எந்த ஒரு கதைக்கும் உரை (text), உள்ளடக்கம் (content) மற்றும் வாக்கியம் என்பது ஒரு உயிரோட்டம் போன்றது. இதை எப்படி அமைக்கிறோம் என்பதை பொறுத்தே படிப்போரின் கவனத்தை ஈர்க்க முடியும்.
கதைகள் சொல்லும் போது இருக்க வேண்டிய விசயங்கள்
அமைப்பு (Context):
எந்த ஒரு கதைக்கும் உரை (text), உள்ளடக்கம் (content)
மற்றும் வாக்கியம் என்பது ஒரு உயிரோட்டம் போன்றது. இதை எப்படி
அமைக்கிறோம் என்பதை பொறுத்தே படிப்போரின் கவனத்தை ஈர்க்க முடியும். சொல்லும்
கதைகளுக்கு உள்ளடக்கம், உரை மற்றும் வாக்கியம் நன்றாக அமைக்க
வேண்டும்.
கதைகள் கேட்போரின், படிப்போரின் கவனத்தை
இருப்பதாய் (grabs attention), உற்சாகத்தை உருவாக்கும்
விதத்தில் (generates excitement), சுவாரஸ்யமானதாகவும் (interesting),
கதையில் நம்பகத் தன்மை மற்றும் உண்மை தன்மை கொண்டதாய் (true story), தேவையான
பின்புலம் (necessary background) இருப்பதாய் அமைய வேண்டும்.
1.
எங்கே மற்றும் எப்பொழுது (where & when) : வாழ்க்கை பயணம், தொடக்கம், சம்பவம்,
வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி
போன்ற கதை சார்ந்த சம்பவங்கள் எங்கே மற்றும் எப்பொழுது நடந்தது என்பதை
குறிப்பிடவேண்டும்.
உதாரணத்திற்கு, 1882 ல் கோவையிலிருந்து
கையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி
அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின்
மதிப்பு ரூ.3700 கோடி ஆகும்.
2 . முக்கிய கதாபாத்திரம்
யார் (Who is the main character?): கதையின் முக்கிய
கதாபாத்திரம் யார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.
3.
What does the character want? கதையின் பாத்திரம் என்ன
சாதிக்க விரும்பினார், அவரின் குறிக்கோள், நோக்கம் (objective) என்ன என்பதை விளக்க வேண்டும். Facebook
நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்
“உலகம் முழுவதும் இணைக்கப்படவேண்டும் மற்றும் வெளிப்படையாக உருவாக்க
வேண்டும்” என்ற குறிக்கோள் வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்.
4. Who and what is getting in the
way? யார் மூலம் மற்றும்
என்ன தடைகள் (barriers), தடங்கல்கள் (obstacles) ,பின்னடைவுகள் (setbacks), தோல்விகள், போராட்டங்கள் (battle), பெற்ற வலிகள் (pain),
புறக்கணிப்புகள், சவால்கள் (challenge)
போன்றவைகள் இடம்பெற வேண்டும்.
சவால்களை எப்படி சமாளித்தோம், வெற்றி பெற என்ன
நடவடிக்கைகள் (action) எடுத்தோம் போன்றவற்றை கதைகளில்
தொகுக்க வேண்டும்.
முடிவு (Results)
கதையில் கதாபாத்திரத்தின் முடிவை குறிப்பிடவேண்டும்.
வெற்றி பெற்றார்களா அல்லது தோல்வியடைந்தார்களா, என்ன அடைந்தார்கள், எவற்றை
பெற்றார்கள். போன்ற ஹீரோவின் முடிவுகளை கொடுக்க வேண்டும்.
கதைகள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும்.
எளிதில் மற்றவர்கள் நினைவில் கொள்ளும்படியும் இருக்க வேண்டும்.
கதைகளை சொல்லும் போது மிகுந்த காதலுடன்
சொல்லவேண்டும். ரசித்து, ருசித்து கதைகளை கூற வேண்டும்.
ஊக்கத்தை தராத எவரின் கதையை நாம் மனதில்
நிறுத்தி கேட்ப தயாராக இருப்பதில்லை. எவரின் கதை நமக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும், ஒரு தூண்டுதல்களையும் அளிக்கிறதோ அவர்களின் கதைகளை கேட்க, படிக்க அனைவருக்கும் பிடிக்கும்.
அந்த கதைகள் ஏற்படுத்தும் ஊக்கம் நம்
மனதில் நீண்ட நாட்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் அந்த
வெற்றியாளரையும், அவரின் சாதனையையும் அவர் சார்ந்த துறையையும் நம்மால் மறக்க முடியாது.
இதேபோல் ஒரு தொழில் முனைவோரின் வாழ்க்கை கதை மற்றவர்களுக்கு ஊக்கத்தையையும்,
உத்வேகத்தையும், தூண்டுதல்களையும்
கொடுக்குமாறு படைக்க வேண்டும்.
• கதை
சொல்லுதல் (storytelling) நிச்சயம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் தங்களது
பிராண்ட் இமேஜ் (brand image) யும் உயர்த்தும்.
