பூந்தோட்டத்திலிருந்து ஒரு மைல். வைகாசி ஆயில்யம் சோமயாஜியாகம்.
திரு அம்பர் மாகாளம் : (சோழநாடு) பூந்தோட்டத்திலிருந்து ஒரு மைல். வைகாசி ஆயில்யம் சோமயாஜியாகம். இறைவன் புலையன் புலைச்சியாகத் தோன்றியது பெரிய புராணத்தில் கூறப்படவில்லை. "காளியேத்தும் அம்பர் மாகாளம்" என்றதால் காளி வழிபட்ட தலம் என்று தெரிகிறது. சுவாமி: மாகாளநாதர், காளகண்டேசுவரர் அம்பிகை: பயக்ஷய நாயகி தீர்த்தம்: மாகாள தீர்த்தம். விருட்சம்: மருதமரம். பாணலிங்கம். இலிங்கத்திற்கு எதிரில் அமிர்தபிந்து. சற்று வடக்கே நாகராஜனும் அவர் பூசித்த இலிங்கமும் அம்மையும் உள்ளன. சம்பந்தர் பாடிய தலம். காளி நான்கு கைகளுடன் பூஜிக்கும் கோலமுள்ள விக்கிரகம் உண்டு. "படியுளார்" என்னும் பதிகத்தில் ஆறாவதில் "நங்காளியேத்தும் அழகனார்" என்றது இதைத் தெரிவிக்கின்றது. கோச்செங்கட் சோழன் பூசித்த லிங்கம் வடக்குப் பிராகாரத்திலுள்ளது. இங்குச் சோமாசிமாற நாயனாருக்கு உற்சவம் நடக்கிறது. கிழக்கு மூக சந்நிதி. ஸோமயாஜிக்குக் காட்சிகொடுத்த நாயகர். பிரமபுரி என்றும் பெயர். விநாயகருக்குச் சமீபத்தில் சதுர்முக பிரம்மா இருக்கிறார். விருஷப லிங்கம். சந்நிதி: வாசுகிலிங்கம் வருணலிங்கம். சுவாமி ஆதிசக்தியால் பூசிக்கப்பெற்றவர். தீர்த்தம்: அமிர்தவாவி. வாசுகி லிங்கத்தின் சமீபத்தில் வாசுகியும் இருக்கிறாள். சண்டீசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்த வாசல். தெற்குப் பிராகாரத்தில் மகாகாள முனிவரும் காளியும் இருக்கின்றனர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அம்பர் மாகாளம் : (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Amber Makalam : (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]