இறைவனை அடைவதற்கான வழி

உணர்வு என்றால் என்ன?

[ ஞானம் ]

The way to reach God - What is consciousness? in Tamil

இறைவனை அடைவதற்கான வழி | The way to reach God

ஆத்ம உணர்வே இறைவனை அடைவதற்கான வழி நான் ஒரு அமைதியான ஆத்மா இந்த உலகில் நாம் காண்பவை அனைத்துமே மாயை அதாவது உண்மையானவை அல்ல என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது சரியல்ல.

இறைவனை அடைவதற்கான வழி

ஆத்ம உணர்வே இறைவனை அடைவதற்கான வழி

நான் ஒரு அமைதியான ஆத்மா

இந்த உலகில் நாம் காண்பவை அனைத்துமே மாயை அதாவது உண்மையானவை அல்ல என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது சரியல்ல. நாடகம், நாடகமேடை, நடிகர்கள் மற்றும் அவர்களுடைய பங்கு ஆகியவை உண்மையானவையே ஆகும். ஆனால் நாம் மற்றவற்றைப் பார்க்கும் பார்வை, அவற்றை நாம் உணரும் தன்மை ஆகியவையே பொய் ஆகும். உடல் நான் ஒரு என்கிற பொய்க்கூற்றின் ஆதாரத்தில்தான், அனைவரின் எண்ணங்கள், முடிவுகள், மற்றும் செயல்கள் அமைந்துள்ளன.

 

அழியாத ஆத்மா, தன்னை ஒரு அழியக்கூடிய உடல் என்று தன்னைத் தவறாக நம்புவதால், நீர்க்குமிழிக்கு ஒப்பான ஆசைகளை உருவாக்கிவருகிறது. இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, காமம், கோபம், மோகம், லோபம் மற்றும் அகங்காரம் என்கிற ஐந்து விகாரங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நான் இன்னார், இவருடைய மகன், இந்த இடத்தில் வசிப்பவன், எனது மதம் இது, என்னுடைய தொழில் இது, என்னுடைய வயது இவ்வளவு என்று பொய்யான நம்பிக்கையில் ஆத்மா இருந்துவந்து தன்னையே ஏமாற்றிக் கொள்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் நான் ஒரு உடல் என்று தன்னைக் கருதிவருவதே ஆகும். இதனால், தான் ஒரு அழியாத ஆத்மா என்பதை மறந்து ஆத்மாவானது விருப்பு வெறுப்பு என்கிற தாற்காலிக மாயையில் சிக்கிக் கொள்கிறது.

 

நடிகன் (ஆத்மா) தான் அணிந்துள்ள உடையையே, தான் நடித்துவரும் வேடத்தையே உண்மையென நம்பிவருகிறான்! இந்த உடல் உணர்வு அதாவது தேக அகங்காரத்தால், தனது உருவம், பெயர், புகழுக்கு அடிமையாகி விடுகிறான். ஆத்மா தன் உடல், வேடம் என்கிற சிறைக்குள் சிக்குண்டுவிட்டது. உட என்கிற குறுகிய கண்ணோட்டத்தால், தான் ஆட்பட்டுள்ள இந்த வாழ்க்கை என்னும் நாடகத்தின் எல்லையற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தனது இடம், நேரம், சூழ்நிலை ஆகிய வரையறைக்குள் தனது பழைய சுபாவத்தின் படி சிக்குண்டு கிடக்கின்றது. சூழ்நிலை சாதகமாயிருப்பின் மகிழ்கிறது. பாதகமாயிருப்பின் சோர்ந்து போய் அத்தடைகளிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறது. இவ்வாறு ஒரு மிதக்கும் தக்கை பெரிய கடலில் அலைக்கழிக்கப்படுவது போல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்கிறது.

 

உணர்வு என்றால் என்ன?

