வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
திருத்தலங்கள் வரலாறு திரு அகத்தியான்பள்ளி: (சோழநாடு) வேதாரணியத்துக்குத் தெற்கில் ஒரு மைல் தொலைவில் உள்ளது இத்தலம். இரயில்வே நிலையம் உள்ள தலம். பார்வதி தேவியாருக்கு இமயமலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் இத்தலத்திலிருந்து தரிசித்தார். சுவாமி: அகத்தீசுவரர். அம்பிகை: பாகம்பிரியாள், பாகம்பிரியா நாயகி, சௌந்தரநாயகி. தீர்த்தம் : அக்னி தீர்த்தம் (கோயிலுக்கு எதிரில்). சுவாமி சந்நிதி: கிழக்கு. அம்பாள் சந்நிதி: தெற்கு. தலவிருட்சம் : அகத்தி. பிறசெய்திகள்: அகத்தியர் திருவுருவம் கோயிலில் உள்ளது. மிக அழகியது. இக்கோயிலிலுள்ள ஒரு சிலா சாசனத்திலிருந்து குலசேகர பாண்டியனுக்கு (கி. பி. 1268-1308) இருந்த வியாதி வேதாரணியம் கோயிலில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது வெளியாகிறது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அகத்தியான்பள்ளி: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Agathiyanpalli: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]