பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
பெருங்குளத்திலிருந்து கிழக்கே 0.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால்
என்ற வாய்க்கால் கரை வரியாக மேற்கு நோக்கி 4 கி.மீ பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம்.
காட்டுக் கோயில் வீடுகளே கிடையாது. இருகோவில்களும் அருகருகே அமைந்துள்ளன.
இத்திருத்தலும் வடக்கு கோவில் எனப்படுகிறது. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை
கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன் கோயில் உள்ளது.
ஆத்ரேயசுப்ரபர் என்கிற ரிஷி ஆனவர் யாகம் செய்வதற்காக இந்த தலத்திற்கு
வந்து யாகம் செய்யும் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது பூமியில் புதையுண்ட மிக
ஒளிமயமான ஒரு வில்லையும், தராசையும் அவர் கண்டார். அவைகளை கையில் எடுத்த உடனே வில்லானது
ஆணாகவும், தராசு
ஆனது பெண்ணாகவும் மாறச் செய்தது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும்,
தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்தோம் என
கூறி பரமபத முக்தி அடைந்தனர். எனவே இத்தலம் ஆனது தொலைவில்லி மங்கலம் எனவும் பெயர் வந்தது.
சுப்ரபர் யாகத்தை வெகுவிமர்சையாக நடத்தி அதில் திரண்டு வந்த
பலனை அவிர்ப்பாகமா தேவர்களுக்கும் கொடுத்தார், அவிர்பாகம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவர்களும் சுப்ரருடன்
திருமாலை வேண்ட திருமால் அங்கு காட்சியளித்தார். அதனால் மூலவர் தேவர்பிரான் என
அழைக்கப்படுகின்றார். பூமிக்கு அதிபதியாகிய இந்திரனுக்கும்,
நீருக்கு அதிபதியான வருணனுக்கும், வாயு பகவானுக்கும் காட்சியளித்த இடம் இது.
மூலவர் – தேவர் பிரான் இருக்கின்ற திருக்கோலம் கிழக்கு திசை பார்த்த
திருமுக மண்டலம் ஆகும்.
தாயார் - உபதாயார்களுக்கு தனி சன்னதி இல்லை. தீர்த்தம் - வருண
தீர்த்தம் தாமிரபரணி நித். விமானம் - குமுத விமானம்.
பிரத்யட்சம் - இந்திரன் வாயு வருணன். ஆகமம் - வைகானஸம்.
தேவபிரான் சன்னதியில் யாகம் முடித்து சுப்ரபர் தினந்தோறும்
வடக்கு பக்கத்தில் இருந்த தடாகத்தி லிருந்து தாமரை மலர்களை கொய்து வந்த தேவபிரானை
வழிபட்டு வந்தார். தினந்தோறும் இத்தகைய அழகான மலர்களை எங்கே எடுத்து வருகின்றார் என்பதை
பார்க்கவே பெருமாள் சன்னதிக்கு வடக்கே
நின்று கொண்டு பார்த்தார். அந்த நேரத்தில் மலர்களுடன் வந்த சுப்ரபர் பெருமாளை
பார்த்து தன்னை பின் தொடர என்ன காரணம் என்று கேட்டபொழுது. உம்முடைய செந்தாமரை
புஷ்ப பூஜைக்கு மயங்கி இங்கே இருந்தோம். எனக்கும் தேவபிரானோடு சேர்ந்து அபிஷேகம்,
அர்ச்சனை செய்யுமாறு கூறினார். சுப்ரபர் பெருமாளின் வேண்டுகோளின்படி
பெருமாளை பிரதிஷ்டை செய்து இரு கோவில் களுக்கும் நாள் தவறாமல் பூஜை செய்து
வந்தார். தனக்கு தாமரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்பவர்களுடைய அனைத்து சகல
பாவங்களையும் போக்கி ஆசிர்வாதம் என்கிற அருள் தருவேன் என்றும் அவர் கூறினார். இந்த
பெருமாளை அஸ்வினி, தேவர்கள்
தங்களுக்கு அவிர்ப்பாகம் வைத்திய சாஸ்திரம் பின்பற்றாததாலும் பிரம்மிடம் வேண்டி,
பூமியில் முறையிட இப்பெருமாளை நோக்கி வழிபட்டு பெருமாளை
தாமரை மலரை கையில் கொண்டு காட்சியளித்து குறை நீக்கினார். அஸ்வினி,
தேவர்கள் மருத்துவத்தின் தலைவர்கள் கங்கை நதிக்கரையில்
வாழ்ந்த விபீதகள் என்றவன் இந்த தீர்த்தத்தில் நீராடி தனது குஷ்ட நோயை போக்கியதால்
அவன் நெடுங்காலம் இத்தலத்தில் தங்கி இரு பெருமாளுக்கு தொண்டு செய்ததாக வரலாறு.
மூலவர் - அரவிந்தலோசனன், வீற்றிருந்த திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.
உற்சவர் - செந்தாமரைக் கண்ணன். தாயார். கருத்தடங்கண்ணி. தீர்த்தம் -
வருணை தீர்த்தம் தாமிரபரணி
பிரத்யட்சம் - இந்திரன், வாயு, வருணன். ஆகமம் - வைகானஸம். சம்பிரதாயம் - தென்கலை. விமானம்
- குமுத விமானம்.
துவளில் மாமணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை, நீர் இனிஅன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடுமினோ
தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரை தடங்கண் என்றும்.
குவளை ஒண் மலர் கண்கள் நீர்மல்க நின்று நின்ரு குமுருமே
-
பாடல் 3271
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Thirutolaivilli Mangalam (Double Tirupati) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]