மனநலம் நன்றாக இருப்பதற்கு நம் நாட்டில், நம் சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாகத் தேவைப்படும் வெள்ளையப்பன் என்கிற காசு, பணம், துட்டு, மணி மணி இல்லையேல் இங்கே மரியாதை எல்லாம் கிடைக்காது.
மனநலம் காக்க இந்த சாதாரண, ஆனால் பவர் புல் வழி
போதுமே!
மனநலம்
நன்றாக இருப்பதற்கு நம் நாட்டில், நம் சமுதாயத்தில் தற்பொழுது அதிகமாகத்
தேவைப்படும் வெள்ளையப்பன் என்கிற காசு, பணம், துட்டு, மணி மணி இல்லையேல் இங்கே
மரியாதை எல்லாம் கிடைக்காது. நம்முடைய சராசரி வாழ்க்கையை கூட வாழ முடியாது என்கிற
சூழ்நிலை தான் நிலவி வருகிறது. மேலும் பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம், கெத்தாக
வலம் வரலாம், சுக போகமாக வாழலாம், நாம் என்ன ஆசை படுகிறோமோ அதை அடைந்து மகிழ்ச்சியாக
வாழவும், இன்னும் பொதுநலக் குணம் உள்ளவர்களுக்கு கூட மற்றவர்களுக்கு உதவி புரிய
இந்த பணம் தேவைப்படுகிறது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம் தான். பணத்தின் முக்கியத்துவத்தை மற்றும் எப்படி
பணத்தை ஈர்க்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும் வரும்
கட்டுரைகளில் விரிவாகப் பார்க்கலாம். பணம் நம்மிடம் இருக்கும் போது ஒரு தைரியம்
வரும் பாருங்கள். அது தரும் தைரியத்தை உலகில் யாரும் கொடுத்து விட முடியாது. ஆனால்
பணத்தை விட பவர்புல் ஆயுதம் ஒன்று இருக்கிறது. அதற்க்கு ஈடு இணை எதுவும் கிடையாது.
அதுக்கு இணை அதுவே தான். எதுவென்று நீங்கள் நினைத்தது எனக்குத் தெரிகிறது.
உங்களையும் என்னையும், ஏன் நம் சமுதாயத்தில் இருக்கும் அனைவரையும் இன்று வரை
உயிர்ப்புடன் வைத்து இருப்பதே அது தான். அந்த அன்பு ஒன்றே தான். அன்பால் சாதிக்க
முடியாதது உலகில் எதுவுமே கிடையாது. பணத்தில் சாதிக்க முடியாத சிலவற்றை கூட அன்பு
சாதித்து விடும். நாம் அனைவரும் அப்பேற்பட்ட அன்பினால் தான் இன்று இணையத்தில் கூட
இணைந்து இருக்கிறோம். மனநலம்
நோயாளிகளையும் இந்த அன்பு ஆயுதத்தை கையில் எடுத்தால் அற்புதங்கள் நடக்கச் தான்
செய்யும். என்ன செய்யலாம் என்பதை
விரிவாகப் பார்க்கலாம். வாருங்கள்.
முதலில் மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணத்தை பார்க்க
வேண்டும். ஒருவேளை நாம் நினைத்த காரியம் நடக்காது போனாலும், நாம் நினைக்காத
செயல்கள் அதாவது தீயது நடந்தாலும் மனமானது இறுக்கப்பட்டு அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புகள்
உண்டு. இது வராமல் அல்லது குறைக்க நம் மனதால் மட்டுமே முடியும். அதற்கு உதாரணமாக, புத்தர்
அவருடைய சீடருக்கு உணர்த்திய கதையை சொல்கிறேன் கேளுங்கள். அவர் சீடரிடம் அந்தக்
குளத்தில் தண்ணீரை கையில் எடுத்து வருமாறு
கூறினார். சீடரும் எடுத்து வந்தார். அப்போது கலங்கிய நிலையில் இருந்தது. மீண்டும்
எடுத்து வரச் சொன்னார். இப்போது தெளிவாக இருந்தது. ஏன் என்று சீடரிடம் கேட்டார்.
அதற்கு அந்தச் சீடர் அந்த வழியில் குதிரை வேகமாக ஓடிச் சென்றது. அதனால் கலங்கியது.