ஆத்மா என்பது சைத்தன்ய (உயிரோட்டமான) சக்தி தனது வாழும் நிலையை முழுமையாக உணர்ந்திருப்பது, நான்... நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வுகளால் உணர்வினை விளக்கமுடியும். உணர்வு என்பது எண்ணம், தீர்மானம், செயல் ஆகியவைகளுக்கான உந்துசக்தியாகும். அதாவது, பல்வேறு சூழ்நிலைகளில் ஆத்மா எவ்வாறு தன்னை தனது கௌரவத்தை (சுயமரியாதை) உணர்ந்துள்ளதோ அதற்கு ஏற்றாற் போல் பதில் செயலைப்புரிகிறது.

உதாரணமாக, ஒரு மருத்துவர், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்ற உணர்வில் இருக்கும் போது வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க முடிகிறது. அதைப்போன்றே ஆத்மா தான் ஒரு ஆத்மா என்கிற உணர்வில் இருக்கும் போது, அதனுடைய சொந்த குணாதிசயத்தில் நிலைத்திட உதவியாய் இருக்கிறது. பொதுவாக இருவிதமான அடிப்படை உணர்வுகள் உள்ளன. நான் ஒரு உடல் அல்லது நான் ஒரு ஆத்மா. முதலாவது மாயை, இரண்டாவது உண்மை. நான் உடல் என்கிற உணர்வில் இருக்கும் போது எண்ணங்கள் குறுகிய மனப்பான்மையிலும் பிரச்னைகள், உடலை மட்டுமே காணும் விதத்திலும் அமைகின்றன. பிறர் பொருட்டான அதன் (ஆத்மாவின் பிரதி செயலும் அதே முறையில்தான் இருக்கும். ஒரு தந்தை மகனுக்குரிய உறவில் நிகழும் வித்தியாசத்தை விளக்கும்.

 

உடல் உணர்வு

விழிப்புணர்வு :

நான் தந்தை, நான் அதிகம் அறிவேன்

எண்ணங்கள் :

எனது சொந்த இரத்த உறவு என் மகன், எனவே நான் சொல்வதைக் கேட்க வேண்டும்

தீர்மானம் :

நான் அவனுக்கு ஒரு பாடம் புகட்டுவேன்

செயல் :

தந்தை மகனோடு சர்ச்சை செய்கிறார்

முடிவு :

தந்தை மகனுக்கிடையே உறவு கெடுகிறது

 

ஆத்ம உணர்வு

விழிப்புணர்வு :

 

நான் ஆத்மா, எனது இயற்கையான குணம் அமைதி, அன்பு

எண்ணங்கள் :

எனது மகனும் ஆத்மா, ஆத்மா என்கிற உறவில் எனது சகோதரன்

தீர்மானம் :

நான் அவனது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்

செயல் :

தந்தையும் மகனும் மதிப்பு, மரியாதையோடு ஆலோசிக்கின்றனர்

முடிவு :

அங்கே மரியாதை நிலவுகிறது

 

மேல் உள்ள ஆத்ம உணர்விலான உறவின் நன்மைபற்றி தெளிவாக விளக்குகிறது அல்லது பிறரை சரீரம் என்பதை விடுத்து, ஆத்மா என்கிற உறவில் நிலைக்க வேண்டு மென்கிறது.

 

நான் ஒரு அமைதியான, சாந்த சொரூபமான ஆத்மா என்கிற எண்ணம், ஆன்மீக ஞானம் என்கிற உலகின் கதவுகளை திறக்கச்செய்கிறது. இந்த எண்ணம் அலைபாயும் மனதை நிலையாக்கி ஆத்ம ஞானத்தையும் பெறச்செய்கிறது. அச்சக்திகளை நல்வழியில் பயன்படுத்தவும் உதவுகிறது. எப்படி ஆற்றோட்டம் முறைப்படுத்தப்படும் போது பல நன்மைகளை அளிக்கின்றதோ அது போல நெறிப்படுத்தப்பட்ட எண்ணங்களும் பலருக்கு நன்மை அளிப்பதாக அமையும் அணைகட்டப்படாத ஆற்று வெள்ளம் தீங்கிழைப்பதைப்போல, கட்டுப்பாடற்ற எண்ணங்களும் தனக்கும் பிறருக்கும் தீங்கிழைப்பதாகும். ஆக உலகீய பொருட்கள், வசதிகள் போன்றவை தேவையாய் இருப்பினும் அவை மனிதன் தேடுகின்ற உண்மையான ஆனந்தத்தை அளிக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும் அணுவினை விஞ்ஞானிகள் அதன் அளப்பறிய சக்தியை கண்டறிந்து பல வழிகளில் உபயோகிப்பது போல நாம் நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவின் மீது தியானித்து நமது தூய்மையான ஆன்மிக சக்தியை வெளிக் கொணர முடியும்.

