திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு

[ ஆன்மீக குறிப்புகள் ]

Thiruvarakunamangai (Nattam) (Moon) - Navathirupathi - Spiritual Notes, Head history in Tamil

திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி | Thiruvarakunamangai (Nattam) (Moon) - Navathirupathi

நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம்.

திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்)  - நவதிருப்பதி


நத்தம் என்ற பெயரே வழக்கில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் கிழக்கே வந்தால் இத்திருதலத்திற்க வரலாம். பேருந்து வசதி உள்ளது. குக்கிராமம். இப்பொழுது தேவபிரசன்னத்தில் கோவில் அருகிலேயே புஷ்கரணி இருப்பதாய் கண்டு புதைத்திருந்த புஷ்கரணியை தோண்டி சீர் செய்து உள்ளார்கள். 20.10.96 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தல வரலாறு :

முன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் 'வேதவி என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கைதான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் செய்து ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயசானர் என்னும் திருநாம் திருமாலுக்கு உண்டானது. பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் கட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதி சேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.

 

மூலவர் - விஜயாசனபெருமாள் - ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலம் கிழக்கு பார்த்த திருமுக மண்டலம்.

தாயார் - வரகுணவல்லித் தாயர், வரகுண மங்கைத் தாயர் (தனி சன்னதி இல்லை). தீர்த்தம் - அக்னி தீர்த்தம் தேவ புஷ்கரணி. விமானம் - விஜயகோடி

பிரத்யட்டசம் - அக்னி, ரோமேச முனிவர், சத்தியவான் முதலியவர்க்கு ஆகமம் - வைகானஸம். சம்பிரதாய் - தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி, நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப, பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

                                                       பாடல் 3571


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Thiruvarakunamangai (Nattam) (Moon) - Navathirupathi - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்