என்று சீடர்க்கே புரியும் படி சொல்லி உணர்த்தி விட்டார். அது போல் கலங்கிய மனமும்
கொஞ்சம் சாந்தமாக, அதன் போக்கில் விட்டால், அதாவது அந்த மனதில் கவலைகளை மறுபடி
புகுத்தாமல் கொஞ்சம் ஆறப்போட்டால் மனம் அழுத்தம் வர வாய்ப்பில்லை. மாறாக நாம் என்ன
செய்கிறோம் என்றால் மேலும் மேலும் மனதை புண்படுத்தி, ரணப்படுத்தி, இன்னும் நடக்கவே
செய்யாத செயல்கள் எல்லாம் நடந்து விட்டால் என்று நமக்கு நாமே மனதில் நினைத்துக் கொண்டு
தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளை செய்து மனதைத் துவளச் செய்கிறோம். இதே மாதிரி தான்
ஒரு ஆசிரியர் மாணவர்களை புரிய வைக்க ஒரு சோதனை செய்து காண்பித்தார். என்னவென்றால்
ஒரு லேசான எடை கொண்ட ஒரு டம்ளரை கையில் வைத்து அனைவருக்கும் காண்பித்தார்.
மாணவர்களை நோக்கி ஒரு குறைந்த எடையுள்ள ஒண்ணுமே இல்லாத வெற்றிட டம்ளரை கொஞ்ச நேரம்
தூக்கினால் எதுவும் பாதிப்பு ஏற்படுத்தாது மனது அளவிலும், உடம்பு அளவிலும் கொஞ்சம்
கூட பாதிக்காது. அதே நேரத்தில் இதை ஒரு மணி நேரம், இன்னும் கூடுதலாக ஒரு நாள் முழுதும்
கையில் ஏந்தினால் நினைத்துப் பாருங்கள். முதலில் உடம்பையும், தொடர்ந்து மனதையும்
வலித்து மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புகள் அங்கே உண்டு. அதே மாதிரி தான்
இந்த மனதில் ஒண்ணுமே இல்லாத விசயத்தை பெரிய விஷயமாக்கி மனதையும் நாம் விஷமாக்கி
விடுகிறோம். நாளடைவில் அந்த விஷத்தின் வீரியம் அதிகமாய் வருவதற்கும் நாமே, நம்
மனமே காரணம். மேற்சொன்ன இந்த இரண்டு கதைகளிலும் விஷயம் என்னவென்றால், தீரமுடியாத
சில பிரச்சனைகளின் முடிவை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு கொஞ்சம் நீங்கள்
ஓய்வெடுக்க பழகி கொள்ளுங்கள். காலம் சரியான தீர்வை, ஏன் இன்னும் சொல்லப் போனால்
மிகை பெரிய அற்புதத்தையே நடத்தி விடும். அதற்க்கு தேவையான பொறுமையை நாம்
மேற்கொள்ளல் வேண்டும். பொறுமை தரும் கனிகள் என்றைக்குமே சுவைகள் அதிகம் தரும்
என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நடப்பவை எல்லாம் நல்லதுக்கே என்று கடந்து போக பழகிக்
கொள்ளுங்கள். நல்லதை மட்டுமே மனதில் நினையுங்கள். நல்லவர்களுடன் கூடி பேசி பழகி
வாருங்கள். பிறகுப் பாருங்கள் கடைசி நேரத்தில் கூட அற்புதங்கள் நடந்தக் கதையை
கேட்டு இருப்பீர்கள். உங்களுக்கும் அந்த அற்புதம் காத்து இருக்கிறது.
• முதலில் தினம் உடற்பயிற்சிகள் செய்து வர வர மனம்
அழுத்தம் குறைந்து மனமானது புத்துணர்ச்சி பெறும்.
• நிம்மதி என்பதை வெளியில் தேடாதீர்கள். அது
மனம் சார்ந்த உள்ளுக்குள் உள்ள விஷயம். அதுவும் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள்.
அந்த எண்ணங்களில் எப்போதும் நேர்மறையில் செலுத்தி, நான் மகிழ்ச்சியாகவே
இருக்கிறேன் என்று மனதில், அதுவும் ஆழ்மனதில்ஆழமாக பதியும் படி சொல்லிக்கொண்டே
வாருங்கள். நாளடைவில் உண்மையிலே நீங்கள் மகிழ்ச்சிக்கு சொந்தக்காரராகவே ஆகி
விடுவீர்கள்.
• அடுத்து கவலை. கவலைக்கு நாம் இடம் கொடுத்தால் அது
நம்மை கவலைக்கிடமாகவே மற்றிவிடும். சும்மா நீங்களே நினைத்துப் பாருங்கள். கவலை ஏன்
வருகிறது என்று மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நிம்மதியே இல்லை என்று சொல்வார்கள். நிம்மதி இல்லை என்பதே கவலையின்
வெளிப்பாடாகவே இருக்கும். சுற்றுமுத்தும் பார்த்தால் இந்தக் கவலை தான் ஆணிவேர்.
