நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம்.
கோவில் பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை: 1. நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும்போது எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்றவை தரலாம். அபிஷேகம் முடிந்த பின் அருகம் புல், பூ சாத்திய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்து கொள்வது நமக்கு நன்மை கிடைக்க வழி செய்யும். 2. உற்சவருக்கு அபிஷேக நேரத்தில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் இவைகளைக் கொடுக்கலாம். பூஜை நடக்கின்றபோது "சொர்ண அபிஷேகம்'' செய்யும் போது நம்மிடம் உள்ள தங்க நகைகளைக் கொடுத்து உற்சவருக்கு சாத்தச் சொல்லி தீபாராதனை முடிந்த பின் நகை வாங்கி அணிவது மிகவும் நல்லது. 3. நந்தீஸ்வரருக்கு நைவேத்தியம் செய்யும்போது பச்சரிசியுடன் வெல்லம் கலந்து நந்திதேவருக்கு முன் வைத்து நைவேத்தியம் செய்து கொள்ள வேண்டும். 4. நந்திதேவருக்கு தீபாரதனை முடிந்த பின்பு மூலவருக்கு தீபராதனை நடைபெறும். அப்போது நந்தி தேவரின் பின் பக்கத்திலிருந்து இரண்டு கொம்புகளின் இடையில் தீபராதனை பார்த்தால் சகல தோஷமும், பாவமும் நீங்கும். 5. மூலவருக்கு தீபாராதனை முடிந்த பின்பு நந்தீஸ்வரர் காதில் யாரும் கேட்காதபடி தன்னுடைய குறைகளும் வேண்டுதலையும் அவரிடத்தில் கூற வேண்டும். இப்படி நந்தி காதில் 12 பிரதோஷ பூஜை அன்று கூறியதையே கூறிவந்தால் 13 வது பிரதோஷ பூஜை அன்று செல்லும் போது கூறிய விஷயம் நிறைவேறி விடும். 6. உற்சவருக்கு நைவேத்தியம், தீபராதனை இவைகள் முடிந்த பின் தான் நம்மிடமுள்ள பால், வெல்லம் கலந்த அரிசி, பஞ்சாமிர்தம் தர வேண்டும். இப்படித் தருவதும் அல்லது மற்றவர்கள் கொடுப்பதை வாங்கி உண்பதினால் நம்முடைய தோஷம், துன்பம், பாவம் நீங்க நன்மை பெறலாம். 7. உற்சவர் உள்வீதி உலா வரும்போது ஒவ்வொரு திசைகளிலும் தீபாராதனை செய்யும் போது இறைவனை வணங்கி அவருடைய திருநாமங்களையும் சிவபுராண பாடல்களையும் சொல்லிக் கொண்டோ அல்லது பாடிக் கொண்டோ வருவதன் மூலம் தோஷம் பாவம், கஷ்டம் நீங்கி நன்மை பெருகுவதுடன் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களும் ஏற்படும். 8. உற்சவர் உள்வீதி உலா முடிந்து நைவேத்தியம் செய்த பின்பு கோவிலின் உள் சென்று விடுவார். அப்போது நைவேத்தியம் செய்த சுண்டல், பொங்கல் கொடுக்கவும் அல்லது கொடுப்பதை வாங்கிச் சாப்பிடுவது நல்லது. அது மட்டுமில்லாமல் உற்சவருக்கு அர்ச் சனை செய்வது நன்மை தரும். 9. பிரதோஷ நாளன்று கூடிய வரை உபவாசம் இருந்து வர வேண்டும். அன்றைய தினம் தரிசனம் முடிந்த பின்னர் பால். பழம் மட்டும் அருந்தி வெறுந்தரையில் படுத்து உறங்கினால் பிரதோஷப் பலன் முழுமையாகக் கிடைக்கும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : கோவில் பிரதோஷ பூஜையில் செய்ய வேண்டியவை - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Things to Do in Temple Pradosha Pooja - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]