பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றுதான்திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான் முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.
ஓணம் திருவிழா முதன் முதலில் நடைபெற்ற கோவில்!
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், இடப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து
கிழக்கே ஆறு கி.மீ. தொலைவிலும், கொச்சி
யிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது 'திருக்காட்கரை'. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றுதான்திருக்காட்கரை. ஓணம் திருவிழா இங்குதான்
முதன் முதலில் நடந்தது என்கிறார்கள்.
ஒருமுறை இக்கோயிலுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட
தங்கத்தால் ஆனவாழைக்குலை காணாமல் போனது. இதையறிந்த அந்தப் பகுதியை ஆட்சிசெய்த மன்னன், இந்தக் கோயிலுக்கு தினந்தோறும் வந்து
வழிபட்டுச் செல்லும் யோகி ஒருவரின் மீது சந்தேகம் அடைந்தான். அந்த யோகி மீது திருட்டுக்
குற்றம் சுமத்தி தண்டனையும் வழங்கினான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒருநாள் காணாமல்
போன தங்கத்தால் ஆன வாழைக் குலை சுவாமியின் சன்னிதியிலேயே கண்டெடுக்கப்பட்டது. இந்த
நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றம்
காரணமாக மனம் வருந்திய யோகி, மன்னனைச்
சபித்து விட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதேநேரம் அவர் பிரம்ம ராட்சஸனாகி இத்தலத்தில்
திரிந்து கொண்டிருந்தாராம்! பின் பக்தர்கள் அனைவரும் தங்களது சாபம் தீர வேண்டி யோகியை
வழிபட்டு இத்தலத்தில் யோகிக்கு கோயில் கட்டி, தினமும் வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். அதன் பின்னரே அவரது ஆத்மா
சாந்தி அடைந்ததாம்.
அதன் காரணமாக இப்போதும் 'திருக்காட்கரை பெருமாளை வழிபடச் செல்லும்
பக்தர்கள் முதலில் யோகியின் சன்னிதிக்குச் சென்று வழிபட்டு விட்டே பிறகு பெருமாளைத்
தரிசிக்கின்றனர்.
ஓணம் பண்டிகையன்று இங்கு நடைபெறும்
நேந்திரம் வாழைக் குலை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வழிபாட்டின்போது ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பங்கேற்பதால், அதிகாலையிலேயே
புக்தர்கள் நேந்திரம் வாழைக்குலைகளுடன் நீண்ட வரிசையில் நின்று இடம்பிடித்துக் கொள்கிறார்கள்.
அதன் பின் தாங்கள் கொண்டு வந்த வாழைக்குலையைப் பெருமாளுக்குக் காணிக்கையாக்கி வழிபடு
கிறார்கள். பக்தர்களால் தரப்படுகிற வாழைக்குலைகளை இக்கோவில் வாயிலில் வரிசையாகக் கட்டித்
தொங்க விடுகிறார்கள்.
கபில முனிவர் இத்தலத்துப் பெருமாளை
வழிபட்டதால், இங்குள்ள தீர்த்தம் 'கபில தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கபில தீர்த்தத்தில் உள்ள நீரைத்தான்
மகாபலி கமண்டலத்தில் எடுத்து வாமனருக்கு மூன்றடி நிலம் தருவதாகத் தாரை வார்த்துக் கொடுத்ததாகவும்
சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் கால் பதித்தாலே கெட்டவை நீங்கி, நல்லவை நடக்கும் என்கிறார்கள்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : ஓணம் திருவிழா முதன் முதலில் நடைபெற்ற கோவில்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : The temple where the Onam festival was first held! - Perumal in Tamil [ Perumal ]