திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Aroor Aramami: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு) | Thiru Aroor Aramami: (Chola Nadu)

இது ஆரூர்க் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் மேற்குச் சந்நிதி.

திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு)


இது ஆரூர்க் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் மேற்குச் சந்நிதி. தனிக்கோயில். இங்கு நமிநந்தி அடிகள் தொண்டு புரிந்து நீரால் விளக்கேற்றினார். 


சுவாமி: அரநெறி அப்பர், அகிலேசுரர். 


அம்பிகை: வண்டார்குழலி, அகிலேசுவரி. அசலேசுவரம் 


சந்நிதி: மேற்கு.


கல்வெட்டுக்கள்: கயமாணிக்க வளநாட்டைச் சேர்ந்த திருவாரூர், அதிராச வளநாட்டைச் சேர்ந்த திருவாரூர், க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துத் திருவாரூர். இராஜராஜன் ! பெரிய கோபுரத்தையும் சபாபதி மண்டபத்தையும் கட்டினான். செம்பியன் மாதேவியார் அரநெறிக் கோயிலைக் கற்கோயிலாகக் கட்டுவித்தாள். லக்கமதண்டம நாயக்க உடையாருக்கு நன்றாக அவன் மந்திரி ஒரு கோபுரம் கட்டினான். வீதிவிடங்கநாதர் கருப்பக் கிருகத்தையும்,வன்மீகநாதர் கோயிலையும் பொன் வேய்ந்தான். நம்பியாரூரர் தாயான இசைஞானியார் கௌதம கோத்திரத்தாரான ஞானசிவாசாரியாருடைய புத்திரி என்பது ஒரு கல்வெட்டால் தெரிகிறது.

தியாகராஜ சுவாமி கோயில் இரண்டாம் பிராகார வடசுவரில் மனுசரித நூல் முழுதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

திருநாவுக்கரசர் பாடிய தலம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆரூர் அரநெறி: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Aroor Aramami: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்