சூர்ய காந்தக் கல்லில் உருவான உலகின் மிகப்பெரிய பிள்ளையார்!

விநாயகர்

[ விநாயகர் ]

The world's largest child formed in Surya magnet stone! - Ganesha in Tamil

சூர்ய காந்தக் கல்லில் உருவான உலகின் மிகப்பெரிய பிள்ளையார்! | The world's largest child formed in Surya magnet stone!

கோவை புலியகுளத்தில் இருக்கும் பிள்ளையார்தான் உலகின் மிகப்பெரிய பிள்ளையார்.

சூர்ய காந்தக் கல்லில் உருவான உலகின் மிகப்பெரிய பிள்ளையார்!

 

கோவை புலியகுளத்தில் இருக்கும் பிள்ளையார்தான் உலகின் மிகப்பெரிய பிள்ளையார். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டுச் சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார் தான்!! கோவை புலியகுளத்தில் அருள்பாலித்து வரும் இந்த விநாயகர் சிலையின் உயரம் 16/% அடி, அகலம் 11/2 அடி. ஒரேகல்லில் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையாருக்கு 'தேவேந்திரப் பிள்ளையார்' என்று பெயர்!

 

சூர்ய காந்தக்கல்லில் சுமார் 180 டன் எடையுடன் இந்தச்சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. வலம்புரி விநாயகரான இவரது துதிக்கை வலமாகக் காணப்படுகிறது. சிவனைப் போலவே இவருக்கும் மூன்று கண்கள் உள்ளன. மூன்றாவது கண் நெற்றிக்கண்ணாக அமைந்துள்ளது!

 

இவரது வயிற்றைச் சுற்றி பெரிய பாம்பு ஒன்று காணப்படுகிறது. இதை 'நாக அணி' என்கிறார்கள். இது குண்டலினி சக்தியின் அடையாளம். மார்பில் முப்புரிநூல் உள்ளது. இந்தப் பிள்ளையார் சிலைக்குப் பின்னே ஒரு ஏணி இருக்கிறது. அதில் ஏறிச் சென்றுதான் அபிஷேகம் செய்கிறார்கள்! கோவை நகரத்தின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

விநாயகர் : சூர்ய காந்தக் கல்லில் உருவான உலகின் மிகப்பெரிய பிள்ளையார்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : The world's largest child formed in Surya magnet stone! - Ganesha in Tamil [ Ganesha ]