இத்தலம் இரயில்வே நிலையத்தையுடையது. மூர்த்த தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது.
திருஆரூர் (சோழநாடு) இத்தலம் இரயில்வே நிலையத்தையுடையது. மூர்த்த தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்தது. மூர்த்தி - புற்றிடங்கொண்டார், திருமூலட்டானநாதர், கச்சி ஏகம்பத்தையும் இதையும் பிருதிவிஸ்தலமாகக் கருதுவர். சந்நிதிக்குத் தெற்கில் தனிச்சந்நிதியாயுள்ள தியாகராஜ ஸ்வாமி சந்நிதி மிகப் பிரபலம். திருவாரூர் என்பதில் ஆர் என்றது பிருதிவியைக் குறிக்கும். திருமால் இம்மூர்த்தியைத் தம் இதய ஸ்தானத்தில் வைத்துப் பூஜித்தார். மூச்சு இழுத்தல் விடுதல் காரணமாக ஏற்படும் அசைவே திருநடனம். ஏழுவிடங்கர்களுள் திருமால் பூசித்தது இவரையே. இந்த நடனம் அஜபா நடனம். பங்குனி உத்திரப் பெருவிழாவின் வசந்தன் உற்சவத்திலும் திருத்தேர் விழாவிலுமே சுவாமி தாம் இருக்கும் திருவோலக்க மண்டபத்தை விட்டு வெளியே வருகிறார். சுந்தரர் பரவை யார் திருமணம், சுந்தரருக்காகத் தூது சென்றது இங்கு நடந்தவை. திருமூலட்டானத்தின் பெயர்; பூங்கோயில். இத்தலம் சோழ மன்னர்கள் முடிசூட்டு விழாக் கொண்டாடிய ஐந்து நகரங்களுள் ஒன்று. மனுநீதிச் சோழனுடைய நகராக இருந்தது. இத்தலக் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் விக்கிரம சோழன் கல்வெட்டில் மனுநீதிச் சோழன் சரிதம் எழுதப்பட்டிருக்கிறது. "திக்கெலாம் நிறைந்த புகழ்த்திருவாரூர்" (ஆரூர்.6-ஆம் திரு.) பிறக்க முத்தி தரும் தலம். நமிநந்தி அடிகளுக்கு ஆரூரிற் பிறந்தார் எல்லோரையும் சிவகணங்களாக்கிக் காட்டினார். திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்" ஏயர்கோன் கலிக்காமர், காடவர் கோன், கழற்சிங்கர், செருத்து ணைவர், தண்டியடிகள், திருநீலகண்ட யாழ்ப் பாணர் வாழ்க்கைத் தொடர்பு கொண்ட ஊர். திருத்தொண்டத் தொகை தேவாசிரய மண்டபத்தில் நிகழ்ந்தது. சுந்தரர் வலக்கண் பெற்ற தலம். வானோர் பூசிக்கும் திருவாரூர் என்று கூறுகின்றார் அப்பர் சுவாமிகள். தீர்த்தம்: கமலாலயம். இக்குளத்து நீர்கொண்டு நமிநந்தி அடிகள் திருவிளக்கேற்றினர். பிறவிக்குருடரான தண்டியடிகள் இக்குளத்தின் மேற்குப்புறத்தை அகழ்ந்து விரிவாக்கும்போது தடை செய்த சமணர்களைக் குருடாக்கித் தாம் "நாட்டம் மிகுதண்டி" அடிகளாயினர். மாற்றுரைத்துக் காட்டிய விநாயகர். ருத்ரபாத தீர்த்தம்; உத்திரப் பெருவிழாவின் இறுதியில் சுவாமி தீர்த்தம் கொடுப்பர். ஏழு திருமுறைகளிலும் மிகுதியான பாடல்கள் இத்தலத்துக்கு உண்டு. மூவரும் பாடிய தலம். சுவாமி : வன்மீகநாதர். அம்பிகை : அல்லியங்கோதை. தீர்த்தம் : கமலாலயம். திருமுறைகளை வகுக்க உதவிய அபயகுல சேகர சோழரும் அநபாய சோழரும் ஆண்டபதி. விறன்மிண்டர், நமிநந்தி, செருத்துணை, தண்டி, கழற்சிங்கர் முதலியோர் முத்திபெற்ற தலம். சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையானது. அசபா நடனம், தியாகேசர் தலம். ஜைனர்கள் இருந்த இடம் மடப்புறம் இப்பொழுது வழங்குகின்றது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருஆரூர் (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiruarur (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]