திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Thiruvaikundam (Sun) - Navathirupathi - Spiritual Notes in Tamil

திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி | Thiruvaikundam (Sun) - Navathirupathi

இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது.


திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி


இத்தலம் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது. பேருந்து வசதி, புகைவண்டி வசதியும் இருக்கிறது. 15.5.09 அன்று மகா சம்ப்ரோஷணம் (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

 

தல வரலாறு :

பிரம்மன் எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளையம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவன் வைத்திருந்த (சிருஷ்டி ரகசிய கிரந்தம்) படைப்பு தொழில் பற்றி கசிய ஏடுகளை ஒளித்து வைத்துக் கொண்டான். தன் நிலை வருந்திய பிரம்மா அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு விஷ்ணுவை குறித்து தவம் செய்ய எண்ணி தன் கையில் உள்ள பிரம்ம தண்டத்தை பெண்ணாக்கி தவம் செய்யும் இடத்தை அறிந்து வரச் சொல்ல அதுவும் தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைகள் நிறைந்த இடத்தை தேர்வு செய்து கூற பிரம்மன் அங்கு வந்து கடுத்தவம் செய்து திருமால் நேரில் அங்கு வந்து பிரம்மனை வாழ்த்தி இழந்த ரகசியத்தை மீட்டுக் கொடுத்தார். திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி கொடுத்த நின்ற திருக்கோளத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என வேண்ட அவரும் சம்மதித்தார். மூல விக்கிரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன கமண்டத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து கலசத்தை நதிக்கரையில் பிரதிஷ்டை செய்தல் தீர்த்தம் கலச தீர்த்தம் எனப்படுகிறது.

 

கால தூஷகன் என்னும் திருடன் ஒருவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வாளாம். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாகவும் தருவாள். இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால நூஷகள் வைகுண்ட நாதனிடம் சரண் அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட பெருமாளே காலதூஷகள் வேடத்தில் எதிரில் வர காலதூஷகனை அரசன் பார்த்த போது தன் சுயரூபத்தை காட்டியருள அடிபணிந்து நின்ற மன்னன் தன்னிடம் கொள்ளையடித்து செல்ல வேண்டிய காரணம் கேட்க தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபட செய்யவே நான் வந்தேன் என்றார். அரசனும் தளக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உட்சவ மூர்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடலானார்.

 

இக்கோவிலின் அமைப்பு முழுவதும் சில காலத்திற்கு முன் பூமியில் புதையுண்டு போனது பின்னர் மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியமன்னனின் பசுக்களை இங்கு ஒட்டி வந்து மேய்ப்பது வழக்கம். இதில் ஒரு பசு மட்டும் தனித்து பெருமாள் பூமியில் மறைந்து உள்ள இடத்தில் பால் சொறிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனை மேய்ப்பவன் மன்னனிடம் கூற மன்னன் தனது பரிவாரங்களுடன் அங்கே வந்து மணலை அகற்ற அங்கே வைகுண்ட பெருமாள் சன்னதியை கண்டு ஆனந்தித்து இப்பொழுதுள்ள கோவிலை அமைத்தார். இத்தலத்தில் பெருமாளை சூரிய ஒளி ஆண்டிற்கு இருமுறை சித்திரை 6, ஐப்பசி 6 ஆகிய நாட்களில் காலைக் கதிரவன் பெருமாளின் பாதத்தை தரிசித்து செல்கிறான். இதற்காக கொடி மரம் சற்று தெற்கே விலகி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோபுரம் சந்திர குல பாண்டியனால் கட்டப்பட்டது. வீரப்பன் நாயக்கர் காலத்தில் கொடி மரமும், சந்தான சபாபதி காலத்தில் மண்டபமும் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கலை அம்சம் உள்ள கோவில் இங்கு உள்ள உற்சவரனி திருமேனியை உருவாக்கிய சிற்பி இவர் அழகில் மயங்கி கன்னத்தில் கிள்ள சிற்பியன் ஆத்மாத்தமான அன்பின் அடையாளத்தை கன்னத்தில் வடுவாக ஏற்றுக் கொண்டார். இன்றும் இந்த வடுவை உற்சவரிடம் காணலாம்.

 

மூலவர் - வைகுந்தநாதன் - நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுக மண்டலம், (மூலவருடம் தாயர் கிடையாது)

உற்சவர் - கள்ளபிரான். தாயார் - வைகுண்டவல்லி, பூதேவி (தனி சன்னதி) தீர்த்தம் - பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி. விமானம் - சந்திரவிமானம்

பிரத்யட்சம் - பிருகு சக்கரவர்த்திக்கும், இந்திரனுக்கும் - ஆகமம்- பாஞ்சராத்ரம் - சம்பிரதாயம் - தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி, நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப, பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : திருவைகுண்டம் (சூரியன்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Thiruvaikundam (Sun) - Navathirupathi - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்