திரு அண்ணாமலை: (நடுநாடு)

ஸ்தலபுராணம்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Annamalai: (Midland) - Sthala Purana in Tamil

திரு அண்ணாமலை: (நடுநாடு) | Thiru Annamalai: (Midland)

இரயில்வே நிலையம் உள்ள தலம். பஞ்சபூதத் தலங்களுள் தேயுதலம்.

திரு அண்ணாமலை: (நடுநாடு)


இரயில்வே நிலையம் உள்ள தலம். பஞ்சபூதத் தலங்களுள் தேயுதலம். விராட்புருடனின் மணிபூரகத்தலம். நினைக்க முத்தி அளிக்கும் நிர்மலத்தலம். மலை உயரம் கடல் மட்டத்திற்கு 2668 அடி. செந்நிறமுடையது. சோணை யென்னும் பெயருடையது. தட்டுப்புமுகால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்கும், அம்பிகைக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்தப்படாமல் சுவர்ணபந்தனம் செய்யப் பெற்றுள்ளது விசேடம். அருணகிரிநாதர் வழிபட்ட தலம். அவர் பாடலுக்கு இரங்கிப் பிரபுட தேவ மகாராசனுக்குக் காட்சி கொடுத்தார் முருகன். முருகன் சந்நிதி கீழைக் கோபுர வாயிலுக்கருகில் திருக்குளத்தின் வடபாலுள்ள 16 கால் மண்டபத்தில் ஒருகாலில் "கம்பத்திளையனார்'' கோயிலாக உள்ளது. அங்கிருந்து மேற்கே சென்று வல்லாள கோபுர வாயிலுள் நுழையும் போது வடபுறம் இருக்கும் முருகனே அருணகிரியாரை ஆட்கொண்டதாகத் தெரிகிறது.

மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய தலம். மலை எட்டுமைல் சுற்றளவு உள்ளது. இங்கு 360 தீர்த்தங்கள் உள்ளன. அணி அண்ணாமலை (அடியண்ணாமலை). பஞ்சமுக தரிசனம் என்னும் மலையின் 5 சிகரக்காட்சி முதலியன புகழ் பெற்றவை.


உற்சவம் கார்த்திகை மாதம் நடக்கும்.

நான்காம் நாள் - வெள்ளிக் கற்பக விருட்சம், காமதேனு.

ஐந்தாம் நாள் - வெள்ளி ரிஷபம். 

ஆறாம் நாள் - வெள்ளி ரதம் 

பத்தாம் நாள் - தீபதரிசனம்


பத்தாம் திருநாளன்று அதிகாலையில் பரணி தீப தரிசனம். அண்ணாமலையார் சந்நிதிக்கு எதிரில் ஐந்து பெரிய நெய்த் தீபங்கள் ஏற்றி, பஞ்ச பிரம மந்திரத்தோடு பூசை செய்யப்படும். மாலை பஞ்சமூர்த்திகளும் மலையை நோக்கிப் பிராகாரத்தில் நிற்க, ஆறு மணிக்கு ஐந்து பரணி தீபங்களையும் ஒரு பெரிய கொள்கலத்தில் சேர்ப்பர். மலைமீது தீபமும் ஏற்றப்படும். அர்த்தநாரீசுவரர் வெளிவரும் போது சுவாமி கோயிலைத்தாளிட்டு மறுநாட்காலையில் தான் திறப்பார்கள் மலையே சுவாமி ஆதலால். தைமாதம் திருவூடல் உற்சவம் நடைபெறும்.

மலைமேல் வடக்குத் திக்கில் முலைப்பால் தீர்த்தம். குகை நமச்சிவாயர் மடத்துக்குப் பக்கம் பாததீர்த்தம். துர்க்கையம்மன் கோயில் ஒன்று தனியே இருக்கின்றது. விருபாக்ஷிகுகை, பவளக்குன்றுக்கு வடக்கே துர்க்கை கோயில் உள்ளது. கட்கதீர்த்தம் துர்க்கை தபசு செய்த இடம். பவளக்குன்று முருகன் தலம். வடவீதியில் ஒரு தலம். தெற்குவீதி திருவூடல்வீதி. தக்ஷிணாயன உற்சவம் 10 நாள். அதன்முடிவில் திருவூடல் உத்தராயண உற்சவம் 10 நாள். தலவிருட்சம் மகிழ். பாண்டவதீர்த்தம் என்பதொன்று உண்டு. பத்தாம் நாள் கடைசி வேடுபறி. மட்டையடி தீபம் போடுகிறவர் மீனவர்.

அடி அண்ணாமலை அருணாசலத்தில் வாயு மூலையிலுள்ளது. அணி அண்ணாமலை திருவண்ணா மலையைச் சார்ந்ததொருதலம்.


சுவாமி: அருணாசலேசுவரர், அதிரும் கழலார். இந்த மூர்த்தியின் இடக்கை தொடையில் இருக்கும்

அம்பிகை: உண்ணாமலை உமை, அபீதகுசநாயகி.

தீர்த்தம்: திக்பாலகர் தீர்த்தம்.

நேர்வடக்கு ஆதி அருணாசலம்.


ஸ்தலபுராணம்: 

'அருணாசல புராணம்' என்ற புராணம் சைவ எல்லப்ப நாவலரால் பாடப்பெற்றது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அண்ணாமலை: (நடுநாடு) - ஸ்தலபுராணம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Annamalai: (Midland) - Sthala Purana in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்