பிரதோஷம் பிறந்த கதை

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

The story of the birth of Pradosha - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷம் பிறந்த கதை | The story of the birth of Pradosha

பிரதோஷம் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர் சிவபெருமான். அவருக்கு உரிய விரத நாள் தான் பிரதோஷம்.

பிரதோஷம் பிறந்த கதை


பிரதோஷம் என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர் சிவபெருமான். அவருக்கு உரிய விரத நாள் தான் பிரதோஷம்.

சரி... இந்த பிரதோஷம் பிறந்த கதை தெரியுமா?

அதிக வலிமை பெரும் பொருட்டு அமுதம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாக வும் கொண்டு கடைந்தனர். தேவர்கள் வாசுகி பாம்பின் வால் பகுதியையும், அசுரர்கள் தலைப் பகுதியையும் பிடித்துக் கொண்டனர்.

ஒருக்கட்டத்தில் மந்திரகிரி மலையானது, வாசுகி பாம்பின் பிடியில் இருந்து விடுபட்டு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது. அப்போது, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று, மூழ்கிய மந்திரகிரி மலையை தனது முதுகில் தாங்கி, அதை மேலே கொண்டு தொடர்ந்து, தேவர்களும், அசுரர்களும் அந்த மலையைக் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தனர்.

மறுநாள் ஏகாதசி திதியன்று வலி பொறுக்க முடியாது வாசுகி பாம்பை கடலினுள் தனது நஞ்சை உமிழ்ந்தது. அப்போது அமிர்தமும் கடலில் தோன்றியது. வாசுகி பாம்பு கக்கிய ஆலமாகிய விஷமும், அமிர்தமும் ஒன்று சேர்ந்து 'ஆலாலம்' ஆனது. அதனால் அவர்கள் அதை பருக முடியாமல் தவித்தனர்.

சிவபெருமானின் உதவியை அவர்கள் நாட... அவர் விஷத்தினை தானே எடுத்து உட்கொண்டார். தான் உட் கொண்ட விஷத்தை விழுங்காமல், கழுத்தாகிய கண்டத்திலே தேக்கினார். அதன் காரணமாக அவரது மேனி நீல நிறமானது. அவரும் 'நீலகண்டன் ஆனார்.

வாசுகி கக்கிய விஷத்தின் கொடுமையில் இருந்து தேவர்களையும். அசுரர்களையும் காத்த சிவபெருமான், மீண்டும் அவர்களை திருப்பாற் கடலை கடையுமாறு கூறினார். அதன் தொடர்ச்சியாக அதில் இருந்து முதலில் லட்சுமி தோன்றினாள். தொடர்ந்து ஜராவதம் என்ற வெள்ளை யானை, காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கவுஸ்துமணி, சூடாமணி, உச்சைஸ்வரம் என்ற குதிரை போன்றவை தோன்றின. லட்சுமியை திருமால் ஏற்க, மற்ற அனைத்தையும் தேவர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னரும் திருப்பாற்கடலை கடையும் பணி தொடர்ந்தது. மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அசுரர்களுக்கு கொடுக்காமல் அதை தேவர்கள் கைப்பற்றி உண்டனர். ஆனால், தங்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமான சிவபெருமானுக்கு நன்றி கூற அவர்கள் மறந்துவிட்டனர். பிரம்மா நினைவுபடுத்திய பிறகே, தேவர்கள் அனைவரும் சிவ பெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.

அவர்களுக்காக கைலாயத்தில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று திருநடனம் புரிந்தார் சிவபெருமான். தேவர்கள் அதை கண்டு மகிழ்ந்தனர்.

அன்று முதல் திரயோதசி திதி அன்று மாலை நேரம் பிரதோஷம் காலமாக கருதப்பட்டு, அன்றைய தினம் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பிரதோஷம் முதல் முதலில் நடைபெற்ற திருத்தலம் என்ற பெருமையைப் பெறுவது திருவாரூரில் உள்ள சிவாலயம். இதேபோல், முதன் முதலில் பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்ட பெருமைக்கு உரியவன் தேவர்களின் தலைவன் தேவேந்திரன்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷம் பிறந்த கதை - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : The story of the birth of Pradosha - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]