திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஆறுமுகப் பெருமானின் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது
திருச்செந்தூர் முருகன்!
திருச்செந்தூரில் கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ ஆறுமுகப் பெருமானின் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள்
அதை நள்ளிரவில் திருடி, மரக்கலம்
மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக்
காற்று பலமாக வீசியதுடன் கடலும் கொந்தளித்தது. மரக்கலத்திலிருந்த முருகப்பெருமானின்
விக்கிரகத்தால்தான் அப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி
விட்டு சென்று விட்டனர். அக்காலத்தில் தென் பாண்டிய நாட்டை மதுரைநாயக்க மன்னர்களின்
பிரதிநிதியாக ஆண்டு வந்து வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர
பக்தர்! அவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டுத் துடி துடித்துப் போனார். அன்றிரவு
அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான், கடலில்தான் இருக்கும் இடத்தை அடையாளம்
காண்பித்தார்.
வடமலையப்பன் கடலுக்குச் சென்று அந்த
விக்கிரகத்தை மீட்டு வந்தார். இந்தச் சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்
பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பக்தர்கள் பார்க்கலாம்!!
திருச்செந்தூர் கடலில் குளித்து விட்டு
கடற்கரையோரம் உள்ள நாழிக் கிணற்றில் குளித்தால் தீராத நோயும் தீரும் என்கிறார்கள்.
ஏழு அடி ஆழம் கொண்ட இந்த நாழிக்கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.
சூரபத்மனை எதிர்த்துப் போரிட தன்னோடு வந்த படைவீரர்களின் தாகம் தணிப்பதற்காக முருகப்
பெருமான் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் தரப்படும் பன்னீர் இலை
விபூதி பிரசித்தி பெற்றது. நவக்கிரக தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாகும். குரு
பகவானின் அருள்பெறவும் பக்தர்கள் இங்கே வந்து செல்கிறார்கள்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : திருச்செந்தூர் முருகன்! - முருகன் [ முருகன் ] | Murugan : Thiruchendur Murugan! - Murugan in Tamil [ Murugan ]