 

மன இறுக்கத்தின் காரணம் உடல் என்கிற உணர்வே:

ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையில் இவ்வளவு வேறுபாடு காணப்படும்போது, தான் ஒரு ஆத்மா என்று உணர்ந்தால்தான், ஒருவர் மன அமைதி பெறமுடியும். அமைதியை அனுபவம் செய்ய உடல் விழைவதில்லை, ஆத்மாதான் விரும்புகிறது. ஆத்மாதான் பகவானுடன் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறது, உடல் அல்ல.

 

உடலை விட்டு ஆத்மா அகலும்போது, ஸ்தூலமான தத்துவத்திலிருந்து சூட்சுமமான ஆத்மா பிரிகின்றது. இறப்பை நாம் உணர்ந்துகொண்டால், ஜீவனையும் (ஆத்மா) நாம் அறிந்து கொள்ளலாம். நாம் இப்போது, இந்த நடைமுறை வாழ்க்கையிலேயே சுய உணர்வினால் (Self Realization) ஏற்படும் நன்மைகளை அனுபவம் செய்வது நல்லதல்லவா? காரை ஓட்டுனர், தன்னை ஓட்டுனர் என்பதை மறந்து கார் என்று எண்ணுவது போன்று பொதுவாக மனிதர்கள் நாம் ஒரு உடல், என்னுள் ஆத்மா உள்ளது என எண்ணுகின்றனர், ஆனால் நான் ஆன்மா, இது எனது உடல் என்று எண்ணுவதே சரி! தான்தான் கார் என்று தவறாக உணர்வது எவ்வளவு பேதமை! நான் ஆண்; நான் ஒரு இந்தியன்; நான் ஒரு வெள்ளையன்; கிறிஸ்தவன்; செல்வந்தன்; முதியவன் என்று பலவாறு உடல் உணர்வு நம் வாழ்க்கையில் பிரதிபலித்து வருகிறது. உடல் உணர்வினால் ஏற்படும் குறுகிய நோக்கு, பல ஆசைகளுக்கு அஸ்திவாரம் ஆகிறது. இந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால், கோபம், பேராசை, காமம், தோன்றுகின்றன. அவை நிறைவேறிவிட்டால், லோபம் மற்றும் அகங்காரம் ஏற்படுகிறது. தன்னையும் பிறரையும் ஆத்மா என்று உணராமல், உடல் என உணருவதாலேயே துக்கம் ஏற்படுகிறது. மனிதன் தன் சுய தேவைகளை உடல் உணர்வுடன் ஸ்தூலத்தில் பூர்த்தி செய்ய முற்படும்போது கவலையும் துக்கமும் ஏற்படுகின்றன. உடல் ரீதியான உறவுகளை விரும்பும்போது, காமம் ஏற்படுகிறது. அதிகமான செல்வத்தைச் சேர்க்க முயலும்போது, அல்லது உயர்ந்த பதவி அந்தஸ்தை அடைய விரும்பும்போது லோபம் ஏற்படுகிறது. இவை அனைத்தையும் அடைந்துவிட்டால், அகங்காரம் ஏற்பட்டுவிடுகிறது. தன் தேவைகளை அடையாவிட்டால், கோபம் ஏற்படுகிறது. நாகப்பாம்பின் நெற்றியின் நடுவில் ஒரு வைரம் காணப்படும். நாமும் மற்றவர்களைக் காணும்போது அவர்களுடைய நெற்றியின் நடுவில் சூட்சுமமாக விளங்குகின்றன, ஆத்மா என்கிற ஒளிப்புள்ளியையே காணவேண்டும். உடலைப் பார்க்கக்கூடாது. அனைத்து ஆத்மாக்களும் பரமாத்மாவின் குழந்தைகள்; ஆகவே அனைவரும் நம் சகோதரர்கள் ஆவர். மேலும் நமது உண்மையான வீடு, பரந்தாமம். இங்கு நாம் விருந்தினராக, இந்த எல்லையற்ற நாடகத்தில், நம்முடைய பாகத்தை நடிப்பதற்காக வந்திருக்கிறோம். நான் என்பது உண்மையில் ஆத்மாதான். ஆத்மாவை ஆண்பால் என்றே குறிப்பிடுகிறோம். அது உடலோடு இணையும்போதுதான், ஆண், பெண் என பிரித்து குறிப்பிடப்படுகிறது. ஆத்மாவுக்கு சொந்த நாடு, மதம் ஏதும் கிடையாது. இவை யாவும் உடலையொட்டியே ஏற்படுகின்றன.

