திரு அறையணி நல்லூர் (நடுநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Thiru Chamyani Nallur (Midland) - Correctional facilities - Spiritual Notes in Tamil

திரு அறையணி நல்லூர் (நடுநாடு) | Thiru Chamyani Nallur (Midland)

இவ்வூர் திருக்கோவலூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது.

திரு அறையணி நல்லூர் (நடுநாடு)


இவ்வூர் திருக்கோவலூர் இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலுள்ளது. 'அறகண்ட நல்லூர்' என்று வழங்கப்படுகிறது. இங்கே சம்பந்த சுவாமிகளுடைய திருப்பாதம் இருக்கிறது. இவ்வூரில் ஓரிடத்தில் வெட்டிய காலத்தில் சில உற்சவ விக்கிரகங்கள் கிடைத்தனவாம். 


சுவாமி பெயர் : ஒப்பில்லாத ஈசுவரர், ஒப்பில்லாத நயினார். 

அம்பிகை பெயர் : செளந்தரிய கனகாம்பிகை என்று வடமொழியிலும் அழகியபொன்னம்மை என்று தமிழிலும் வழங்கும். 

தீர்த்தம் : பீமதீர்த்தம்.


இங்கேயுள்ள சாசனத்தில் 'ஒப்பொருவரும் இலாத ஆளுடையார்' என்றபகுதி ஒன்று இருக்கிறது. 'பூமாது விளங்க'' எனத் தொடங்கும் சாசனம் ஒன்றும் வேறுபல சாசனங்களும் இருக்கின்றன. கோயிலுக்குப் பின்னே பெண்ணையாறு ஓடுகிறது. கோயில் குன்றின்மேல் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர் படுக்கை என்ற ஓரிடம் இருக்கிறது.

கற்பாறையில் குடையப்பெற்ற குகைக்கோயில் வேறொன்றுள்ளது. மலைமேல் வலம் வரும் போது ஓரிடத்தில் நின்று பார்த்தால் அண்ணாமலை நன்கு தெரியும். சம்பந்தர் இங்கிருந்தே "உண்ணாமுலை உமையாளொடும்'' எனத் தொடங்கும் பதிகம் பாடினார்.

மேற்குப் பார்த்த சந்நிதி. சுவரில் விநாயகர் உருவம் இருக்கிறது. அம்பிகைக்கு அரைமுடிசார்த்திப் பார்க்கும் இடம். 

சம்பந்தர் பாடல்பெற்ற தலம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு அறையணி நல்லூர் (நடுநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Chamyani Nallur (Midland) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்