மூச்சு விடும் மூலவர்

குறிப்புகள்

[ சுவாரஸ்யம்: தகவல்கள் ]

The source of breath - Tips in Tamil

மூச்சு விடும் மூலவர் | The source of breath

கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

🫐🌹மூச்சு விடும் மூலவர்🌹🫐

 

🍀 கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

🍀 கிருஷ்ணா,மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்த போது வானில் அசரீரி ஒலித்தது.“அகத்தியரே!நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் சிலை ஒன்று உள்ளது.அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத் தொடருங்கள்” என்றது.

🍀 அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

🍀 நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது.

🍀 நான்காம் நுாற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது.

🍀 1377ல் கோவில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.

🍀 சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார்.அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர் அசைந்தது.அதே நேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது.

🍀 இன்றும் விளக்குகள் இப்படி எரியும் அதிசயத்தை

நாம் காணலாம்.

🍀 ஆந்திராவிலுள்ள நல்கொண்டா,கிருஷ்ணா,குண்டூர் மாவட்டத்தினர் இங்கு வழிபட்ட பிறகே மற்ற நரசிம்மர் தலங்களுக்குச் செல்கின்றனர்.

🍀 ராமர்,சீதை, லட்சுமணர்,அனுமன் சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

🍀 மகாலட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.

🍀 கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.

🍀 ஆன்மிக உபன்யாசகரான முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் யாகம் நடத்தினார்.அதன் பின் இக்கோவில் பிரபலமானது.

🍀 பஞ்ச நரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோவில். அளவில் சிறியது என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில் மூழ்குகின்றனர்.

🍀 வாடபல்லி என்னும் இக்கிராமத்தில் கிருஷ்ணா, முசி நதிகள் இணைந்து எல் வடிவில் உள்ளன.

 

🛣அமைவிடம்🛣

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது.

 

🙏🏼#ஜெய் #ஸ்ரீ #நரசிம்மா.✍🏼🌹

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

சுவாரஸ்யம்: தகவல்கள் : மூச்சு விடும் மூலவர் - குறிப்புகள் [ தகவல்கள் ] | Interesting: information : The source of breath - Tips in Tamil [ information ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்