திரு ஆமாத்தூர்: (நடுநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Amathur: (Central) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு ஆமாத்தூர்: (நடுநாடு) | Thiru Amathur: (Central)

இத்தலம் விழுப்புரம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது.

திரு ஆமாத்தூர்: (நடுநாடு)


இத்தலம் விழுப்புரம் இரயில்வே நிலையத்திற்கு வடமேற்கில் நான்கு மைல் தொலைவில் உள்ளது. பம்பை என்னும் ஒரு சிற்றாற்றின் வடகரையில் இத்தலம் உள்ளது.


சுவாமி : அபிராமேசுவரர்; அழகியநாயனார். 

அம்பிகை : முத்தாம்பிகை

விருட்சம் : வன்னி. 

தீர்த்தம் : கம்பாநதி. 


இது சிவ சந்நிதிக்குச் சமீபத்தில் குறுக்கே ஓடுகின்றது. சந்நிதியில் அழகான படித்துறை உண்டு. சத்தியாநிர்த விவேசனி என்று ஒரு திருவட்டப் பாறையிருக்கிறது. இதனிடம் சென்று பிரமாணம் செய்வது அக்கால வழக்கம். காமதேனு பூசித்துக் கொம்பு பெற்ற இடம். இராமர் பூசித்தது. சுவாமி சந்நிதி கிழக்குமுகம். அம்பிகை சந்நிதி மேற்கு முகம். சந்நிதியின் அருகில் கம்பையாற்றின் படித்துறையுள்ளது; பசுக்களுக்குத் தாயகமான தலம். பிருங்கிமுனிவர் சக்தியின் சாபத்தால் வன்னி மரமாகி, பிறகு அவர் சக்தியைத் துதித்துச் சாபம் நீங்கப்பெற்றார். அம்பிகை கோயிலுக்குப் பெரிய கோபுரம். ஊரின் ஒரு புறத்தில் புலவர் புராணம் பாடிய தண்டபாணி சுவாமிகள் சமாதி இருக்கிறது. தலபுராணம் அச்சிடப் பெற்றுள்ளது.


இரட்டைப் புலவர்கள் திரு ஆமாத்தூர்க் கலம்பகம் பாடி இருக்கின்றார்கள். இத்தலம் இரட்டையர்களுக்கு முன்பு தொல்காப்பியத் தேவரால் பாடப்பெற்றுள்ளது என்பது தமிழ் நாவலர் சரித்திரத்தால் தெரிகின்றது.


இத்தலப் பாசுரங்கள் சிலவற்றில் இறைவன் அழகியரே என்று அழைக்கப்படுவதற்கேற்பக் கல்வெட்டுக்களிலும் அழகிய நாயனார் என்று பெயர் காணப்படுகிறது. வடமொழியில் அபிராமேசுவரர் என்று வழங்கப்படுகிறது.


இத்தலத்தில் தேவாரங்களைப் பண்ணோடு கற்றுச் சந்நிதியில் பாடும் பொருட்டுப் பல குருடர்களுக்கு ஆகாரம் முதலியன அளித்து வரும்படி ஒரு சோழன் ஏற்பாடு செய்திருந்தான் என்னும் செய்தி சிலாசாசனங்களால் அறியப்படுகிறது.


இத்தலத்தைப் பற்றிச் சம்பந்தர் இரண்டு பதிகங்களும் நாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆமாத்தூர்: (நடுநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Amathur: (Central) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்