திருப்பத்தூர் - சிவகங்கை பாதையில் திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
திருக்கோஷ்டியூர்: ஸ்ரீ சௌமிய நாராயணர் கோயில்!
திருப்பத்தூர் - சிவகங்கை பாதையில்
திருப்பத்தூரிலிருந்து 9 கி.மீ
தொலைவில் இத்தலம் உள்ளது. இங்கு ஸ்ரீ சௌமிய நாராயணர், தாயார் திருமாமகளுடன் அருள் பாலிக்கின்றார்!.
ரொம்ப விசேஷமான கோயில் இது!.
திருமாலின் 108 திவ்யதேசங்களுள் ஒன்றான இத்தலத்தில், கருவறையில் பெருமாளுடன் ஸ்ரீதேவி பூதேவி, இந்திரன், நான் முகன், சரஸ்வதி, சாவித்திரி போன்றோருடன் தரிசனம் தருகின்ற
ஸ்ரீ சௌமிய நாராயணரைக் கண்குளிரக் கண்டு தரிசித்து மகிழலாம்!!. தேவ புஷ்கரணியும், மகாமக தீர்த்தமும் இத்தல தீர்த்தங்களாக
விளங்குகின்றன.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த
தலமிது!.
இங்கு மூலவரின் கருவறை மேல் உள்ள அஷ்டாங்க
விமானம் மிகப் பிரசித்திபெற்றது. அந்த விமானத்தில் ராமானுஜரை சிலை வடிவிலே நாம் தரிசிக்கலாம்!
தேவ சிற்பி விஸ்வகர்மாவும், அசுர
சிற்பி மயனும் சேர்ந்து இத்தல அஷ்டாங்க விமானத்தை அமைத்தனர்.
'ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும்
விதமாக இக்கோயில் விமானம் மூன்று தளங்களாக அமைத்துள்ளது வெகு அற்புதம் ஆகும்.
திருக்கோஷ்டியூர் திருத்தலத்தின் ஆலை
விமானத்தின் கீழ் தலத்தில் நர்த்தன கிருஷ்ணன் எனும் பூலோகப் பெருமாளையும் முதல் தளத்திலே
சயனத் திருவுருவில் சௌமிய தாரயணன் எனும் தேவலோகப் பெருமாளையும், மூன்றாம் தளத்தில் அமர்ந்த திருத்கோலத்தில்
பரமபதநாதன் எனும் வைகுண்ட பெருமாளையும் தரிசிக்கலாம்!
தேவர்களின் துன்பத்தை ஓட்டிய தலம் என்பதால்
இத்தலம் திருக்கோஷ்டியூர் என்றாயிற்று.
இங்கு விளக்கு நேர்த்திக் கடன் செய்கிறார்கள்.
ஒரு விளக்கை ஏற்றி, பெருமாளிடம்
வைத்து, அது எரித்து முடியும்வரை காத்திருந்து, பின் வீட்டிற்கு எடுத்துச் சென்று காசும், துளசியும் அதனுடன் சேர்த்து, சிறு பெட்டியில் மூடி பூஜை அறையில்
வைக்கின்றனர். அதில் பெருமாளும், தாயாரும்
உறைவதாக ஐதிகம். இதனால் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
திருமணத் தடை உள்ளவர்கள் நெய் தீபமேற்றி
அத்தடையை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். அஷ்டாங்க விமானத்தில் வட பாகத்தில் நரசிம்மமூர்த்தியும், அருகில் ராகு கேது இருவரும் இருக்கிறார்கள்.
இது அபூர்வ தரிசனமாகக் கருதப்படுகிறது!!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : திருக்கோஷ்டியூர்: ஸ்ரீ சௌமிய நாராயணர் கோயில்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Thirkoshtiyur: Sri Soumiya Narayan Temple! - Perumal in Tamil [ Perumal ]