அவன் ஒரு வேடுவன். வேட்டையாடுவது அவனது தொழில். ஒருநாள் விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான். வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு விலங்குகளைத் துரத்திச் சென்றான்.
புலியும் கரடியும்
அவன் ஒரு வேடுவன்.
வேட்டையாடுவது அவனது தொழில்.
ஒருநாள் விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான்.
வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு விலங்குகளைத் துரத்திச் சென்றான்.
திடீரென ஒரு புலி அவனைத் துரத்தியது.
அவன் பயந்து ஓடினான்.
அவனது வில் தவறிக் கீழே விழுந்துவிட்டது.
புலியை எதிர்க்கவும் வழியில்லை.
தப்பி ஓடவும் முடியவில்லை.
ஒரு மரத்திலே ஏறிக் கொண்டான்.
மரத்தின் அடிக்குப் புலி வந்தது.
புலி மரத்திலே இருந்த வேடுவனைப் பார்த்து உறுமியது. அவனுக்கு
மிகுந்த பயமாக இருந்தது.
புலி மரத்தடியில் நிற்கும்வரை இறங்க முடியாது.
"என்ன செய்யலாம்"
“எப்படித் தப்பலாம்” என்று யோசித்தான்.
அங்கும் இங்கும் பார்த்தான்.
தான் ஏறியிருந்த மரத்தின் மேலே இன்னொரு கிளையில் ஒரு கரடி
இருந்தது.
"புலிக்குப் பயந்து தப்பிக் கரடியிடம்
அகப்பட்டுவிட்டேனே" என்று பயந்தான்.
"ஒரு மிருகத்திடமிருந்து தப்ப நினைத்து இரண்டு
மிருகங்களிடம் அகப்பட்டுக் கொண்டேனே" என்று மிகவும் பயந்து நடுங்கினான்.
கரடியை உற்றுப் பார்த்தான்.
கரடி நித்திரை கொள்வது போலத் தெரிந்தது. கரடி தன்னைக் காணவில்லை என
நினைத்தான்.
சத்தமின்றி ஆடாமல் அசையாமல் இருந்தான்.
மரத்தின் மேற்கிளையில் இருந்த கரடியைப் புலி கண்டு விட்டது. புலி
கரடியைப் பார்த்து,
"மரத்திலே இருக்கிற அந்த மனிதனைப் பிடித்துக்
கிழே தள்ளிவிடு"
என்றது.
கரடியோ, 'முடியாது”
என்று மறுத்தது.
''நானும் நீயும் இந்தக் காட்டிலே ஒன்றாக
வசிக்கின்றோம்.
அதனால் அந்த மனிதனை விட எனக்குத்தான் நீ உதவ வேண்டும்" என்றது
புலி.
கரடியோ, “அது உண்மை
தான். ஆனால் இப்பொழுது இந்த மனிதன் எனது வீட்டுக்கு வந்திருக்கிறான். அதனால் அவனை
நான் காப்பாற்ற வேண்டும்" என்றது.
புலிக்கு பசிக்கத் தொடங்கி விட்டது.
கோபம் வந்தது.
அந்த இடத்தை விட்டுப் போகவும் விரும்பவில்லை.
மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
கரடி அமைதியாக நித்திரை செய்தது.
வேடனோ புலி எப்போது போகும் என்று காத்துப் புலியையே பார்த்துக்
கொண்டிருந்தான்.
புலி அண்ணாந்து வேடனைப் பார்த்து.
“அதோ பார்! கரடி நித்திரை செய்கிறது. நீ மெதுவாகச்
சென்று கரடியைக் கீழே தள்ளிவிடு. நான் உன்னை ஒன்றும் செய்யாமல் போய் விடுகிறேன்”
என்றது.
வேடன் யோசித்துப் பார்த்தான்.
தான் தப்புவதற்கு அதுதான் வழி என்று தீர்மானித்தான்.
மெதுவாக மேலே பார்த்தான்.
கரடி நன்றாக நித்திரை செய்து கொண்டிருந்தது.
நல்ல சந்தர்ப்பம் என்று மகிழ்ந்தான்.
மெல்ல மெல்ல சத்தமின்றி மேலே ஏறினான்.
கரடியின் பின்புறமாகக் கரடியை நெருங்கிச் சென்றான்.
மெதுவாகக் கையை நீட்டினான்.
கரடி விழித்து விட்டது.
பக்கத்துக் கிளைக்குத் தாவிப் பாய்ந்து தப்பித்துக் கொண்டது.
வேடனது உடல் பயத்தால் நடுங்கத் தொடங்கிவிட்டது.
கரடி இனியும் சும்மா இருக்காது.
தன்னைக் கடித்துக் கொன்று விடும் என்று பயந்தான்.
புலியையும் கரடியையும் மாறி மாறிப் பார்த்தான்.
புலி தன்னைக் கோபமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
கரடியும் தன்னை ஒருவிதமாகப் பார்ப்பதை உணர்ந்தான்.
புலி கரடியைப் பார்த்து,
“இந்த வேடன் உன்னைக் கீழே தள்ளிக் கொல்லப்
பார்த்தான். அப்படிப்பட்டவனை நீ கீழே தள்ளிவிட்டால். என்ன.இனியாவது அவனைக் கீழே
தள்ளிவிடு. அவனுக்கு இரக்கங் காட்டாதே" என்றது.
வேடன் மிகுந்த பயத்தோடு இருந்தான்.
கரடி நிச்சயமாகத் தன்னைக் கீழே தள்ளிவிடும்.
"கோபத்தோடும் பசியோடும் காத்திருக்கும்
புலியின் வாயில் அகப்பட வேண்டி வந்து விட்டதே" என்று நினைத்துப் பயந்து
நடுங்கினான்.
கரடி புலியைப் பார்த்துச் சொன்னது:
“வேடன் என்னைக் கீழே தள்ளிவிட முயன்றான் என்பதற்காக
நான் அவனைக் கீழே தள்ளிவிட முடியாது.
அவன் நல்லவனா? கெட்டவனா?
என்பதல்ல பிரச்சினை. அவன் எனது இருப்பிடத்துக்கு வந்து அடைக்கலம்
தேடியவன். அவனைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை."
வேடன் தான் செய்ய நினைத்த செயலுக்காக வெட்கப்பட்டான்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
சிந்தனை சிறு கதைகள் : புலியும் கரடியும் - குறிப்புகள் [ ] | Thought short stories : Tiger and Bear - Tips in Tamil [ ]