திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளுருக்கு எதிர்கரையில் இறங்கி உப்பங்கழி வழியே வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே (அம்பலம்) கோயிலுக்குப் போகலாம்.
திரு அஞ்சைக்களம்: (மலைநாடு) திருச்சூரிலிருந்து கொடுங்கோளூர் போகும் பஸ் ஏறிக் கொடுங்கோளுருக்கு எதிர்கரையில் இறங்கி உப்பங்கழி வழியே வஞ்சி (சிறுபடகு) அமர்த்தி நேரே (அம்பலம்) கோயிலுக்குப் போகலாம். கொடுங்கோளூர்சென்று சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி கோயில் என்று கருதப்படும் பகவதி கோயிலைத் தரிசித்து, பஸ் மூலம் அம்பலம் சேரலாம். நீராடி ஈரஉடையுடனாவது அல்லது பட்டுடையுடனாவது செல்ல வேண்டும். அஞ்சைக் களத்தப்பர் சில அங்குல உயரமே உள்ளார். தலைக்குத் தலைமாலை' என்னும் பாசுரம் கூறுவதைத் திருமேனியின் சிரசில் தரிசிக்கலாம். முதற்பிராகாரத்தில் ஒரு சிறு அறையில் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரரும் செப்புத்திரு மேனிகளாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆடிச்சுவாதியன்று தமிழ்மக்கள் திரளாகக் கூடுகின்றனர். இங்கிருந்து சுந்தரமூர்த்திநாயனார் வெள்ளானை மீது கயிலாயம் சென்றனர். சுவாமி பெயர் : அஞ்சைக்களத்தீசர், வஞ்சிக்குளேசுவரர். அம்பிகை: உமையம்மை. சந்நிதி: கிழக்கு. தீர்த்தம்: சிவகங்கை. சுந்தரர் பாடிய தலம். நடராசர் இத்தலத்தில் உண்டு. மற்ற இடங்களில் இல்லை. வஞ்சி: அஞ்சைக்களம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அஞ்சைக்களம் (மலைநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Anjaikalam (Hills) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]