கோயில் வெண்ணி என்ற ஊரிலிருந்து ஐந்து மைலில் உள்ளது.
திரு அவளிவணல்லூர்: (சோழநாடு) கோயில் வெண்ணி என்ற ஊரிலிருந்து ஐந்து மைலில் உள்ளது. வராகாவதாரத்தில் சிவபெருமானால் கொம்பு முறியப் பெற்ற திருமால் பூசித்ததலம். காசியப முனிவர் பூசித்ததலம். பெயர்க்காரணம்:- குருக்களின் மூத்த பெண்ணை மணந்தபின் தீர்த்தயாத்திரைக்குச் சென்றிருந்த மருமகன் திரும்பிவந்தபோது தன் மனைவி குருடாயிருப்பதைக்கண்டு அவள் தங்கையையே தான் மணம் செய்து கொண்டேன் என்று சாதிக்க, சுவாமி அவள் இவள் என்று சாட்சி கூறி நிரூபித்தார். அவள் தீர்த்தத்தில் மூழ்க இழந்த கண்ணையும் பெற்றாள். இதற்கு மேற்குப் பூளைவனம் (இரும்பூளை) கிழக்குப் பாடலிவனம். சுப்பிரமணியர் தலம். இடபாரூடர் விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார். தைமாதம் அமாவாசை யில் சுவாமி தீர்த்தம் கொடுப்பர். சுவாமி: சாட்சி நாயகேசுவரர் அம்பிகை: சௌந்தரநாயகி தீர்த்தம்: சந்திரபுட்கரிணி சம்பந்தரும், அப்பரும் பாடிய தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அவளிவணல்லூர்: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Avalivanallur: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]