்சன சக்கரம்' உள்ளது.
பிரதான நுழைவாயிலான கிழக்கு ராஜகோபுரம், மூன்று நிலைகள், ஐந்து கலசங்களுடன் காணப்படுகின்றது.
சோம நாதே சுவரர்-உமா மகேஸ்வரி, வரசித்தி
விநாயகர், சுப்ரமணிய சுவாமி, வீர ஆஞ்சநேயர், காளி, பைரவர் உள்ளிட்டோரும் இங்கு சந்நிதி
கொண்டுள்ளனர். கோயில் வளாகத்தில் அழகிய தெப்பக்குளம் ஒன்றும் காணப்படுகிறது. ஜமதக்னி
முனிவர் யாகம் செய்த இடத்தில் அக்ளிக் குண்டம் வளர்த்து எடுக்கப்படும் திருநீறுதான், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதை நெற்றியில் பூசினால் பிணிகள் அனைத்தும் அகலும். பில்லி - சூன்யம் விலகி ஓடும்.
பல்வேறு பாக்கியங்கள் கிடைக்கும் என்கிறார்கள். திருமண வயது வந்தோர் இந்த அம்மனை வேண்டினால், மனம் போல் மாங்கல்யம் கிடைக்குமாம்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : The miraculous Renukampal Temple! - Amman in Tamil [ Amman ]