இப்போது தேரழுந்தூர் என்று வழங்குகின்ற தாயினும் திருவழுந்தூரென்பதே இதன் இயற்பெயராகும்.
திருஅழுந்தூர் : (சோழநாடு) இப்போது தேரழுந்தூர் என்று வழங்குகின்ற தாயினும் திருவழுந்தூரென்பதே இதன் இயற்பெயராகும். இதற்குத் திருஞான சம்பந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகம் ஒன்றுண்டு. அதில் அழுந்தை என்று இதன் பெயர் சொல்லப் பெற்றுள்ளது. இவ்வூர்ச் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் வேதபுரீசர். சிவாலயத்தில் தனியே இருக்கும் மகா மடேசுவரர் என்ற மூர்த்தி தீர்த்தத்தின் அதிஷ்டான தெய்வமென்று பெரியவர்கள் சொல்லுவார்கள், 'அழுந்தை மாமறையோர் வழிபாடு செய் மாமட மன்னினையே" என்ற தேவாரப் பகுதியால் திருஞான சம்பந்தராற் பாடப்பெற்ற மூர்த்தி இந்த மகாமடேசுவரராகத் தான் இருக்க வேண்டும். இங்கே முற்காலத்தில் வேதகோஷம் நிரம்பியிருந்ததால் வேதபுரி என்ற பெயர் இவ்வூருக்கு அமைந்தது பொருத்தமாகும். சுவாமி : வேதபுரீசுவர் அம்பிகை : சௌந்தரநாயகி தீர்த்தம் : சித்தாமிர்தம் சந்நிதி : மேற்கு கோயிலுக்கு வடபால் ஸ்ரீமட தீர்த்தம் என்று ஒரு குளம் இருக்கிறது. இந்த லிங்கம்தான் ஆதியில் உள்ளதென்றும் சொல்லுகிறார்கள். கோயிலுக்கு வடபுறம் சிறிது தூரத்தில் கடகடம்பைக்குளம் என்று ஒன்றிருக்கிறது. படித் துறையின்றிக் குளம் வெட்டப்பட்டு உபயோகத்திலிருக்கிறது. மக்களெல்லோரும் கடகடம்பைக் குளம் என்கிறார்கள். அதற்கு மேற்பால் ஒரு சிவாலயம் இருந்த தாயும் ஜீரணமாய்ப் அதற்குக் கடம்பவனம் என்று பெயர் என்றும் போய்விட்ட படியால் அதிலிருந்த கடம்பவனேசுவரர் என்னும் லிங்கத்தைக் கோயிலில் கொண்டு வந்து வைத்து விட்டதாகக் கேள்வி என்றும் சொல்லுகிறார்கள். கோயிலிருந்த இடம் இப்பொழுது நன்செய் நிலமாக. இருக்கிறது. இருந்த அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. வேதபுரீசுவரர் கோயில் தெற்குப் பிராகாரத்தில் அம்பிகை இன்றி மூன்று லிங்கங்கள் மட்டும் உள்ளன. கடம்பவனேசுரர், ருத்ரபதீசர், கைலாசநாதர் என்று பெயர்கள் வழங்குகின்றன. கடம்பவனேசுவரர் போல மற்ற இரண்டு லிங்கங்களுக்கும் ஆலயமிருந்து ஜீரணமாய் விட்டதென்று தெரிகிறது. கடகடம்பையில் விசேஷ காலங்களில் வைதீகர்கள் கதம்பவன தீர்த்தமென்று சங்கற்பம் செய்து நீராடுவதாகத் தெரிகின்றது. ஒரே வீதியில் ஒரு முனையில் சிவத்தலமும், எதிர் முனையில் பாடல் பெற்ற விஷ்ணுத்தலமும் உள்ளன. ஊர்த்துவரதன் அரசன் தேர் இங்கே மேலே செல்லாது அழுந்தினமையின் தேரழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்று தெரிகிறது. இது மாடக்கோயில். வேதங்கள், தேவர்கள், திக்பாலகர்கள் பூசித்துப் பேறுபெற்ற தலம். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்ஊரின் பெயர்க் காரணம் :
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருஅழுந்தூர் : (சோழநாடு) - ஊரின் பெயர்க் காரணம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thirualundur : (Chola Nadu) - The name of the town is the reason in Tamil [ spirituality ]