இன்னும் சிலர் நமக்கு கவலையே இல்லை என்று கூட கவலைப்படும் மனிதர்களை கூட
பார்க்கலாம். இதை நீங்கள் ஜோக்கிற்காக எடுத்துக் கொண்டாலும் சரி, இதை எதற்கு
சொல்கிறேன் என்றால் கவலை என்று ஒன்று இல்லை என்பதற்காகவே சொல்லப்பட்டது. கவலை
என்பது நாமாகவே ஏற்படுத்திய விஷயம். இப்போ நான் சொல்ல வருகிற விஷயம் புரிந்து
இருக்கும். சரி. இந்தக் கவலை என்கிற எண்ணத்தையே இல்லாமல் செய்வதற்கு என்ன செய்ய
வேண்டும். கவலைகளைச் சமாளிக்க மனதில் சவால்களை எதிர் கொள்ளும் திடமான மனதை முதலில்
தயார் படுத்த வேண்டும். கவலை என்பது ஒன்று தீர்க்கப்படும் கவலைகள், மற்றொன்று
தீர்க்கவே முடியாத கவலைகள். இது சவால்களை எதிர்கொள்ளும் வீரியத்தை மனதில்
கூட்டினாலே அந்த இரண்டு கவலைகளும் குறைந்து, ஏன் கவலைகள் இல்லமாலே பறந்து போக அதிக
வாய்ப்புகள் உண்டு. அந்த இறைவன் விரலுக்கேத்த வீக்கம் போல, உரலுகேத்த உலக்கை போல, தங்கக்கூடிய
மனதுக்கு ஏத்தார்போல தான் துன்பத்தை தங்களுக்குத் தாங்கும் வலிமைக்கு ஏற்றாற்போல கொடுப்பார்.
தாங்க முடியாத கவலை உங்களுக்கு வந்துவிட்டது போல நீங்கள் நினைத்தால் அந்தக் கவலைகளுக்கு
நீங்கள் சொந்தக்காரர்கள் இல்லை. அந்தக் கவலைகளை அந்தக் கடவுள் கிட்டயே கொடுத்து
விட்டு, நீங்கள் கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்க வாழப் பழகுங்கள். பிறகு
பாருங்கள் அந்தக் கடவுள் தாமதமே ஆனாலும் தரமானதாக உங்களுக்குத் தருவார்.
உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் உங்களுடைய எதிர்பார்ப்பும் குறைய வேண்டும்.
மாறாக இருப்பதை வைத்து சிறப்பாக வாழப் பழக வேண்டும். மேலும் தேவையற்றதை
வாங்கினால், தேவையானதை விற்க நேரிட வரும். அப்போது கவலையும் தானாகவே வரும்.
நிம்மதி, கவலை இரண்டும் நேர் எதிர் முனைகள். ஒன்றை அழித்தால் ஒன்று அதிக இடத்தைப்
பிடித்துக் கொள்ளும். கவனம் பத்திரம் என்று உங்கள் மனதுக்கு அடிக்கடி
சொல்லிக்கொண்டே வாருங்கள். அதையே பழக்க வழக்கமாகி வாருங்கள். நம் மன நிம்மதியை
கெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் முதலில் அந்தச் செயலுக்கே தீர்வைக்
கண்டுப்பிடிக்க வேண்டும். அதுவும் சாதாரணத் தீர்வு அல்ல. நிரந்தரமானத் தீர்வு. இதைத்
தெரிய உங்களுக்குத் திறன், அனுபவம் வந்தாலே கவலைக்கு Bye. bye. நிம்மதிக்கு Welcome
கொடுத்து விடலாம்.
• உங்களுக்கு நெருக்கமாக நேர்மறை எண்ணங்கள்
கொண்ட மனிதர்களேயே பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு எப்போதும், எங்கேயும்
எதிர் மறை எண்ணங்களே சொத்தாக வைத்து இருக்கும், பேச்சிலே என்னத்த செய்ய, என்னத்த வாங்கி,
என்னத்த பேசி, என்னத்த சொல்லி இப்படியே பேசிக் கொள்ளும் மனிதர்களை டாட்டா சொல்லி
அனுப்பி வைக்க தயங்காதீர்கள். நல்ல நண்பர்களோடு மனம் விட்டு பேசி வாருங்கள்.
• ஒரு பொழுதும் மனதை தளர விட்டு விடாதீர்கள்.
