பூந்தோட்டம் இரயில்வே நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைலில் உள்ளது.
திரு அம்பர்ப் பெருந்திருக்கோயில்: (சோழநாடு) பூந்தோட்டம் இரயில்வே நிலையத்திலிருந்து தென்கிழக்கே இரண்டு மைலில் உள்ளது. அம்பர் மாகாளத்துக்குக் கிழக்கே முக்கால் மைலில் உள்ளது. சோமாசி மாற நாயனார் வழிபட்ட தலம். சுவாமி: பிரமபுரீசர். அம்பிகை: பூங்குழலம்மை. தீர்த்தம்: பிரம தீர்த்தம். விருட்சம்: புன்னை. திரிசிரபுரம் மகாவித்துவான் பிள்ளையவர்கள் ஒரு புராணம் இயற்றியுள்ளார். அம்பிகையின் வடமொழிப் பெயர்: சுகந்த குந்தளாம்பிகை. ஒரு பஞ்சகாலத்திற் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தனென்னும் அரசனுக்கு நாள் தோறும் படிக்காசு அருளினமையால் இத்தல விநாயகருக்குப் படிக்காசுப்பிள்ளையார் என்னும் திருநாமம் அமைந்தது. இத்தலத்தில் உள்ளதீர்த்தம் அன்னமாம் பொய்கை. அன்னவடிவங்கொண்ட பிரமதேவர் உண்டாக் கிய தீர்த்தம் இது. சுவாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் கோச்செங்கட் சோழ நாயனாரால் கட்டப் பெற்றது என்பதும், அவ்வரசனாலேயே திருப்பணி செய்யப்பெற்ற பெருமை வாய்ந்தது என்பதும் இத்தலத்துத் தேவாரங்களால் விளங்கும். இந்தத்தலம் மிகவும் பழைமை வாய்ந்தது; திவாகரத்தில் ஒளவைபாடிய அம்பர்ச் சேந்தன் என்றதிற் கூறப்பட்டதும் "தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம் செம்பொற் சிலம்பே சிலம்பு' என்ற தனிப் பாடலிற் சொல்லப்பட்டதும் இத்தலமே யாகும். தஞ்சாவூர்க் கல்வெட்டுக்களில் அம்பர் என்ற ஊர் அடிக்கடி சொல்லப்படுகின்றது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அம்பர்ப் பெருந்திருக்கோயில்: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Amberb Perundrukoil: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]