• வாடிக்கையாளர்களை பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதை ஒரு
பழக்கமாக மாற்றுங்கள்
• சில நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நாம் ஏன் தேர்தெடுத்து
வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்கி கொண்டிருப்போம். இத்தனைக்கும் அந்த
பிராண்டுகளின் தரம் அதிகமென்றும், விலை குறைவென்றும் சொல்ல முடியாது. அந்த நிறுவனப் பிராண்டுகளுக்கு
போட்டியாக வேறு நிறுவனப் பிராண்டுகளும் சந்தையில் உள்ளன. ஒருவேளை அந்த நிறுவனப்
பொருட்களின் விளம்பரத்தின் தாக்கமாக இருக்கலாம், கடையில்
எளிதாக கிடைப்பதாக இருக்கலாம், மற்றவர்கள் அந்த பொருட்களை
வாங்குவதால் நாமும் அதையே தேர்தெடுக்கலாம். இவை எல்லாவற்றிக்கும் மேலாக அந்த
நிறுவனங்கள் தங்களது பிராண்டை (Brand) வாங்குவதை நம்மிடம்
ஒரு பழக்கமாக (Habitual) மாற்றிவிட்டன.
• உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் சோப்பு, எண்ணை, பற்பசை பல வருடங்களாக ஒரே பிராண்டை பயன்படுத்துவோம். இந்த பிராண்டை
ஏன் உபயோகிக்கிறீர்கள் என்று யாரவது
கேட்டால் அந்த நேரத்தில் ஒரு பதிலை உருவாக்கி விடுவோம், தரம்
அதிகம், விலை மலிவு போன்றவை. இது நாம் வாங்குவதை
நிரூபிப்பதற்க்கான பதில்களாக இருக்கும். பல நேரங்களில் எதையும் யோசித்து அந்த
பிராண்டுகளை நாம் வாங்குவதில்லை, அதை வாங்குவதை நமக்கு
பழக்கமாகி (Habitual) விட்டன அதனால் வாங்கிகொண்டிருபோம்.
• இந்த மாதிரியான நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நமது ஆழ்மனதை
குறிவைத்து உருவாக்கப்பட்டவை, சந்தைபடுத்தப்பட்டவை. இந்த பிராண்டுகள் நமது ஆழ்மனதை ஆதிக்கம் செலுத்தி
நம்மை வாங்க வைக்கின்றன.
கவலையை கழற்றி வீசுங்கள்
இதேபோல் பல வருடமாக ஒரே கடையில் பொருட்களை
வாங்கி கொண்டிருப்போம், அதை மற்ற கடைகளையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து வாங்கிகொடிருப்பதில்லை.
ஏனென்றால் அந்த கடைகளில் வாங்குவது நமக்கு பழக்கமாக ஆகிவிட்டது. நம்மால் பழக்கத்தை
மாற்றுவது கடினம். பழக்கத்தை (Habitual) மாற்றுவதற்கு நமக்கு
மிக வழுவான காரணம் தேவைப்படும். அந்த வழுவான காரணம் நமக்கு கிடைக்கும் வரை அதே
கடைகளிலும், அதே பொருட்களையும்தான் வாங்கிகொண்டிருப்போம்.
வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதை ஒரு பழக்கமாக (Habit) மாற்றினால், அவர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதற்கு
பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார்கள்.
• வாடிக்கையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதை பழக்கமாக
மாற்றுங்கள்
• பொருட்களை வாங்குவதை பழக்கமாக மாற்றுவதற்கு தரம், விலை, சேவை, விளம்பரம், நம்பிக்கை,
நாணயம் போன்றவற்றை வாடிக்கையாளர்களின் ஆழ்மனத்தில்
புகுத்துங்கள்.
• ஒரு பிராண்ட் (Brand) வெற்றிபெற வேண்டுமானால் முதலில் அது அடிமனதில் உள்ள சிந்தனைகளோடு
ஒன்றிப்போக வேண்டும். பொருட்களின் பிராண்ட் பற்றிய ஆழ்மனப் பதிவுகள் அந்தப் பொருளை
நம்மை அறியாமலேயே வாங்க வைத்துவிடுகின்றன.
• தரம் உயர்ந்த, மலிவு விலை பிராண்ட்கள் சந்தையில் பல இருந்தும் அதை நாம் பயன்படுத்த
தயங்குவோம். ஏனென்றால் நாம் உபயோகிக்கும் பிராண்டிற்கு பழக்கப்பட்டுவிட்டோம்.
• விலை (Price), பொருள் (Product or Service), இடம் (Place), தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி (Promotion) போன்றவற்றை
4Ps மார்க்கெட்டிங் கலவை (Marketing mix) என்பார்கள். இந்த மார்க்கெட்டிங் கலவையை (Marketing mix) வாடிக்கையாளர்களின் ஆழ்மனதில் புகுத்தி பழக்கமாக (Habit) மாற்றினால் நாம் சந்தைபடுத்துதலில் வெற்றி பெறலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் : கதைகள் சொல்லும் போது இருக்க வேண்டிய விசயங்கள் - நடவடிக்கைகள், எளிமையாக இருத்தல், காதலுடன் சொல்லுதல், ஊக்கமளிக்க கூடியதாக இருத்தல் [ வணிகம் ] | Business: Digital Marketing : Things to consider when telling stories - Actions, being simple, speaking with love, being inspiring in Tamil [ Business ]