இரயில்வே நிலையம் உள்ள தலம்.
திரு அச்சிறுபாக்கம்: (தொண்டை நாடு) ● இரயில்வே நிலையம் உள்ள தலம். ● சென்னைக்குத் தெற்கே ஐம்பத்தொன்பது மைலில் உள்ளது. ● சிவபெருமான் முப்புரத்தை அழிக்கத் தேரேறிச் செல்லும்போது விநாயகரை நினைக்காத காரணத்தினால் தேரின் அச்சு முறிந்தது. அக்காரணத்தால் இந்தத்தலத்திற்கு அச்சிறுபாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. கண்ணுவரும் கௌதமரும் பூசித்த தலம். மூலத்தான இரு மூர்த்திகளுள் முக்கியமானவர் கோபுரவாயிலுக்குச் சற்று வடபுறத்தில் நந்தி, பலிபீடம், துவஜத்தம்பங்களோடு ஆட்சீசர் ஆக விளங்குகின்றார். சுவாமி:- பாக்கபுரேசுவரர், ஆட்சிகொண்டநாதர் அம்பிகை:- சுந்தர நாயகி. விருட்சம்: கொன்றை. தீர்த்தம் : தேவதீர்த்தம். அம்பிகைக்கு இளங்கிள்ளையம்மை என்ற பெயரும் உண்டு. வடமொழிப் பெயர்: பாலசுகாம்பிகை. கங்கையிலிருந்து வையையுடைப்பை அடைக்க மண் கொணர்கையில் பாண்டியனுடைய வண்டியின் அச்சு இங்கு முறிந்தது என்பர். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அச்சிறுபாக்கம் (தொண்டை நாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Achirubakkam (throat country) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]