ரிஷிகேசத்திலிருந்து பஸ் மூலமாகவும், கால்நடையாகவும் செல்லலாம்.
திரு அனேகதங்காவதம்: (கௌரிகுண்டம்) (வடநாடு) ரிஷிகேசத்திலிருந்து பஸ் மூலமாகவும், கால்நடையாகவும் செல்லலாம். கடல் மட்டத்துக்கு மேல் 12000 அடி உயரம். இத்தலத்திற்குச் செல்லும் வழியில் தேவப்பிரயாகையில் அலகநந்தா, மந்தாகினி நதிகள் கூடுகின்றன. தேவப்பிரயாகை என்பது கண்டங்கடி நகர் என்னும் பாடல்பெற்ற விஷ்ணுத் தலம். உமாதேவியார் தவம்புரிந்த இடமாகையால் கௌரி குண்டம் என்று பெயர். சம்பந்தர் காளத்தியிலிருந்து இத்தலத்தைப் பாடினார். சூரிய சந்திரர் பூசித்த தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். அனேகதர் - விநாயகர். சுவாமி : அருண்மன்னேசுவரர். அம்பிகை : மனோன்மணியம்மை மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அனேகதங்காவதம்: (கௌரிகுண்டம்) (வடநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Anegadangavatam: (Gaurigundam) (Northern India) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]