வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள்/ தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம். துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.
தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வழிபட வேண்டிய சில குறிப்பிட்ட தெய்வங்கள்
இந்த தெய்வங்களை உபாசித்தல் நலம் பயக்கும்.
வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின்
அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள்/
தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும்.
அதிலும் குறிப்பாக துணி வியாபாரம்
செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய
லட்சுமியை உபாசனை செய்வது நலம்.
துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும்
பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம்.
பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக
விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம்
பெறும்.
திருநெல்வேலியை பகுதியிலுள்ள இசக்கி அம்மன் என்னும் தெய்வம்
புளி வியாபாரிகளுக்கு உரிய தேவதையாக போற்றப்படுகிறாள்.
புளி மண்டி உரிமையாளர்களும் புளி உற்பத்தி தொழிலாளர்களும்
வணங்க வேண்டிய தேவதையே இசக்கி அம்மன் ஆவாள்.
பலரும் மனைவி, குழந்தைகளுக்காக அல்லும்
பகலும் உழைத்து தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும் தங்கள் குடும்பத்திற்காகவே
செலவிட்டு விடுவர்.
இத்தகையோரில் பலரும் கடைசி காலத்தில் ஆதரவற்ற நிலையில்
உண்ண உணவும், இருக்க இடமும்
கூட இல்லாமல் பரிதவிக்கும் நிலையில் வாட நேரிடும் போது இவர்களை அரவணைக்கும் தெய்வமே
இசக்கி அம்மன் ஆவாள்.
கடைசி காலத்தில் நிராதரவான நிலையில் உள்ள முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும்
வாய் திறந்து இசக்கி அம்மனை நோக்கி கதறி அழுதால் அவர்கள் எங்கிருந்து அழைத்தாலும் அவர்கள்
குறையை உரியவர்களை அனுப்பி குறை தீர்க்கும் தெய்வமே இசக்கி அம்மன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பத்தினி தெய்வங்களையும் பெண் தெய்வங்களையு வழிபட உகந்த
திதியே வளர்பிறை சப்தமி திதியாகும். வளர்பிறை சப்தமி திதியில் சக்தி வழிபாட்டை முடித்து
வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவ வழிபாட்டை நிறைவு செய்வதே குழஅழகு பைரவ வழிபாடு என்று வழங்கப்படுகிறது.
எனவே, வளர் பிறை சப்தமி திதியில்
பேச்சியம்மன்/இசக்கி அம்மன் பத்தினி தெய்வங்களின் பூஜையையும்,வளர் அஷ்டமி திதியில் பைரவரின் பூஜையையும் தொடர்ந்து நிறைவேற்றி
வந்தால் இதுவே பைரவ பூஜையாக மலர்ந்து பெறற்கரிய
அஷ்ட மங்கள ரிஷிகளின் அபூர்வ அனுகிரக சக்திகளைப் பெற்றுத் தரும் என்பது உண்மையே.
இந்த தலைப்புகளில் அம்மன் தெய்வம் அனைத்தையும் பற்றி விவரமாக பதிவிடப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வழிபட வேண்டிய சில குறிப்பிட்ட தெய்வங்கள் - தன விருத்திக்கு சக்தி வழிபாடே உகந்ததாகும் [ ] | Amman: History : There are certain deities to be worshiped for success in their business - Shakti worship is also suitable for his development in Tamil [ ]