யாரனேும் உங்களுக்கு கை குடுக்க வரும்போது நீங்கள் இருக்கையில் ஒன்றில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று குடுங்கள் அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!
நம் வாழ்வில் 7 வலி மிகுந்த உண்மைகள்...
🌷 1. எவரும் உண்மையானவர்கள் இல்லை. எவருக்கும் இரண்டு முகம் உண்டு...💯
🌷 2. மக்கள் மதிப்பது பணத்தை தானே தவிர மனிதர்களை இல்லை ...👌
🌷 3. ஒருவரை எந்த அளவிற்கு விரும்புகிறோமோ
அவராலேயே அதை விட அதிகமா காயப்படுவோம்...🥹🥹
🌷 4. நாம் சந்தோசமாக இருக்கும் போது பாடலின் இசை
பிடிக்கும்..சோகமா இருக்கும் போது பாடலின் வரிகள் புரியும்...🎵🎵
🌷 5.உங்கள் கவலைகளை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் உங்களின் சந்தோசங்கள் மட்டும் கண்டு கொள்ளப்படும்...😊😊
🌷 6. உங்களின் வெளிதோற்றம் மதிக்கபடுமே தவிர உங்களின் நல்ல எண்ணங்கள்
மதிக்கப் படுவதில்லை...😎😎
🌷 7. ஒருவரின் நம்பிக்கையை உடைப்பது சுலபம் ஆனால் அதை மீண்டும் பெறுவது என்பது நடக்காது...👌💯
1. யாரனேும் உங்களுக்கு கை குடுக்க
வரும்போது நீங்கள் இருக்கையில் ஒன்றில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று குடுங்கள்
அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!
2. உங்களை நம்பி யாரேனும் உங்கள்
பாதுகாப்பில் இருந்தால் அவர்களை காப்பாற்றுங்கள். உங்களோடு இருப்பவர்களுக்கென
தனிப்பட்ட ரீதியில் மரியாதை உண்டு , நகைச்சுவை
உணர்வோடு பழகினாலும் மரியாதை தர தவறாதீர்கள்!
3. விருந்தினராக சென்ற இடத்தில்
உங்களுக்கு தரப்படும் உணவில் குறை கண்டு பிடிக்காதீர்கள், உப்பு , புளி போன்ற விடயத்தில் அலட்டி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி
கொள்ளவேண்டாம்!
நீங்கள் பணம் கொடுத்து வாங்காத எந்த
தின்பண்டமாகிலும் அதன் இறுதிதுண்டு வரை சாப்பிடாமல் வாங்கியவருக்கே குடுத்து
விடுங்கள்,!
4. வியாபாரம் தொடர்பிலோ அல்லது வேறு
எந்த விடயத்திலுமோ நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது அதை செய்கிறேன் இதனை
உங்களுக்கு தருகிறேன் என முதலாவது வாக்கு தராதீர்கள், பின்நாளில் நீங்கள் நஸ்டமடைய அதுவே
காரணமாகும்.
5. நீங்கள் செய்யாத வேலையின் பெறுமதியை
திருடாதீர்கள்,யார் செய்தார்களோ அவர்களுக்கே அதன்
பாராட்டு கிடைத்தாகவேண்டும்.
6. எவ்வேளையிலும் வீண்பழிக்கு
உட்படாதீர்கள், உரிய தரப்பிடம் நேரடியாக சென்று உங்கள்
நேர்மையை காட்ட தவறாதீர்கள், வீண்பழி
சுமத்துவோரிடம் அமைதியாக இருந்தாலும் மேலிடத்தில் இருப்பவரிடம் உங்கள் மீது
நல்லெண்ணம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். நேர்மை அதற்கு உதவும்!
7. உரியவரால் நீங்கள் அழைக்க படாத
விருந்துக்கு யார் அழைத்தாலும் செல்லாதீர்கள், நண்பர்களிடம்
இந்த விடயத்தில் கறார் காட்டினாலும் பரவாயில்லை!
8. கண்களை பார்த்தே பேசுங்கள், உறவுக்காக கெஞ்சாதீர்கள், அது எப்படியான உறவாக இருந்தாலும் சரி
உங்கள் மேல் இல்லாத தவறுக்காக மன்னிப்பு கோராதீர்கள், ஒரு தரம் நீங்கள் பிழை செய்யாமல்
கேட்கும் மன்னிப்பு காலம் முழுதும் உங்களை அவர்களிடம் கெஞ்ச வைத்து உங்கள்
தன்மானத்தை இழக்க செய்யும்,!
9. யாரேனும் உங்களுக்கு வாழ்க்கை
தந்ததாக நினைத்துகொள்ளாதீர்கள், மிக
முக்கியமான உறவொன்றின் மூலம் கிடைக்கும் எதற்கும் நன்றியுணர்வோடு இருங்கள், அதை தவிர்த்து அவர்களை இழந்துவிட்டால்
உங்கள் வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்து உங்களை நீங்களே தாழ்த்திகொள்ளாதீர்கள்!
ஆக சிறந்த படைப்பு நீங்கள் தான்,
10. நன்றாக உடை அணியுங்கள், நாகரீகம் என்பது நவீன ஆடைகளை சார்ந்தது
அல்ல, அது உங்களை சீராக காட்டினாலே போதுமானது, சீரான உடையும் நேர்த்தியான உடைகளின்
மீதான தெரிவும் உங்களை மற்றவர் மதிக்கும் படி செய்யும், கிழிந்த
ஆடைகளும் தசைகளை பிதுக்கி காட்டும் அலங்காரமும் மற்றவர் முன் உங்களை அருவருப்பாகவே
காட்டும்,!
