பசி எடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், நன்றாக சாப்பிட்டும் பசி எடுத்தால், இது உடலில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். அதற்கான காரணங்கள்.....
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்டிப்பாக இதை
செய்தாலே போதுமே!
பசி எடுப்பது
ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும், நன்றாக சாப்பிட்டும் பசி
எடுத்தால், இது உடலில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்தும்
அறிகுறியாகும். அதற்கான காரணங்கள்.....
1. போதிய
ஊட்டச்சத்துக்கள் இல்லாமை - உணவில் போதுமான அளவு நியூட்ரியன்ட்கள் இல்லையெனில்
உடலில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும். மீண்டும் சர்க்கரை அளவு
குறையும்போது அது பசியை தூண்டிவிடுகிறது.
2. பதப்படுத்தப்பட்ட
உணவுகளை உண்ணுதல் - பிராசஸ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை
உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும், இவை விரைவாக ஜீரணிக்கப்படுவதால், விரைவாகவே பசியைத்
தூண்டி, மீண்டும் சாப்பிடத்
தோன்றும்.
3. நார்ச்சத்து இல்லாமை
- பசியை கட்டுப்படுத்துவதிலும், மனநிறவை மேம்படுத்துவதிலும் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
நார்ச்சத்து இல்லாத உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தாது.
4. நீரிழப்பு - தினசரி
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் பசி உணர்வு அடிக்கடி ஏற்படும்.
5. தூக்கமின்மை -
தூக்கமின்மை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான கிரேலின் மற்றும் லெப்டின்
ஆகியவற்றின் சமநிலையை சீர்குலைக்கிறது. கிரேலின் பசியை தூண்டும் ஹார்மோன்.
லெப்டின் முழுமை உணர்வைக் கொடுக்கும் ஹார்மோன். தூக்கமின்மையால் கிரேலின் அளவு
அதிகரித்து,
லெப்டின் அளவு
குறையலாம்.
உங்கள் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள்
செய்வது மூலமாக, தேவையில்லாத பசி உணர்வை நீங்கள் தவிர்க்க முடியும். இது உங்கள் உடலை
ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.✍🏼🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கண்டிப்பாக இதை செய்தாலே போதுமே! - குறிப்புகள் [ ] | Health Tips : This is enough to keep the body healthy! - Tips in Tamil [ ]