 

இந்த உடலை ஆட்டுவிக்கும் ஆத்மா ஒரு சூத்திரதாரி ஆகும். ஆத்மா நெற்றிப் புருவங்களுக்கு இடையில் இருக்கிறது. ஆத்ம உணர்வு என்றால், தன்னுடைய சுய தர்மத்தை (அமைதி, தூய்மை, சுகம்) உணர்வது என்பது பொருள். உடல் உணர்வில் இருக்கும்போது, ஆத்மா எந்த சிக்கலையும் ஒரு மலை போன்றதாகவும், ஆத்ம உணர்வில் இருக்கும்போது அதே சிக்கலை துரும்பாகவும் கருதுகிறது! பிரச்சனை ஒன்றுதான்.

ஆனால் அதுவே வெவ்வேறு பரிணாமத்தில் உணரப்படுகிறது ஒரு ஆச்சரியம் அல்லவா!

 

உடல் உணர்வு

நான் பந்தனத்தில் இருக்கிறேன்.

கேள்விகள் பல. ஆனால் விடைகள் சிலவே.

மரண பயம் உள்ளது

என்னுடைய கர்மேந்திரியங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

எளிதில் மனது உடைந்து போகிறேன்.

நான் ஒரு சிறகொடிந்த பறவை.

என் புத்தி மந்தமாக உள்ளது.

இந்த உலகத்தை மட்டுமே உணர்ந்துள்ளேன்.

எனது கடந்த காலத்தை, எதிர்காலத்தையும் அறியேன், மற்ற உடல்கள் என்னை வசீகரிக்கின்றன.

அனைவருக்கும் நான் துக்கம் தருகின்றேன்.

நான் என்னுடையது என்கிற உணர்வால் அகங்காரம் என்னிடத்தில் உள்ளது. களைப்புடன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறேன்.

 

ஆத்ம உணர்வு

நான் பந்தனத்தில் விடுதலை பெற்றுள்ளேன். இல்லை: அனைத்தையும் அறிந்துள்ளேன்.

நான் ஒரு அழிவற்ற ஆத்மா. ஆகவே மரணபயம் எனக்கு இல்லை.

அவை என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

புத்துணர்ச்சி ஆர்வம் இருக்கின்றன.

நான் உயர்ந்து, உடலைக் கடந்து பறக்கும் பறவை

புத்தி சுறுசுறுப்பாக உள்ளது இவ்வுலகைக் கடந்து பிற மூன்று உலகங்களையும் நான் அறிவேன் நான் முக்காலத்தையும் தெளிவாக உணர்ந்துள்ளேன்.

நான் இறைவன். பரமாத்மா ஒருவராலேயே வசீகரிக்கப் படுகின்றேன்.

நான் சுகத்தையே அளிக்கின்றேன்.

அனைவருக்கும் மரியாதை அளித்து வந்து. பணிவுடன் இருக்கின்றேன்.

புத்திணர்ச்சியுடனும் மன ஓய்வுடனும் இருக்கின்றேன்.


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏 

ஞானம் : இறைவனை அடைவதற்கான வழி - உணர்வு என்றால் என்ன? [ ஞானம் ] | Wisdom : The way to reach God - What is consciousness? in Tamil [ Wisdom ]