11. எங்கே சென்றாலும் பணத்தோடு
செல்லுங்கள், பணம் இல்லாத போது நண்பர்களே
விருந்துக்கு அழைத்தாலும் சுற்றுலாவுக்கு அழைத்தாலும் நிராகரிப்பது நல்லது, அவர்கள் மத்தியில் உங்களை நீங்களே
பெலவீனராக்கும் முயற்சி அது. குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்பாக
வைத்துகொள்ள போராடுங்கள்,
தர்மம் செய்கிறேன் பேரில் குடிகார
பிச்சைகாரர்களுக்கு தராதீர்கள், நிலை
அறிந்து தர்மம் செய்யுங்கள்.
12. மற்றவர் பேசும் போது கேளுங்கள், நல்ல காரியங்களுக்கு தலையாட்டுங்கள், கண்களை பார்த்து பேசுங்கள், பெண்களிடம் குழந்தைகளிடம் கண்ணியமாக
நடந்துகொள்ளுங்கள், தற்காலத்திற்கு
ஏற்ற போல் உங்கள் நெருங்கிய உறவினரின் பெண்குழந்தையானால் குழந்தைக்கோ பெற்றார்க்கோ
அசௌகரியத்தை உண்டுபண்ணுவது போல தூக்காமலும் தொடாமலும் இருங்கள். அது உங்கள்
குழந்தை பருவத்திற்கு நீங்களே செய்யும் மரியாதை.!
13. எதுவாக இருந்தாலும் கோபத்தை
வெளிப்படுத்துவதில் நிதானத்தைக் காட்டுங்கள். கோபமாக இருப்பது ஆற்றல் விரயம்.
14. ஆல்ககாலுடன் புகைப்படம் இடுவது
அநாகரிகம் என்பதை உணருங்கள், ஆபாச
குறியீடுகளை புகைப்படம் எடுக்கும் போது காட்டாதீர்கள், நடுவிரல் காட்டுவது நவீன முறை அல்ல
என்பதை வளர்ந்து வரும் சிறாருக்கு சொல்லிகொடுங்கள், ஆக குறைந்தது அப்படியான புகைப்படங்களில் இருந்து நீங்கள் விலகி
நில்லுங்கள்!
15. நேர்மையாக இருக்க தயங்காதீர்கள்.
நேர்மையாக இருப்பது போல் நடிப்பினை காட்டாமல் தனி அறையானாலும் உங்களுக்கு நீங்களே
முதலில் நேர்மையாக இருங்கள்.
நேர்மையாக இருப்பது என்பது மிகச்சிறந்த
பெண்களினதும் ஆண்களினதும் குணம் மறவாதீர்கள்!
எப்பவுமே ஓவர் மெச்சூர்டா
இருக்கனும்ன்னு யோசிக்காதீர்கள்..ஒரு நாள, ஒரு
நேரத்த உங்களுக்குன்னு மட்டும் எடுத்துக்க ஒதுக்குங்கள். உங்களுக்குப் பிடிச்சத செய்யுங்கள், யார் என்ன நினைப்பாங்க ஏது நினைப்பாங்கன்னல்லாம்
மைண்ட் பண்ணாதீர்கள், விருப்பமானத சாப்பிடுங்கள், சமைக்கத் தோணினா சமையுங்கள், டான்ஸ் ஆடப்போற ஆசை இருந்தா ஆடுங்கள், விளையாடப்போற விருப்பமா போய் விளையாடுங்கள், நீங்கள்
சின்ன வயசுல எதுல பைத்தியமா இருந்தீர்களோ அத திரும்ப செஞ்சு ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள், வேலைக்கு போய் விட்டோம், கல்யாணம் முடிச்சுட்டோம், பிள்ளை இருக்கு, வயசாகிடுச்சின்னு காலம் போக போக உங்களை
அறியாமலையே உங்களுக்கு ஒரு ப்ரசர் வந்துட்டே இருக்கும், சுற்றி இருக்குறவங்க மாறிட்டே
இருப்பாங்க, உங்களை நோக்கின தேவைகள் கூடும், இந்தக் காலம் உன்ன ஒரு கட்டத்துக்கு
மேல நிம்மதியா இருக்கவே விடாது, எப்பவுமே
responsible person ah இருந்தியன்னு வையங்கள்... அந்த மெண்டல்
ப்ரசரே உங்களை நீங்களே வெறுக்குறத்துக்கு ஆளாக்கிரும்! ஒரு நாளாவது எல்லாத்தையும்
மறந்து உங்களை நீங்களே சந்தோசமா வச்சிக்கனும் , self love தான் இங்க எல்லாமே! உங்களை விரும்புங்கள் முதலில்... வாழ்க்கை
அழகாகும் பிறகில்....
நாம வாழ்ற வாழ்க்கையே temporary
இதுல..வர்ற பிரச்சினைக்கு Permanent Solution தேடறது முட்டாள்தனம் ....
பேரன்பு குவியலுடன்....
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : நம் வாழ்வில் தேவையான வலி மிகுந்த உண்மைகள்... - வாழ்வியல் குறிப்புகள் [ ] | Philosophy of experience : The painful truths we need in our lives... - Biographical Notes in Tamil [ ]