திரு ஆலங்காடு: (தொண்டைநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Alangadu: (Tondainadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு ஆலங்காடு: (தொண்டைநாடு) | Thiru Alangadu: (Tondainadu)

சென்னைக்கு மேற்கே 27 மைலிலுள்ள திருவாலங்காடு இரயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கே 3 - மைலில் உள்ளது.

திரு ஆலங்காடு: (தொண்டைநாடு)


சென்னைக்கு மேற்கே 27 மைலிலுள்ள திருவாலங்காடு இரயில்வே ஸ்டேஷனுக்கு வடகிழக்கே 3 - மைலில் உள்ளது.


செப்பேடுகளில் கங்கைகொண்ட சோழன் என்ற முதல் இராசேந்திரன், பழையனூர்க் கிராமத்தைத் திரு ஆலங் காடுடைய மகாதேவர்க்குத் தானமாகக் கொடுத்த செய்தி விவரிக்கப் பெற்றுள்ளது. தானச் செய்தியை ஊரார் அறியும் பொருட்டு, பிடி சூழ்ந்து படாகை நடப்பித்துப் பிரசுரம் செய்யப்பட்டது. பெண் யானையைக் கிராம எல்லை முழுமையையும் சுற்றிவரச் செய்து ஆங்காங்கு கள்ளியும் சூலக்கல்லும் நாட்டப்பட்டது. இவ்வூரில் 'தெங்கும் பனையும் ஈழவர் ஏறப்பெறாததாகவும்' என்ற குறிப்பினால், அக்காலத்தில் கோயில் மரங்களிலிருந்து கள் இறக்குதல் இல்லை என்று தெரிகிறது.

காளியோடு தாண்டவம் புரிந்த சிவபெருமான், அவள் சமமாக ஆடுவதைக் கண்டு அவளைத் தோற்கடிப்பதற்குக் கருதித்தமது இடது காலைத் தலையளவு உயர்த்தி ஊர்த்துவ தாண்டவம் புரிந்த அருமைத் தலம். ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி 8 கைகளுடைய கவர்ச்சிமிக்க திருவுருவத்தோடு விளங்குகிறார்.

காரைக்காலம்மையார் தலையாலே நடந்து வந்து 'இறைவா! நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க" என்று வேண்டிப் பெற்ற வரத்தால், பதஞ்சலி வியாக்கிர பாதர்களோடு அம்மையார் திருவுருவமும் நடராசர் சபையில் இருக்கிறது. அம்மையார் தலையால் நடந்துவந்த இந்தத் தலத்தைத் தம் காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் தங்கி, அன்று இரவு துயிலும்போது அவர் கனவில் வந்து ஆலங்காட்டப்பன் ''நம்மை மறந்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்தநாள் தலத்துக்குள் சென்று இறைவனைப் பதிகம்பாடி வணங்கினர்.

ஆலங்காட்டு நீலி வஞ்சனையால் உயிர்நீத்த வணிகனுக்கு உறுதியளித்த 70 வேளாளர்கள் உயிர்விட்டனர்.

இவ்விரண்டையும் சேர்த்துச் சம்பந்தர் கூறுகிறார். (1-ஆம் திரு). கூத்தப்பிரான் சபைகள் ஐந்தனுள் இது இரத்னசபை அல்லது மணிமன்று எனப்படும். பழையனூர் ஆலங்காட்டிற்கு 3/4 மைல் தொலைவிலுள்ளது. அங்கு, காரைக்காலம்மையார் கோயிலொன்றுண்டு. தேவார முதலிகள் மூவர்கட்கும் அம்மையார் முற்பட்டவராகையால் அவர் திருவாக்கு மூத்ததிருப்பதிகம் எனப்படுகிறது. அற்புதத் திருவந்தாதியோடு அம்மையார் திருவாக்கு முழுமையும் 11-ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி திருவீதிக்கு எழுந்தருளிப் பழையனூர்க்குச் சென்று பங்குனி உத்திருத்திலும் மார்கழித் திருவாதிரை அன்றுமாக ஆண்டுக்கிருமுறை முஞ்சிகேச முனிவர், கார்க்கோடக முனிவர் ஆகிய இருவருக்கும் காட்சியளிப்பார்.


இரத்தின சபை: ஊர்த்துவ தாண்டவம் காளியுடன் ஆடியது.


சுவாமி : தேவர்சிங்கப்பெருமான், அமிர்ததாண்டவேசுவரர், முஞ்சிகேசுவரர். 


அம்பிகை : வண்டார் குழலி.


தீர்த்தம் : முத்தி தீர்த்தம்.


விருட்சம் : பலா.


கணபதி : வல்லபகணபதி பத்துக்கரங்கள் வாய்ந்தவர். பிருங்கி முனிவர் ஆலயம், காளிகோயில் முதலியன தனித்தனியே உள்ளன. ஊருக்குக் கிழக்கே பழையனூர் உள்ளது.


கார்க்கோடகர், காரைக்காலம்மையார் இவர்களுக்குத் திருத்தாண்டவக்காட்சி அளித்து முத்தி கொடுத்த தலம்.


சபாநாயகர்: ஊர்த்துவ தாண்டவேசுவரர்.


தங்களுடைய வாக்குத் தவறி விட்டதே என்று 70 வேளாளர் முத்தியுற்ற தலம். இங்கு, தெற்கு வீதியில் காரைக்காலம்மையாருக்கு ஒரு மடம் உண்டு. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. மூவரும் பாடிய தலம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆலங்காடு: (தொண்டைநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Alangadu: (Tondainadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்