சிவத்தலங்களுள் மேம்பட்டது. கோயிலும், சிவலிங்க மூர்த்தியும் பழைய பல்லவ சிற்ப முறையில் அமைந்துள்ளன.
திரு அதிகைவீரட்டம்: (நடுநாடு) பண்ணுருட்டி இரயில்வே நிலையத்திலிருந்து தென் கிழக்கில் ஒரு மைலில் உள்ளது. கெடில நதியின் வடகரையில் இருக்கிறது. சிவத்தலங்களுள் மேம்பட்டது. கோயிலும், சிவலிங்க மூர்த்தியும் பழைய பல்லவ சிற்ப முறையில் அமைந்துள்ளன. அப்பர் சுவாமிகள் மகேந்திர வர்மனால் துன்பத்துக்குள்ளாகிப் பிறகு அவன் இடித்த அமண் பாழிகளின் கற்களைக் கொண்டே கட்டிய குணப ரேசுவரம், வீரட்டேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் உள்ளது. 'நாவுக்கரசு' என்று அழைத்தவர் வீரட்டேசுவரரே. அப்பரும் திலகவதியாரும் சரியைத் தொண்டு செய்த தலம். சுந்தரருக்குச் சித்தவடமடத்தில் திருவடி தீக்ஷை நடந்தது. திருவதிகை எல்லைக்குள்ளேயே சித்தவடமடம் உள்ளது. கெடில நதியின் தென்கரை ஓரமாக ஒரு ஊற்று இடைவிடாது பெருகிக் கொண்டு பின் ஒரு வாய்க்காலாக ஓடுகிறது. ஷை தீர்த்தம் வெயிற் காலத்தில் குளிர்ந்தும், குளிர்காலத்தில் வெப்புற்றும் இருக்கிறது மிகவும் ஆச்சரியகரம். ஷை ஸ்தலவிமானம் பலதேவர்களும் கூடிய தேர்வடிவமாக அமைந்துள்ளது. கெடிலத்தின் தெற்கே மூன்று காதம் வரையில் சிவந்த பூமியாகவே இருக்கிறது. திரிபுரம் எரித்தமையால் இப்படியிருக்கிற தென்று நினைக்கிறார்கள். பல தலங்களிலுள்ள கல்வெட்டுக்களில் திருவிழாவிற்கு முன் திருவீதி ஆண்டார்கள் திருவதிகைக்கு ஒப்பாக வீதிகளைத் துப்புரவு செய்ய வேண்டு மென்றுள்ளது அப்பர் சுவாமிகளுடைய உழவாரத்தொண்டுக்குச் சான்று பகர்வதாகும். பாண்டி நாட்டுத் தலங்கள் பலவற்றுள் திருக்கொடி ஏற்றத்திற்கு முன்னாள் அப்பர் சுவாமிகள் திருவீதித் திருக்கண் சாத்தும் உற்சவம் நடக்கிறது. சுவாமி: வீரட்டேசுரர் அம்பிகை: திரிபுர சுந்தரி, பிரகந் நாயகி சந்நிதி: கிழக்கு தீர்த்தம்: கெடிலம் - தென்திசைக்கங்கை (திருநா.தே) மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பெயர்ப்பொருள்:
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அதிகைவீரட்டம்: (நடுநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Adhakaiweeratam: (Middle Country) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]