நம்முடைய சாலைகளில் மேடு, பள்ளங்களைப் போல இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் வரத்
தான் செய்யும். இதுவும் கடந்துப் போகும் எதுவும் கடந்து போகும் என்பதை மனதில்
வைத்து மனதை எப்போதும் தைரியமாக வைக்க பழகுங்கள். இந்தத் தைரியம் கொண்ட மனிதர்களே
உலகில் சாதிக்கப் பிறந்தவர்கள். வரலாற்றை படிப்பவர்களும் உண்டு. வரலாற்றில் இடம்
பதித்து தன் வரலாறை படிக்க வைப்பவர்களும் உண்டு. நமக்கு எந்த இடம் என்பது உங்கள் மனதின்
இடத்திலே தான் இருக்கிறது. மாறாக இன்பத்தில் துள்ளி குதித்து, வந்தப் பாதையே
மறந்து, வெற்றி மலையின் உச்சியில் நின்று அகந்தையுடன் கூச்சலிட்டால், ஒருவேளை
வழுக்கி விழுந்தால் அடியும் பலமாக இருக்கும். என்றுமே வந்த பாதை, பாதை தந்த
அனுபவங்களை மறக்கவே கூடாது. உயரப் பறக்கும் பறவைகள் கூட இரையைத் தேடி கீழே வரத்
தான் செய்ய வேண்டும். அது மாதிரி கீழே விழுந்தாலும், உடனே யாரும் பார்க்குறதுக்கு
முன்னாடி எழுந்து விட வேண்டும். அதுவே வாழ்க்கையில் வழுக்கி விழ நேர்ந்தால்
எல்லாரும் பார்க்குற மாதிரி எழுந்து நிற்க வேண்டும். நீங்கள் எழும் வேகத்தைப்
பார்த்தே உங்கள் எதிரி கூட போட்டிப் போட அல்ல. போட்டியை பற்றி நினைக்கவே மனதில்
பயம் வரச் செய்ய வேண்டும். மாறாக வழுக்கி விழும் போது, உங்களுக்குத் துன்பம்
வரும்போது துவன்று, வாழ்க்கையே முடிந்து விட்டது போல் சோர்ந்து விடாதீர்கள்.
அகந்தையும் இருத்தல் கூடாது. துவளுதலும் இருத்தல் கூடாது. இரண்டும் ஆபத்து.
கடப்பதை கடந்து, நடப்பதை நல்லவையாக நினைத்து, எதிர்ப்பதை எதிர்த்து வாழ்ந்து
வந்தாலே சாதிப்பதை சாதித்து வருவீர்கள்! எதுவும் நிரந்தரம் இல்லை என்று நினைத்தாலே
மனதானது பக்குவம் பட்டு விடும். அடுத்த வினாடி நமக்கு சொந்தம் இல்லை என்று
நினைத்தாலே நாம் அனைவரிடம் அன்புடன், பண்புடன், மனிதர்களை மனிதர்களாக மரியாதை
செய்யும் மனிதனாக உலகில் வலம் வருவோம். நம்மிடம் அன்பு, பாசம், காதல், மகிழ்ச்சி போன்ற
பூக்களாய் பூத்துக் குலுங்குவோம். அப்படி பூக்கள் பூப்பதைப் பார்த்து ரசிக்காத
மனிதர்கள் உண்டா? அனைவரும் ரசிப்பார்கள். நிம்மதி எங்கே இருந்து வருகிறது தெரியுமா?
கிடைக்காது கிடைக்கும் போதும், பத்து மாத வலிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளை
கையில் பெறும் போதும், கடன் வாங்கி படிக்க வைத்த பையன் வேலைக்குப் போய் சம்பளம்
கையில் கொடுக்கும் போதும், நடக்காத பையன் நடக்கும் போதும், பேசாத பையன் திடீர்னு
பேசும் போதும், தீராத நோய் தீரும்போதும், வாங்கவே முடியாத சொத்தை வாங்கும் போதும்,
சேராத நண்பர்கள் சேரும் போதும், பிரிந்த உறவுகள் சேரும் போதும் இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம். நிம்மதி மொத்தத்தில் நம்மிடம் தான் இருக்கிறது. அந்த
நிம்மதி சொத்தை எவரிடமும் கொடுத்து விடாதீர்கள். மாறாக அவர்களுக்கும் நிம்மதி கொடுங்கள்.
அன்பு செய்யுங்கள். அதை அளவில்லாமல் செய்யுங்கள். பிறரின் மனம் நலமாக இருப்பதும்
நம் மனதில் இருக்கிறது. நம் மனம் நலமாக இருப்பதற்கும் நாமே காரணம். மனநலம்
காப்போம். மனிதர்களை நேசிப்போம். வணக்கம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் மீண்டும்
நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆரோக்கிய குறிப்புகள் : மனநலம் காக்க இந்த சாதாரண, ஆனால் பவர் புல் வழி போதுமே! - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : This simple, yet powerful herbal way to maintain mental health Enough! - Health Tips in Tamil [ Health ]