பைரவர் சிவனைப் பூசித்த தலம்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

The place where Bhairava worshiped Lord Shiva - Bhairava - Spiritual notes in Tamil

பைரவர் சிவனைப் பூசித்த தலம் | The place where Bhairava worshiped Lord Shiva

முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற வடுக பைரவர் இங்குள்ளார். வடுக தீர்த்தமும் உள்ளது.

பைரவர் சிவனைப் பூசித்த தலம் :


திருஆண்டார் கோயில் : 

முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற வடுக பைரவர் இங்குள்ளார். வடுக தீர்த்தமும் உள்ளது. தொல் இலாகா பராமரிப்பில் கோயில் விழுப்புரம் / புதுச்சேரி சாலையில் உள்ளது.


திருவொற்றியூர் : 

தியாகராஜர் சிவாலயத்தில் பைரவருக்குத் தனிக்கோயில், தனிக்கொடி மரம், பலிமீடம், மண்டபம், பைரவ தீர்த்தம் உள்ளன. சென்னையில் உள்ளது.


சிதம்பரம் : 

கனகசபையில் சொர்ண பைரவர் ஐம்பொன் விக்கிரக வடிவம் நடராசருக்குக் கீழ்ப்புறமுள்ளது. பைரவருக்கு தனிச்சந்நிதியும் இருக்கிறது. 


திருச்செங்காட்டங்குடி : 

உத்திராபதி ஈசுவரர் கோயிலில், அஷ்டமூர்த்தி மண்டபத்தில் பெரிய உருவில் பைரவர். திருவாரூர் / திருமருகல் பாதையில் உள்ளது. 


படப்பை : 

துர்க்கைச் சித்தர் அமைத்துள்ள ஜெயதுர்க்கா பீடம் கோயிலில், சொர்ண பைரவர் யந்திரம் இருக்கிறது. தாம்பரத்திலிருந்து 10 கிமீ.


பெருநகர் : 

பிரம்மபுரீசுவரர் கோயில். பிரம்மன் பூசித்த பைரவர் உள்ளார். பைரவர் இடுப்பின் இரு புறங்களிலும் கரங்களிலும் பாம்புகள் உள்ளன. காதுகளில் நாகத்தோடு அணிந்துள்ளார். இது அபூர்வத் திருமேனி. காஞ்சிபுரம் / வந்தவாசி சாலையில் 20 கிமீ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவர் சிவனைப் பூசித்த தலம் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : The place where Bhairava worshiped Lord Shiva - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]