பூக்களில் சிறந்த பூ என்ன பூ? அன்பு
முப்பது முக்கியமான கேள்விகளும் பதில்களும்
1.
பூக்களில் சிறந்த பூ என்ன பூ?
அன்பு
2. அன்பை யாரிடம் காட்ட வேண்டும்?
இயற்கை படைத்த மற்ற சீவராசிகளிடமும், நம்மை வாழவைக்கும் இயற்கையிடமும் காட்ட வேண்டும்.
3 அன்புக்கு மற்றொரு பெயர் உண்டு. அது என்ன?
அன்பே கடவுள்.
4. அன்பினால் உண்டாகும் வலையின் பெயர் என்ன?
அதுதான் பாசவலை இது ஆயுள்வரை மின்னி பிணைந்திருக்கும் வலை.
5. வாயிலிருந்து உதிரும் பூ என்ன பூ?
சிரிப்பு.
6.
சிரிப்பைபற்றி சொல்லுங்கள்?
சிரித்து வாழ்பவன் சிறப்பாக வாழ்வான். சிரித்தவன் கவலை இல்லாமல் வாழ்வான்.
7. முகத்துக்கு அழகு என்ன பூ?
புன் சிரிப்பு
8. பாசத்தை உருவாக்கும் பூ என்ன பூ?
பண்பு
9. எதைப் படிக்க வேண்டும்?
திருக்குறளை படிக்க வேண்டும்.
10. எதை கடைப்பிடிக்க வேண்டும்?
நல்ல ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
11. எவைகளை ஒழிக்க வேண்டும்?
தீய பழக்கங்களை ஒழிக்க வேண்டும்.
12. எதை வளர்க்க வேண்டும்?
நல்லவர்கள் நட்பை வளர்க்க வேண்டும்.
13. எதை வெறுக்க வேண்டும்?
தீயவர்கள் உறவை வெறுக்க வேண்டும்.
14. எதைப் பேச வேண்டும்?
உண்மையை பேச வேண்டும்.
15. உண்மை பேசுபவர்களின் இன்றைய நிலை என்ன?
உண்மைக்கு அழிவில்லை. உண்மை பேசுபவர்கள் தான் இன்று பல கஷ்டங்களை
அனுபவிக்கிறார்கள்.
15. எவைகளை கேட்க வேண்டும்?
நல்ல விஷயங்களை இரு காதுகளால் கேட்கவேண்டும்.
17. எவைகளை பார்க்க வேண்டும்?
நல்லவைகளை மட்டும் பார்க்க வேண்டும்.
18.
மனித வாழ்வின் தத்துவம் என்ன?
நல்லவராக வாழ வேண்டும்.
பிறரை நல்லவர்களாக மாற்ற வேண்டும்.
19. நம் வாழ்வில் தினமும் கடைபிடிக்க வேண்டிய
முக்கிய பணி என்ன?
உடலுக்கு நன்கு வேலை கொடுக்க வேண்டும். முடியாதவர்கள் யோகாசனம்
செய்ய வேண்டும். அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
20. சிறந்த உழைப்பாளி யார்?
விவசாயி தான் சிறந்த உழைப்பாளி. அவர்கள் உழைக்காவிட்டால் நாம்
உண்ணவும், உயிர் வாழவும்
முடியாது.
21. யார் உண்மையான மனிதன்?
உள்ளத்தில் இருப்பதை உதடுகளால் பேசுபவன் தான் உண்மையான மனிதன்.
22. இன்றை உலகில் மனிதர்கள் வாழ்கிறார்களா?
50 வருடங்களுக்கு முன் ஒரு அறிஞர் பகலில் விளக்கை வைத்துக் கொண்டு
மனிதனை தேடினாராம். அன்றே மனிதனை காணவில்லையாம். இன்று
காண முடியுமா?
23. யார் நம் முன்னோர்கள்?
வாயில்லா ஜீவன்கள் அனைத்தும் மனிதர்கள் பிறப்பதற்கு முன்னால் பிறந்தவைகள்.
ஆகவே வாயில்லா ஜீவன்கள் அனைத்தும் நம் முன்னோர்கள்
24. வாயில்லா ஜீவன்களிடம் நாம் அன்பு காட்டினால்
அவைகள் என்ன செய்யும்?
அவைகள் நன்றி மறவாமல் நம்மை மனதால் வணங்கும்.
25. பாவச்சுமைகள் எதனால் வருகிறது?
பிற உயிர்களை அடிமைப்படுத்துவதாலும், கொடுமைப்படுத்துவதாலும். கொன்று தின்பதாலும் தான்.
26. பாவச்சுமைகளை குறைக்க என்ன வழி?
வாயில்லா ஜீவன்களிடம் அன்பு காட்டுவதே சிறந்த வழி. இதைவிட சிறந்த வழி
உலகில் இல்லை.
27. யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்?
வாயில்லா ஜீவன்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். அடுத்த படியாக
மாட்டுப்பால் மாமிச வகைகளை தின்னாமல் வாழும் அன்பு உள்ளம் கொண்ட மனிதர்களுக்கு
தர்மமும் உதவியும் செய்யலாம்.
28. ஊனமான குழந்தைகள் பிறப்பது எதனால்?
உடலுக்கு தீமை தரும் பாவ உணவுகளால்.
29. முன்காலம் போல் அன்புமயமான உலகம் இனி
உருவாகுமா?
முதலில் வாயில்லா ஜீவன்களை நேசிச்சு வேண்டும். அவைகளை நேசித்தால்
அதன்பின் மனிதனாவாய். மனிதனானபின் உன் இனத்தை நேசிப்பாய். அதற்குப்பின் தான் அன்பு
உலகம் உருவாகும்.
30. மனித நேயம் அழிந்தது எப்போது?
மனிதன் ஆயுதங்களை கண்டுபிடித்த போது
சித்தா மருத்துவம் : முப்பது முக்கியமான கேள்விகளும் பதில்களும் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Thirty important questions and answers - Siddha medicine in Tamil [ Health ]