திருப்பம் தருவார் திருத்தங்கல் முருகன்!

முருகன்

[ முருகன் ]

Thiruthangal Murugan will give a twist! - Murugan in Tamil

திருப்பம் தருவார் திருத்தங்கல் முருகன்! | Thiruthangal Murugan will give a twist!

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு முன்னதாக நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தங்கல் செல்வதற்கு மதுரை, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது.

திருப்பம் தருவார் திருத்தங்கல் முருகன்!

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு முன்னதாக நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தங்கல் செல்வதற்கு மதுரை, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி இருக்கிறது.

 

குழந்தை இல்லையே என ஏங்குவோர், திருமணத் தடை உள்ளவர்கள் விரதம் இருந்து திருத்தங்கல் பழனியாண்டவரை தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

 

பழனிக்குச் சென்று வேண்டினால் என்ன கிடைக்குமோ அந்தப் பலன், திருத்தங்கல் முருகனை வந்து பலன் வணங்கினாலும் கிடைக்கும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

 

தரை மட்டத்திலிருந்து இருநூறு அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் முருகன் கோவிலில் மட்டுமல்லாது, கருநெல்லி நாதசுவாமி ஆலயமும், நின்ற நாராயண பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்துள்ளன. ஒரே நேரத்தில் மூன்று கோயில்களைத் தரிசிக்கும் வசதி உள்ளது.

 

சித்திரை மாதப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

முருகன் : திருப்பம் தருவார் திருத்தங்கல் முருகன்! - முருகன் [ முருகன் ] | Murugan : Thiruthangal Murugan will give a twist! - Murugan in Tamil [ Murugan ]